அரசியல் செய்தி

தமிழ்நாடு

தென் மாவட்டங்களை வளைக்க பா.ஜ.,வின் 3 முக்கிய திட்டங்கள்

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை, கட்சியை வளர்க்க, பல்வேறு வகையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: அண்ணாமலை தன் திட்டங்களை நிறைவேற்ற, பா.ஜ.,வின் அடிப்படை பின்புலமான, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரின் யோசனைகளை பின்பற்ற முடிவு எடுத்துள்ளார். இதற்காக, பா.ஜ., தொண்டர்களுடன், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களையும், தமிழகம் முழுக்க
தென் மாவட்டங்கள், பா.ஜ.,3 முக்கிய திட்டங்கள்

தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை, கட்சியை வளர்க்க, பல்வேறு வகையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: அண்ணாமலை தன் திட்டங்களை நிறைவேற்ற, பா.ஜ.,வின் அடிப்படை பின்புலமான, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரின் யோசனைகளை பின்பற்ற முடிவு எடுத்துள்ளார். இதற்காக, பா.ஜ., தொண்டர்களுடன், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களையும், தமிழகம் முழுக்க களம் இறக்கி வருகிறார். அதில், மூன்று திட்டங்களுடன், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் செயல்படுகின்றனர். அவர்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை குறிவைத்துள்ளனர்.


முதல் திட்டம்அ.தி.மு.க.,வில், தேசிய சிந்தனையில் இருக்கும் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் பலரையும் சந்தித்து பேசியுள்ளனர். அவர்களில் பலரும், அ.தி.மு.க., தலைமை மீது, அதிருப்தியில் உள்ளதை அறிந்து கொண்டனர். 'தமிழகத்தில், இனி அ.தி.மு.க.,வுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை' என்று, அதிருப்தியுடன் அவர்கள் கூறிய கருத்துக்களை உள்வாங்கிய, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், அவர்களை, பா.ஜ., பக்கம் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். அதேபோல, தி.மு.க.,வில் ஒரு சிலருக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால், தென் மாவட்டங்களில், பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களுடனும் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் கலந்துரையாடி வருகின்றனர்.

விரைவில், அவர்களையும் பா.ஜ.,வுக்கு கொண்டு வருவதன் வாயிலாக, பா.ஜ., வலுவடையும் என, நினைக்கின்றனர். மேலும், அனைத்து தேவர் அமைப்புகளையும் ஒன்றிணைத்து, 'ஷாகா' பயிற்சி அளித்து, அதன்மூலம், பா.ஜ.,வை வலுப்படுத்தும் முயற்சியும் நடந்து வருகிறது. தென் மாவட்ட கிராமங்களில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. பயிற்சி வகுப்புகளுக்கு பின், அவர்கள் பா.ஜ.,வில் இணைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இரண்டாவது திட்டம்தென்மாவட்டங்களில் உள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றியவர்கள் குறி வைக்கப்பட்டு உள்ளனர்.அவர்களில், ஆர்.எஸ்.எஸ்., -- பா.ஜ., சிந்தனை அல்லது ஈர்ப்புடன் யார் உள்ளனர் என்றும், கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை நோக்கி, ஆர்.எஸ்.எஸ்., -- பா.ஜ.,வினர் செல்கின்றனர். அவர்களை பா.ஜ.,வுக்கு இழுப்பதே நோக்கம்.


மூன்றாவது திட்டம்தமிழகத்தில், அரசு சாரா தனியார் பொது சேவை அமைப்புகள் ஏராளமாக இயங்கி வருகின்றன. அவற்றில், ஆர்.எஸ்.எஸ்., -- பா.ஜ., ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும், என்.ஜி.ஓ.,க்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்களை ஒருங்கிணைத்து, கிராமம்தோறும் மக்கள் சேவை மேற்கொள்ள வைக்கும் முயற்சி நடக்கிறது. இதன் வாயிலாக, கிராமங்களில் பா.ஜ., வலுப்பெறும் என, திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

அண்ணாமலை 'வீடியோ'

சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழக தலைவர்களை, தேசம் முழுதும் எடுத்து செல்லும் நிகழ்வை சுட்டிக்காட்டி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள 'வீடியோ' பதிவு, அக்கட்சி தொண்டர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சிறிய வட்டம்

வீடியோவில், அண்ணாமலை பேசிஉள்ளதாவது:சுதந்திரம் கிடைப்பதற்காக, பல காலமாக பல மன்னர்கள், அற்புதமான மனிதர்கள், தமிழ் மண்ணில் போராடினர். உங்களுக்கு தெரியும். இப்போது இருக்கிற ஓட்டு அரசியலில், பல கட்சிகளின் அரசியல் பார்வையில், இந்த தலைவர்களும் சிறிய வட்டத்தில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.நான் சில பெயர்களை உங்களுக்கு கூறுகிறேன். எப்படிப்பட்ட பூரிப்பு நமக்கு வருகிறது என்று பாருங்கள். வீரபாண்டிய கட்ட பொம்மன், பூலிதேவன், வல்வில் ஓரி, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, வீரன் அழகுமுத்துகோன், வீரன்
சுந்தரலிங்கனார், ராணி மங்கம்மாள், வேலுநாச்சியார்.இவர்கள் அனைவரும் தமிழ் மண்ணுக்காக, நம்முடைய சுதந்திரத்திற்காக தன்னுடைய உயிரை கொடுத்தவர்கள். வெள்ளையனை எதிர்த்து, தனி மனிதனாக தன்னுடைய சமுதாயத்தை திரட்டி போராடி, சுதந்திர வேள்வியை மண்ணில் விதைத்தவர்கள்.நான் தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற பின், இந்த தலைவர்கள் அனைவரையும் இளைய சமூகத்தினருக்கு அறிமுகம் செய்ய
வேண்டும் என்பது, மிக பெரிய ஆசையாக இருந்தது.

தீரன் சின்னமலை

தமிழகம் முழுதும், இந்த தலைவர்களை எடுத்து செல்ல வேண்டும்.பெரிய விழாவாக எடுத்து, இளைய சமுதாயத்திடம் எடுத்து செல்ல வேண்டும். அவர்களை தேசம் முழுதும் எடுத்து செல்லும் முதல் நிகழ்ச்சியாக, ஆடி பெருக்கில் நான், தீரன் சின்னமலைக்கும், வல்வில் ஓரிக்கும் அஞ்சலி செலுத்த உள்ளேன். இவ்வாறு, அவர் பேசியுள்ளார். - நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
03-ஆக-202121:16:08 IST Report Abuse
தமிழ்வேள் தமிழகம் தேசிய நீரோட்டத்தில் கலக்கவேண்டுமானால் , மூன்றாக பிரிக்கப்படுவதும் , சென்னை தனி யூனியன் பிரதேசமாக்கப்படுவதும் அவசியம் ....திராவிட நாத்திக பிரிவினை ஆபிரகாமிய அட்டகாசத்தினை அடக்கவேண்டுமானால் தமிழனை மூன்று மாநில மக்களாக பிரித்து திருட்டு திராவிடத்தை தெருவில் நிறுத்தவேண்டும் ....வாரிசு சண்டையில் திராவிடம் தன்னால் அழியும் ...அவர்களுக்கு எதிரி வெளியில் இல்லை ...செல்லும் கரையானும் அரித்து வெளியே தெரியாமல் மினுமினுப்பு பூச்சோடு உள்ள இயக்கம் ,எளிதில் அழியும் .....மயிலே மயிலே என்று கொஞ்சினாள் அது தொகை தராது ......திராவிட மயில்களிடம் பிடுங்கித்தான் எடுக்கவேண்டும் .....அறுவை சிகிச்சை செய்யும் அளவு இங்கு தேசத்துரோக புற்றுநோய் முற்றிவிட்டது .........முதல் தேவை திராவிட அரசு கலைக்கப்பட்டு மாநில பிரிவினை முடியும் வரை ராஷ்டிரபதி ஆட்சி அமல்படுத்துவது மட்டுமே .......இந்த மாநிலத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் ..ஜெயஹிந்த்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
03-ஆக-202120:54:24 IST Report Abuse
sankaseshan Raman தமிழ் நாட்டில் எந்த கட்சிக்க டா மக்களுக்கு நல்லது செய்யற நோக்கம் இருக்கு அவன் அவன் தன்னுடைய குடும்பத்துக்கும் வாரிசுகளுக்கும் பணம் பண்ண குறியா irukkaan
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
03-ஆக-202120:53:47 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN பாமரனுக்கு டென்சன் கிடைக்கிற காஞ்ச ரொட்டியும் கிடைக்காமே போயிருமோன்னு
Rate this:
03-ஆக-202121:23:39 IST Report Abuse
பாமரன்அதெல்லாம் தொங்கவிட்டான்பட்டியில் பில் பாஸாகுமோ ஆகாதோன்னு கண்ணை மூடிக்கிட்டு ஜிங் ஜிங் ஜிங் ச்சக்க் அப்படின்னு போடுற கும்பலுக்கு தான் இருக்கும் ஜாமி...😜😜 நாம எல்லாரையும் போட்டு தாளித்து விடுவோமாக்கும்...💪💪...
Rate this:
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
03-ஆக-202121:44:23 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் வெட்கமே இல்லாமல் அடுத்தவன் ID அப்போ நீ எங்கள் அப்பா நடேசனுக்கு பிறந்தவனா , சரி எங்கள் தந்தையை கேட்கிறேன் உங்களுக்கு வெட்கமே இருக்காதா என்ன எவ்வளவு கீழ்த்தரமான புதி , உன் மீது உன்னக்கு நம்பிக்கை இல்லை அப்படி இப்படி எல்லாம் செய்தால் தான் உன் பிழைப்பு என்றால் உன் GOOGLE PAY கணக்கு சொல்லு , எங்கள் அலுவலகத்தில் சொல்லி உனக்கு பணம் அனுப்புகிறோம் , ஒரு கருது பதிவிட இவ்வள கீழ்த்தரமான வ்ரிட்டர் அசிங்கம் இது தினமலர் நெறியாளருக்கு அதாவது AADHISESAN சாருக்கு தெரியுமோ சரி அவரை தொடர்பு கொள்ள பார்க்கிறேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X