பொது செய்தி

இந்தியா

எல்லை பிரச்னைக்கு தீர்வு இந்தியா - சீனா முடிவு

Added : ஆக 03, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியா - சீனா இடையில் நிலவும் எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண இருதரப்பும் சம்மதம் செய்துள்ளன.எல்லைப் பிரச்னை காரணமாக நம் அண்டை நாடான சீனாவுடன் கடந்த ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை வாபஸ் பெறுவது குறித்து இருதரப்பு ராணுவ அதிகாரிகளுக்கு இடையில் தொடர்ந்து பேச்சு நடக்கிறது.இதன் 12ம்

புதுடில்லி : இந்தியா - சீனா இடையில் நிலவும் எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண இருதரப்பும் சம்மதம் செய்துள்ளன.



latest tamil news



எல்லைப் பிரச்னை காரணமாக நம் அண்டை நாடான சீனாவுடன் கடந்த ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை வாபஸ் பெறுவது குறித்து இருதரப்பு ராணுவ அதிகாரிகளுக்கு இடையில் தொடர்ந்து பேச்சு நடக்கிறது.இதன் 12ம் கட்ட பேச்சு சமீபத்தில் லடாக் எல்லைப் பகுதியில் நடந்தது. அந்த சந்திப்பு குறித்த விபரங்கள் அப்போது வெளியிடப்படவில்லை.இந்நிலையில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் நேற்று கூட்டறிக்கையை வெளியிட்டனர்.


latest tamil news



அதில் கூறப்பட்டுள்ளதாவது : எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா மற்றும் சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையில் நடந்த பேச்சு நல்ல முறையில் அமைந்தது; அது இருதரப்புக்கும் இடையிலான பரஸ்பர புரிதலை மேலும் மேம்படுத்தியது.தற்போதுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு எல்லைப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன. தொடர்ந்து பேச்சுகள் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-202120:04:52 IST Report Abuse
அப்புசாமி பேச்சு பேச்சாத்தான் இருக்கணும். அடிதடில இறங்காம இருப்போம்.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
03-ஆக-202108:26:22 IST Report Abuse
J. G. Muthuraj எப்படி?....பல சதுர மைல்கள் ஏரியாவை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தா?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-ஆக-202107:51:37 IST Report Abuse
Lion Drsekar இங்கு இருக்கக்கூடிய எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என்பதே இல்லாமல் போய்விட்டது, சீனாவின் எல்லைப்பிரச்சனையாவது தீர்ந்தது மகிழ்ச்சி, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X