கிராமசபை கூட்டம்: கோவை கலெக்டரிடம் கமல் மனு

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோவை :'கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும்' என்று வலியுறுத்தி, கோவை கலெக்டரிடம் நடிகர் கமல் மனு கொடுத்தார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல் நேற்று கோவை கலெக்டர் சமீரனை சந்தித்து மனு கொடுத்தார்.மனு விவரம்:ஆக., 15ல் கோவை மாவட்டத்தில் கிராமசபைகூட்டங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.ஏழு நாட்களுக்கு முன் கிராமசபை கூட்டத்துக்கு அழைப்பு தர வேண்டும்.கிராம
கிராமசபை கூட்டம்,கோவை கலெக்டர்,  கமல் மனு

கோவை :'கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும்' என்று வலியுறுத்தி, கோவை கலெக்டரிடம் நடிகர் கமல் மனு கொடுத்தார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல் நேற்று கோவை கலெக்டர் சமீரனை சந்தித்து மனு கொடுத்தார்.

மனு விவரம்:ஆக., 15ல் கோவை மாவட்டத்தில் கிராமசபைகூட்டங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.ஏழு நாட்களுக்கு முன் கிராமசபை கூட்டத்துக்கு அழைப்பு தர வேண்டும்.கிராம ஊராட்சி வரவு செலவு அறிக்கை, வங்கி கணக்கு புத்தகங்கள், தணிக்கை அறிக்கை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.மக்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் முறையாக தீர்மானங்களாக பதிவு செய்யப்பட வேண்டும். கிராமசபை முடிவுற்றபின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

கிராம சபை கூட்டத்தை வீடியோ, புகைப்படம்எடுத்து ஆவணப்படுத்த வேண்டும்.கிராமசபை கூட்டம்,அனைத்து குக்கிராமங்களிலும் நடத்தப்படுவதைஉறுதி செய்வதற்காக, சுழற்சி முறையில் நடத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கமல் தெரிவித்துள்ளார்.


நிதி ஒதுக்கணும்!



செய்தியாளர்களிடம் பேசிய கமல், ''2020 ஜனவரிக்கு பிறகு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்பது எங்கள் குறை. அதை கலெக்டரிடம் சொல்ல வந்தோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அடுத்த கிராமசபை விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கிராம சபைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பதை பட்ஜெட்டில் அரசு அறிவிக்க வேண்டும். கூட்டம் கூடாது என்பதால் தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தவில்லை,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
03-ஆக-202112:55:15 IST Report Abuse
raja ஏன் சென்னையில கிராமங்கள் இல்லையா... அங்கும் நடத்த சொல்லி மனு கொடுக்க வேண்டியது தானே .....ஓஹோ அது ஏற்கனவே திமுக கோட்டை... உங்களுக்கு கொடுக்க பட்ட அசைன்மெண்டு அதிமுக கோட்டை கோவையை திமுக கோட்டையாக மாற்ற சொல்லி தானே... அதுக்கு தானே பொட்டி வாங்கினீங்க....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-ஆக-202112:42:26 IST Report Abuse
Kasimani Baskaran நோய் பரப்ப அனுமதி கேட்பது கேவலம்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
03-ஆக-202109:55:30 IST Report Abuse
அசோக்ராஜ் மருவாதியா ஏன்ச்சு நின்னு கலைக்டர் மனு வாங்குறாரு பாரு. விண்டேஜ்னா சும்மாவா? ரெஸ்பேட்டு ... ரெஸ்பேட்டு ... இது அதிகாரத்தால் அல்ல. மிரட்டலால் அல்ல. திரையுலக சாதனைக்கு அங்கீகாரம். ரசிகனின் அன்பு எதிரொலிப்பு. ஆனா ஓட்டு கிடைக்காதுப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X