அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை நூற்றாண்டு விழா: கலந்துகொண்ட ஜனாதிபதி

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (25+ 107)
Share
Advertisement
சென்னை :தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.சென்னை மாகாண சட்டசபை 1921ல் துவக்கப்பட்டது. அதன் நுாற்றாண்டு விழா, நேற்று சட்டசபை கூட்டரங்கில் நடந்தது.மாலை, 5:02 மணிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சட்டசபைக்கு வந்தார். தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலை
சட்டசபை நூற்றாண்டு விழா  கலந்துகொண்ட ஜனாதிபதி

சென்னை :தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
சென்னை மாகாண சட்டசபை 1921ல் துவக்கப்பட்டது. அதன் நுாற்றாண்டு விழா, நேற்று சட்டசபை கூட்டரங்கில் நடந்தது.

மாலை, 5:02 மணிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சட்டசபைக்கு வந்தார். தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைத்து ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பேசியதாவது:

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழா ஆகியவை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை கட்டடத்தில் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு வரவேற்று பேசினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருணாநிதி படத்தை திறந்து வைத்தார். விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, அமைச்சர்கள், எம்பிக்கள் எம்எல்ஏக்கள், கே.எஸ்.அழகிரி, வைகோ, தொல்திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர். தமிழக சட்டசபையில் ஏற்கனவே 15 தலைவர்களின் படங்கள் உள்ளன. 16வதாக கருணாநிதியின் படம் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டு விடுதலைக்காக போராடியவர்களுக்கு வெவ்வேறு தொலைநோக்கு பார்வைகள் இருந்தன. ஆனால், தாய்நாட்டின் மீது கொண்ட மதிப்பிலும், மரியாதையிலும் ஒன்றுபட்டிருந்தனர்.
வரலாற்று புத்தகங்களில், எண்ணற்றவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படவில்லை. அவர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய ஒரே அஞ்சலி, அவர்களின் வாழ்க்கை மற்றும் லட்சியங்களால், தொடர்ந்து ஊக்கம் பெறுவதாகும். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்றியது போல, நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதில், ஒவ்வொருவரும், நம் பங்கை ஆற்ற வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ் இலக்கியத்திற்கு பெரும்பங்காற்றியவர். புரட்சிகரமான கருத்துக்களால் சமூக சீர்த்திருத்தங்களுக்கு வித்திட்டவர்.இவ்வாறு பேசிய அவர் 'ஜெய்ஹிந்த்' எனக்கூறி உரையை முடித்தார்.


அ.தி.மு.க., புறக்கணிப்பு

மாலை 6:00 மணிக்கு விழா நிறைவடைந்தது. பல கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அ.தி.மு.க., புறக்கணித்தது.விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, காங்., தலைவர் அழகிரி, பா.ஜ., தலைவர் அண்ணாமலை, த.மா.கா., தலைவர் வாசன், வி.சி.க., தலைவர் திருமாவளவன் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்

Advertisement
வாசகர் கருத்து (25+ 107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
04-ஆக-202113:56:32 IST Report Abuse
Swaminathan Chandramouli விழாவில் மாநில ஆளுநர் உரை ஆற்றுகிறார் நடுவண் இருக்கையில் தேசத்தின் குடியரசு தலைவர் அமர்ந்து உள்ளார் ஆனால் அவைகளுக்கு எல்லாம் மரியாதை அளிக்காமல் தமிழக முதல்வர் தனது வலது கரத்தை நாற்காலியின் வலது பக்க கைப்பிடிமேல் மமதையுடன் பற்றிக்கொண்டு உள்ளார் , இது தான் தேச தலைவருக்கு அளிக்கும் மரியாதையா இது தான் திமுகவின் பிறப்பு வளர்ப்பு
Rate this:
Cancel
03-ஆக-202123:49:51 IST Report Abuse
அப்புசாமி ஜனாதிபதியே சொல்கிட்டாரு. எல்லோரும் கட்டுமரம் காமிச்ச வழியில் பயணித்து முன்னேற வேண்டும். புறப்படுங்கள்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
03-ஆக-202120:23:13 IST Report Abuse
RajanRajan என்ன ஆனாலும் ஒரு RSS வாதியை வைத்து தயிர் வடை விழா அரங்கேற்றியது பகுத்தறிவு தயிர் வடைக்கே அவமானம் ஏன் அந்த ஓசி சோறுகள் கொந்தளிக்காம அமைதி காக்குது. வேற வழியில்லையே.
Rate this:
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
03-ஆக-202121:35:04 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் அந்த பதவியில் ஒரு broom stick இருந்தாலும் அழைத்து இருப்போம் , இப்போ Rss என்று கிழிக்கும் நீ வேறு நேரங்களில் ஜாதி மதம் என்று உளறுவ , ஏன் அந்த BROOM stick நீங்கள் rss எதிரி நான் வரமாட்டேன் என்று சொல்லவேண்டியது தானே அப்புறம் என்ன...
Rate this:
03-ஆக-202121:38:13 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்வெட்கம் இல்லாம 4 சீட்டுக்கு மேலே வாங்க துப்பில்லை அதுவும் 500 கோடி செல்வது செய்த முட்டா சிங்கி ப்ரூம்ஸ்டிக் கட்சி பேசி கூவம் காவை மாதிரி அசிங்கமா நாறுது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X