இரண்யாய நமஹ சொல்லணுமோ!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

'இரண்யாய நமஹ' சொல்லணுமோ!

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (2)
Share
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஹிந்து விரோத போக்கை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறதோ என்ற எண்ணம் உருவாகியுள்ளது.சென்னை பல்கலையில், ஆடி வெள்ளிக்கிழமை அன்று, துணைவேந்தர் தன் அலுவலகத்தில் வழிபாடு செய்துள்ளார்.இதை, சென்னை பல்கலையில் பொருளாதார துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்ற மு.நாகநாதன், 'சென்னைஎஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஹிந்து விரோத போக்கை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறதோ என்ற எண்ணம் உருவாகியுள்ளது.சென்னை பல்கலையில், ஆடி வெள்ளிக்கிழமை அன்று, துணைவேந்தர் தன் அலுவலகத்தில் வழிபாடு செய்துள்ளார்.இதை, சென்னை பல்கலையில் பொருளாதார துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்ற மு.நாகநாதன், 'சென்னை பல்கலையா, சங்கர் பாபா கல்விக் கழகமா?' என விமர்சித்துள்ளார்.இந்த விமர்சனத்தை சாதாரணமாக கடந்து செல்ல இயலவில்லை. ஏனெனில், மேற்படி நாகநாதன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர்.மத்திய- - மாநில அரசு அலுவலகங்களில், ஒவ்வோர் ஆண்டும் ஆயுத பூஜையை வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். பணப்புழக்கம் உள்ள கருவூலகங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை நடப்பதுண்டு. இதற்கு இது நாள் வரை, மாற்று மதத்தினர் கூட மறுப்பு தெரிவித்தது இல்லை.
கிறிஸ்துமஸ் பண்டிகை, அரசு அலுவலகத்தில் கொண்டாடப்படுவது உண்டு. முஸ்லிம் சிலர், அலுவலகத்திலேயே தொழுகை நடத்துவதும் உண்டு. இவற்றை, சகோதர நேசத்துடன் தான் அனைவரும் ஏற்று கொண்டுள்ளோம்.இதில் நாகநாதன் குறுக்கிட்டு, பிரச்னை துாண்டுவது ஏன்?சமீபத்தில், ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு புதிய திட்டத்தை கூறியுள்ளார்.ஒன்பது ஆண்டுகளாக கோவில்களுக்கு செலுத்தப்பட்டுள்ள, 2,000 கிலோ தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன.காணிக்கை நகைகளை, கோவில் பயன்பாட்டுக்கு போக, மீதியை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும் என, அமைச்சர் கூறியுள்ளார்.
நமக்கு விபரம் தெரிந்த வரையில், வங்கியில் நகையை அடமானமாக பெற்று, வட்டிக்கு கடன் கொடுப்பர். தங்க நகையை, 'டிபாசிட்' ஆக பெற்று, அதற்கு வட்டி வழங்குவதாக தெரியவில்லை.மேலும், தமிழக கோவில்களில் இருக்கும் ஆபரணங்களின் மதிப்பு 10 ஆயிரம் கிலோவுக்கும் அதிமாக இருக்கும் என்றும், 2,000 கிலோ எனக் குறிப்பிடுவதில், ஏதும் சூழ்ச்சி இருக்கிறதோ என்ற சந்தேகமும் வருகிறது.இதற்கிடையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹிந்து அறநிலைய துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டில், 'ஹிந்து' என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டுள்ளது.ஹிந்து விரோத கட்சியின் கைகளில் ஆட்சி சிக்கியுள்ளது. நடப்பதை பார்த்தால், மாநிலத்தில் உள்ள கோவில்கள் அனைத்தையும், 'குளோஸ்' செய்து விடுவரோ என்ற அச்சம் ஏற்படுகிறது.இன்னும் சில வாரங்களில் ஆயுத பூஜை வரவுள்ளது. இதை அரசு அலுவலகத்தில் கொண்டாட கூடாது என, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பினாலும் ஆச்சரியமில்லை.வரும் 2022ம் ஆண்டு முதல் தமிழக அரசு அலுவலகங்களில் பொங்கல், தமிழ் ஆண்டு பிறப்பு, தீபாவளி போன்ற ஹிந்து பண்டிகைகளுக்கு விடுமுறை இருக்காது என்று கருதலாம்.இரண்யன் ஆட்சியில், 'இரண்யாய நமஹ' என்று தானே சொல்லியாக வேண்டும். 'ஓம் நமோ நாராயணா' என சொல்ல முடியுமா என்ன?


இலவச பயணத்திற்கு ஆசைப்படாதீர்!எஸ்.ஆர்.சாந்தி, மதுரையிலிருந்து எழுதுகிறார்: தற்போதைய தமிழக அரசு, பல்வேறு திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று, மகளிருக்கான இலவச பேருந்து பயணம். இது உண்மையிலேயே நல்ல திட்டம் தான்!இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பின், எதிர்பார்த்ததற்கும் மேலாக கூடுதல் பயனர்கள் பயணம் செய்வதாக சமீபத்தில் அமைச்சர் தெரிவித்திருந்தார். இது தான் சற்று உறுத்துகிறது.அன்றாடம் பணிக்கு செல்லும் மகளிர், அத்தியாவசிய தேவைக்காக வெளியில் புறப்படும் குடும்பத்தலைவிகள் இத்திட்டத்தை பயன்படுத்துவதில் தவறில்லை.ஆனால், இலவச பயணம் தானே என்ற நினைப்பில் வெளியில் புறப்பட்டால், இந்த அசாதாரண கொரோனா காலக்கட்டத்தில் உங்கள் ஆரோக்கியம் கெடுவதோடு, குடும்பத்தாரையும்வெகுவாக பாதிக்கும்.அடுத்தது, 'நீ சென்றால் பஸ் காசு மிச்சம்' என காரணம் சொல்லி கணவரும், பிள்ளைகளும் தங்களது பொறுப்புகளை பெண்ணின் தலையில் சுமத்தி, அவருக்கு இரட்டிப்பு வேலை சுமையை தந்து விடுவர்.இப்போது, அது உங்களுக்கு சுமையாகத் தெரியாது. ஆனால், காலப்போக்கில் அந்த கஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களை சாகடித்து விடும்.எனவே, குடும்பத்து ஆண்கள் செய்ய வேண்டிய பொறுப்புகளை, இலவச பயணத்துக்கு ஆசைப்பட்டு உங்கள் தலையில் பாரத்தை ஏற்றிக் கொள்ளாதீர்.காமெடி நடிகர் விவேக் பாணியில் சொல்ல வேண்டுமானால், 'புரிஞ்சவங்க புரிஞ்சுக்குங்க; புரியாதவங்க, புரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க!'


மத கலவரம் வேண்டவே வேண்டாம்!கோ.ராஜேஷ் கோபால், அரவங்காடு, நீலகிரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆன்மிகத்தை அமைதியாக போதிக்க வேண்டிய பாதிரியாரே,'தி.மு.க.,வின் வெற்றி கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை' எனக் கூறியது வருத்தத்திற்குரியது.ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்ற கிறிஸ்துவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, மிக தரம் தாழ்ந்து பேசி இருக்கிறார்; அது கண்டனத்திற்கு உரியது.'கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் போட்ட பிச்சையால் தான் தி.மு.க., வெற்றி பெற்றது.'பாரத மாதாவின் அசிங்கம், நம் காலில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக தான், நாம் செருப்பு போடுகிறோம். பூமாதேவியால் நமக்கு சொறி, சிரங்கு வந்து விடக்கூடாது' என்றெல்லாம் அவர் பேசியிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆண்டுகளாக ஹிந்துக்களுக்கும், கிறிஸ்துவருக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.கோவில் மற்றும் தேவாலயங்களில் நடக்கும் விழாக்கள், போலீஸ் பாதுகாப்புடன் தான் நடக்கின்றன.தி.மு.க.,வினர் கிறிஸ்துவருக்கு ஆதரவாகவும், ஹிந்துக்களுக்கு எதிரானவராகவும் செயல்படு கின்றனர் என்ற கருத்து, அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், ஹிந்துக்களை அழித்து கொண்டிருக்கின்றனர் என்ற எண்ணம் பரவி உள்ளது.எப்போது வேண்டுமானாலும் அங்கே ஒரு மத கலவரம் உருவாகும் சூழல்உள்ளது என்பதை அனைவரும் அறிவர்.பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சு, எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல உள்ளது.உலகம் முழுதும் மத கலவரங்களால், பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். போதும்... இனி ஒரு மத கலவரம் எங்கும் நிகழ வேண்டாம்.
மனிதம் போற்றும் இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக, அன்பை பகிர்ந்து வாழ்வோம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X