ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து விசாரணை : பீஹார் முதல்வர் நிதிஷ் வலியுறுத்தல்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாட்னா : ''போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்,'' என, மத்தியில் ஆளும் பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேலின், 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.நம் நாட்டில் அரசியல்


பாட்னா : ''போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்,'' என, மத்தியில் ஆளும் பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.



latest tamil news




மேற்காசிய நாடான இஸ்ரேலின், 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.நம் நாட்டில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்டோரின் போன்களும் ஒட்டு கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளத் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ் குமார் கூறியுள்ளதாவது:போன் ஒட்டுக் கேட்பது தவறான நடவடிக்கை. மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.


latest tamil news



பார்லி.,யில் இது தொடர்பாக அமளி நடந்து வருகிறது. ஊடகங்களிலும் இது தொடர்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன.அதனால் இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மையை தெரியபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
03-ஆக-202110:51:05 IST Report Abuse
Kanthan Iyengaar நிலைமை என்ன இப்படி ஆயிட்டுது? கூட்டணி கட்சி காறாளே கேட்கிறா? நம்ம 53 இஞ்சு காரா என்ன செய்யப்போறா? இல்லேன்னாலும் எல்லோரும் சிரிப்பா.. இருக்குன்னாலும் எல்லோரும் சிரிப்பா...பரிதாபம் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X