பொது செய்தி

இந்தியா

கொரோனா 3வது அலை அக்டோபரில் உச்சம்!

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (23+ 7)
Share
Advertisement
புதுடில்லி: 'கொரோனா மூன்றாவது அலை இந்த மாதம் துவங்கி, வரும் அக்டோபரில் உச்சத்தை எட்டும். தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது' என, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகம் முழுதும் கடந்த 20 மாதங்களாக கொரோனா தொற்று ஆட்டிப் படைத்து வருகிறது. நம் நாட்டில்
கொரோனா 3வது அலை  அக்டோபர்,  உச்சம்!

புதுடில்லி: 'கொரோனா மூன்றாவது அலை இந்த மாதம் துவங்கி, வரும் அக்டோபரில் உச்சத்தை எட்டும். தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது' என, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகம் முழுதும் கடந்த 20 மாதங்களாக கொரோனா தொற்று ஆட்டிப் படைத்து வருகிறது. நம் நாட்டில் கொரோனா முதல் அலை கடந்தாண்டு மார்ச்சில் துவங்கி, அக்., வரை அதிகமாக இருந்தது. இதன்பின் படிப்படியாக குறையத் துவங்கியது. இதனால், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் காட்டினர். இதன் விளைவாக, இந்தாண்டு மார்ச்சில் இரண்டாவது அலை பரவத் துவங்கியது.

ஏப்., மற்றும் மே மாதம் 7 வரை பாதிப்பு அதிகமாக இருந்தது. தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தை கடந்தது. இதன்பின் பாதிப்பு படிப்படியாக குறைந்தது. எனினும், 'கொரோனா மூன்றாவது அலை பரவும் அபாயம் உள்ளது' என, டாக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறை நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இதை உறுதி செய்வது போல், வேகமாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு, கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மதுகுமளி வித்யாசாகர், உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மநீந்திரா அகர்வால் ஆகியோர், கணித முறை அடிப்படையில் கொரோனா மூன்றாவது அலையை கணித்துள்ளனர். இந்த இரண்டு ஆராய்ச்சியாளர்களுமே இரண்டாவது அலையில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து, ஆய்வு அறிக்கை வெளியிட்டனர். அவர்கள் குறிப்பிட்டிருந்தது சரியாக இருந்தது.

இந்நிலையில், மூன்றாவது அலை குறித்து அவர்கள் கூறியதாவது: கேரளா, மஹாராஷ்டிராவில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மூன்றாவது அலை பரவல் அடுத்த சில நாட்களில் துவங்கும் என தெரிகிறது. எங்கள் கணிப்பின்படி ஆக., மாதத்தில் பரவும் மூன்றாவது அலை, அக்டோபரில் உச்சத்தை அடையும். ஆனாலும் இரண்டாவது அலையைப் போல் மூன்றாவது அலையில் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகம் இருக்காது.
இரண்டாவது அலையில் தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தை கடந்தது. மூன்றாவது அலையில் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக, 1.50 லட்சத்துக்குள் தான் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மூன்றாவது அலை பாதிப்பை தடுப்பதில் தடுப்பூசிக்கு முக்கிய பங்கு உள்ளது. அதனால், தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தினால் மூன்றாவது அலை பாதிப்பை நிச்சயம் குறைக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


அலட்சியம் வேண்டாம்!


மூன்றாவது அலை பரவல் குறித்து சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறியதாவது:முதல் அலையின் பரவல் குறைந்ததும், இனி கொரோனா பாதிப்பு இல்லை என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டது. கொரோனா தடுப்பில் அவர்கள் காட்டிய அலட்சியம் தான், இரண்டாவது அலைக்கு வழிவகுத்தது. இரண்டாவது அலை பரவல் குறைந்த பின், அதே தவறுகளை மக்கள் மீண்டும் செய்யத் துவங்கியுள்ளது கவலையளிக்கிறது. முக கவசம் அணிதல், கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடைமுறைகளை மக்கள் இன்னும் குறைந்தது ஓராண்டுக்காவது முழுமையாக பின்பற்ற வேண்டும்.

உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அப்போது தான் மூன்றாவது அலை பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா பரவல் அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அதிகப்படுத்த வேண்டும்' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (23+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம.ராசு - கரூர்,இந்தியா
03-ஆக-202122:43:33 IST Report Abuse
ராம.ராசு ஆருடம் சொல்லுவது போல உள்ளது இந்த செய்தி. ஆண்டுதோறும் வருகின்ற பருவ நிலை மாற்றங்களே பல சமயங்களில் பொய்த்துப் போய்விடுகின்றன. இப்படி அக்டோபரில் உச்சம் தொடும் என்பதெல்லாம் ஊகத்தின் அடிப்படையில் சொல்லுவதுபோலவே உள்ளது. முக கவசம். இரட்டை முக கவசம். சமூக இடைவெளி. தடுப்பூசி. இவை அனைத்திற்கும் மேலாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கடவுளிடம் வேண்டுதல் வேறு. ஒரு கடவுள் கூடவா இந்த நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்றமாட்டார். என்றாலும் மூன்றாவது அலை... உச்சத்தில் என்றெல்லாம் பதட்டமடைய வைக்கும் செய்தி. உணவே மருந்து என்று நமது உணவுக்கு கலாச்சாரத்தைச் சொல்லி பெருமை அடித்துக்கொள்கிறோம். சித்த வைத்தியம், நாட்டு வைத்தியம் பரம்பரை வைத்தியம் என்றெல்லாம் மெச்சிக்கொண்டு இருக்கிறோம். கடவுளுக்கு கூட "தன்வந்திரி" என்று மருத்துவராகவும் சொல்லிக்கொள்கிறோம். ஜெபம் செய்து புற்றுநோய் உடன்பட அனைத்து வியாதிகளையும் தீர்த்து வைப்பதாக மேடைபோட்டு உறக்கச் சொல்லுகிறோம். ஆனால் ஒரு சாதாரண தொற்றுக்க பயந்து பயந்து வாழ வேண்டிய நிலை. கடவுள் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இல்லாமல்.... தடுப்பூசி.. தடுப்பூசி.... தடுப்பூசி.....
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
03-ஆக-202121:46:44 IST Report Abuse
Visu Iyer இறந்தால் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் (அந்த பணத்திற்கு வருமான வரி கிடையாது தானே) உயிருடன் இருந்தால் அரசுக்கு வரி கட்ட வேண்டும்.. புரிகிறது..
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
03-ஆக-202120:15:34 IST Report Abuse
Nagercoil Suresh முகக்கவசம், தடுப்பூசி, தனி நபர் இடை வெளி இந்த மூன்றிற்கும் முக்கியத்துவம் கொடுங்கள் தமிழகத்தில் எந்த ஒரு அலை இப்போதைக்கு வருவதற்கு சான்ஸ் இல்லை...அமெரிக்கர்கள் அவசரப்பட்டு முகவசத்தை அணியவேண்டாம் என கூறினார்கள் மாட்டிக்கொண்டார்கள் அது போல் இந்தியா(தமிழகம்) அந்த தவறை செய்யாது...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
03-ஆக-202121:41:33 IST Report Abuse
Visu Iyerஎந்த ஒரு அலை இப்போதைக்கு வருவதற்கு சான்ஸ் இல்லை...///தேர்தல் வந்தால் மோடி அலை என்று செய்திகள் வரும்.. என்பதை போல சொல்றீங்களே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X