காகிதங்களை கிழித்து வீசிய எம்.பி.,க்கள்; பார்லி.யில் நேற்றும் அமளி

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது வாரத்தின் முதல்நாளிலும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூச்சல், குழப்பம், காகிதங்கள் கிழிப்பு, மொபைல் போனில் படம் பிடிப்பு என, கடும் அமளியில் ஈடுபட்டனர். பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19ல் துவங்கியது. போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை முன் வைத்துஇ எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு சபைகளிலும் அமளியில் ஈடுபட்டு
காகிதங்கள், கிழித்து வீசிய எம்.பி.,க்கள்  பார்லிமென்ட், அமளி

மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது வாரத்தின் முதல்நாளிலும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூச்சல், குழப்பம், காகிதங்கள் கிழிப்பு, மொபைல் போனில் படம் பிடிப்பு என, கடும் அமளியில் ஈடுபட்டனர்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19ல் துவங்கியது. போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை முன் வைத்துஇ எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு சபைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நடப்பு கூட்டத் தொடரின் மூன்றா வது வாரத்தின் முதல் நாளான நேற்று ராஜ்யசபா கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி கோஷமிட்டனர்; சபையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது சபைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது:போஸ்டர்களை துாக்கியபடி வந்து நிற்கும் எம்.பி.,க்களின் பெயர்கள் சபையில் அறிவிக்கப்பட்டு, உரிய தண்டனை வழங்கப்படும்.அமளியை கைவிட்டு சபையை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கினால், விவாதங்களை நடத்த அனுமதி கிடைக்கும். சபையில் ஒழுங்கும், அமைதியும் அவசியம்.
ஒத்திவைப்புஅதுபோன்ற சூழல் அமைந்தால், அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அனுமதி வழங்க தயார்.இவ்வாறு அவர் கூறினார். ஆனாலும் அமளி தொடரவே, சபை உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியதும் அமளி தொடர்ந்தது. அதை மீறி, துணை
தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் சபையை நடத்த முயற்சித்தார். கேள்வி நேரத்தை சில நிமிடங்களுக்கு மேல் தொடர முடியாமல் அமளி நீடித்ததால் வேறு வழியின்றி சபை ஒத்திவைக்கப் பட்டது. மீண்டும் சபை கூடியதும், உள்நாட்டு நீர்வழி கப்பல் போக்குவரத்து மசோதா மீதான விவாதம் நடந்து, பெரும் அமளிக்கிடையே நிறைவேறியது.இறுதியாக, மசோதா நிறைவேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காகிதங்களை கிழித்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பறக்கவிட்டனர். மேலும் சில எம்.பி.,க்கள் இந்த அமளியை மொபைல் போனில் படம் பிடித்தனர்.
மசோதா மீது பேசுவதாக கூறி வாய்ப்பு கேட்ட இரண்டு எம்.பி.,க்கள் அமளி குறித்து பேசியதால் அவர்களது பேச்சு சபைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. அமளி தீவிரமாகவே, சபை ஒத்திவைக்கப்பட்டது.


லோக்சபாவிலும் அமளிலோக்சபாவில் கேள்வி நேரத்தை துவக்கிய சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது:கடந்த இரண்டு வாரங்களாகவே பெரும் இடையூறுகள் சபைக்குள் அரங்கேறி வருகின்றன. இந்த சபையில் உருப்படியான விவாதங்கள் நடக்க வேண்டும்.
அதற்காகத்தான் கோடிக்கணக்கான பணம் செலவழிக்கப்பட்டு கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, சபை அலுவல்கள் சுமுகமாக நடக்க எம்.பி.,க்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தீர்ப்பாய சீரமைப்பு மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து கூச்சல், குழப்பம் அதிகமானதால் சபை ஒத்திவைக்கப்பட்டது.மதியத்துக்கு மேல் கூடியபோது சில நிமிடங்களுக்கு அலுவல்கள் நீடித்த நிலையில், லோக்சபா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை சிந்துவுக்கு லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலுமே பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.


இன்சூரன்ஸ் மசோதா நிறைவேறியதுநடப்பு 2021 - 2022 நிதியாண்டுக் கான பட்ஜெட் தாக்கலின்போது, 'இரண்டு பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஒரு பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் என நான்கு பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன.பொது இன்சூரன்ஸ் சட்டத்தின்படி பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசின் பங்கு, குறைந்தபட்சம், 51 சதவீதம் இருக்க வேண்டும். தனியார் மயமாக்கும் வகையில், இந்த சட்டப் பிரிவு நீக்கப்படுகிறது. இதற்காக பொது இன்சூரன்ஸ் ட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா, லோக்சபாவில் நேற்றுநிறைவேறியது. - நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
03-ஆக-202120:03:11 IST Report Abuse
Mohan கிழித்தெறிந்தவர்களையே சுத்தம் செய்ய வையுங்க.
Rate this:
Cancel
03-ஆக-202115:40:22 IST Report Abuse
ராஜா ஆதாரம் இல்லாத ஒன்றுக்காக நாடாளுமன்றத்தை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எதையும் செய்யத்தயங்காத இதுபோன்ற கழிசடைகளை இதற்கு மேல் கண்டிப்பாக ஒட்டுகேட்கத்தான் வேண்டும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-ஆக-202112:41:03 IST Report Abuse
Kasimani Baskaran அமளி செய்பவர்களை ஒரு வருடத்துக்கு தகுதி நீக்கம் செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X