வட கிழக்கு எல்லையில் பதற்றம் : பிரதமருடன் எம்.பி.,க்கள் பேச்சு

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : அசாம் - மிசோரம் இடையிலான எல்லைப் பிரச்னை தொடர்பாக, வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி.,க்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினர்.வட கிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மிசோரமில் சோரம் தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த இரு மாநிலங்களுக்கு இடையே எல்லையை
வட கிழக்கு எல்லை, பதற்றம் பிரதமர், எம்.பி.,க்கள் பேச்சு

புதுடில்லி : அசாம் - மிசோரம் இடையிலான எல்லைப் பிரச்னை தொடர்பாக, வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி.,க்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து
பேசினர்.
வட கிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மிசோரமில் சோரம் தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த இரு மாநிலங்களுக்கு இடையே எல்லையை பகிர்ந்து கொள்வதில் பிரச்னை எழுந்தது. அசாமுக்கு சொந்தமான நிலப்பரப்பை, மிசோரம் அத்துமீறி ஆக்கிரமித்து இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இரு மாநில போலீசார் இடையே எல்லையில் மோதல் வெடித்தது. இதில் அசாமை சேர்ந்த ஐந்து போலீசார் உட்பட ஆறு பேர் பலியாகினர்.இந்த சம்பவம், பிரச்னையை தீவிரமாக்கியது. இருமாநில தலைமை செயலர்கள், டி.ஜி.பி.,க்களை அழைத்து, மத்திய உள்துறை செயலர் சமீபத்தில் பேச்சு நடத்தினார். இந்நிலையில் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி.,க்கள், 16 பேர் பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் நேற்று சந்தித்து பேசினர். எல்லை நிலவரம் குறித்து விரிவாக விவரித்தனர்.

இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:வட கிழக்கு மாநிலங்கள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை; அந்த மாநிலங்களை அரசியல் கண்ணோட்டத்துடன் நான் பார்ப்பதில்லை என, பிரதமர் மோடி தெரிவித்தார்.இந்த விவகாரத்தில் வன்முறையை துாண்டும் விதமான கருத்துக்கள், பொய்யான உள்ளடக்கங்களை பரப்பி, நாட்டின் அமைதியை குலைக்க, வெளிநாட்டு சக்திகள் திட்டமிடுகின்றன. அவர்களின் கனவு பலிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே அசாம் போலீசாருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக மிசோ தேசிய முன்னணி எம்.பி., வன்லால்வெனா கருத்து தெரிவித்து இருந்தார்.இவர் மீது அசாம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்பினர். இந்நிலையில் அவருக்கு எதிரான வழக்கை திரும்ப பெறும்படி, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, போலீசாருக்கு நேற்று உத்தரவிட்டார்.

இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: எல்லை பிரச்னைக்கு அமைதியான வழியில் தீர்வு காண முயற்சிப்பதாக மிசோரம் முதல்வர் தெரிவித்துள்ளார்.அவரது முயற்சியை பாராட்டி, நல்லெண்ண அடிப்படையில் மிசோ தேசிய முன்னணி எம்.பி., மீதான வழக்கை வாபஸ் பெற உத்தரவிட்டுள்ளேன். ஆனாலும், எல்லையில் துப்பாக்கி சூட்டுக்கு காரணமான மிசோராமைச் சேர்ந்த ஆறு அரசு அதிகாரிகள் மீதான விசாரணை தொடர்ந்து நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஆக-202118:10:01 IST Report Abuse
Pugazh V இது பாஜகவின் செயல் தான். எல்லையில் பிரச்சினை களை அவர்கள் மட்டுமே உருவாக்குவார்கள். புல்வாமா காலத்தில் இருந்து பார்க்கிறோமே. அதுவும் எங்கே யாவது தேர்தல் என்றால் உடனே எல்லைப் பிரச்சினை உருவாக்க பாஜக டீம் செயலில் இறங்கி விடும்.
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
03-ஆக-202109:42:32 IST Report Abuse
Sandru இவரு இதுக்கு சரிப்பட்டு வர மாட்டாரு
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
03-ஆக-202109:14:54 IST Report Abuse
rajan கூட்டணி கட்சியை கவிழ்ப்பதற்காக (பிஜேபி மட்டுமே ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக - பிஹாரில் நடந்தது போல ) மோடி அரசு செய்யும் வேலை தான் இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X