கிருஷ்ணா நதி நீர் பங்கீடு விவகாரம்: தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி : ''கிருஷ்ணா நதி நீர் பங்கீடு தொடர்பான பிரச்னையை ஆந்திரா - தெலுங்கானா அரசுகள் மத்தியஸ்தம் வாயிலாக தீர்த்துக் கொள்ள வேண்டும்.''இல்லையெனில் வழக்கு விசாரணையில் இருந்து நான் விலக நேரிடும்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டார். ஆந்திராவில் இருந்து தனி மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின், இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் கிருஷ்ணா
கிருஷ்ணா, நதிநீர் பங்கீடு,   தலைமை நீதிபதி, அதிரடி, உத்தரவு

புதுடில்லி : ''கிருஷ்ணா நதி நீர் பங்கீடு தொடர்பான பிரச்னையை ஆந்திரா - தெலுங்கானா அரசுகள் மத்தியஸ்தம் வாயிலாக தீர்த்துக் கொள்ள வேண்டும்.''இல்லையெனில் வழக்கு விசாரணையில் இருந்து நான் விலக நேரிடும்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டார்.

ஆந்திராவில் இருந்து தனி மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின், இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டில் பிரச்னை எழுந்தது. கிருஷ்ணா நதியின் குறுக்கே, ஆறு அணைகள் உள்ளன.இந்த அணைகளில் இருந்து, 512 டி.எம்.சி., தண்ணீர் ஆந்திராவுக்கும், 299 டி.எம்.சி., தெலுங்கானாவும் பங்கிட்டு கொள்ள தற்காலிக ஒப்பந்தம் போடப்பட்டது.


latest tamil news




மின் உற்பத்திக்காக ஸ்ரீசைலம் அணையில் இருந்து தெலுங்கானா அதிக தண்ணீரை எடுத்துக் கொள்வதாக ஆந்திர அரசு குற்றம்சாட்டியது.இதையடுத்து ஸ்ரீசைலம், நாகார்ஜுன சாகர், புலிசிந்தலா அணைகளை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் எடுக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு இன்று (ஆக.02) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தர விட்டதாவது:இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாக விசாரிக்க விரும்பவில்லை. கிருஷ்ணா நதி நீர் விவகாரத்தை இரு மாநில அரசும் மத்தியஸ்தம் வாயிலாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு உதவ தயாராக இருக்கிறோம்.இல்லையெனில் இந்த வழக்கு விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டி இருக்கும். ஏனென்றால், நான் இரண்டு மாநிலங்களையும் சேர்ந்தவன்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-202112:34:29 IST Report Abuse
ஆரூர் ரங் மாநிலத்தைப் பிரித்து வம்பில்😒 மாட்டிவிட்டது சோனியா காங்கிரசின் செயல். அவர்களே தீர்வு செல்லட்டும்
Rate this:
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
03-ஆக-202111:27:58 IST Report Abuse
K.Muthuraj கொங்கு தமிழ் நாடு பிரிந்தால் மீதி தமிழ் நாட்டுக்கு இதே கதைதான்.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
03-ஆக-202111:17:29 IST Report Abuse
Rengaraj இங்கு மத்தியஸ்தம் எதற்கு? தண்ணீர் அனைவருக்கும் பொது அல்லவா? ஒரு நதி ஒரு மாநிலத்தில் ஆரம்பித்து அந்த மாநிலத்திலேயே கடலில் கலப்பதாக இருந்தால் மாநில அதிகாரம் செல்லும் எனலாம் அணைத்து மாவட்டங்களும் அந்த தண்ணீருக்கு தார்மீக உரிமை கொள்ளலாம். வெவ்வேறு மாநிலங்கள் அதில் சம்பந்தப்பட்டதாக இருக்கும் பட்சத்தில் அது தேசிய பிரச்சினை என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். அந்த அந்த மாநிலங்கள் எந்த அடிப்படையில் உரிமை கொண்டாட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும். பார பட்சம் பார்க்காமல் அந்த தண்ணீருக்கு பிரச்சினை இல்லாமல் தீர்க்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்குத்தான் இருக்கிறது. மதிய அரசு என்னதான் சட்டம் இயற்றினாலும் அதில் ஏதாவது ஓட்டை கண்டு ஓட்டுக்காக ஒட்டு வங்கிக்காக விதி மீறல்கள் செய்வதை மாநில அரசுகள் தங்கள் உரிமை என்ற கோணத்தில் அணுகி நிறைவேற்ற பாடுபடும். உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பிலிருந்து விலக கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X