சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. போலி உதவி கமிஷனர்: திண்டுக்கல் அருகே கைதுதிண்டுக்கல் : திண்டுக்கல் அருகே, போலி உதவி கமிஷனரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சுங்கச்சாவடி உள்ளது. எஸ்.பி., அலுவலக தகவலை தொடர்ந்து, இங்கிருந்த ரோந்து போலீசார் நேற்று முன்தினம் இரவு, போலீஸ் ஸ்டிக்கர், சைரன் விளக்குடன் வந்த வாகனத்தை நிறுத்தி, அதில் இருந்தவரிடம்

தமிழக நிகழ்வுகள்
1. போலி உதவி கமிஷனர்: திண்டுக்கல் அருகே கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே, போலி உதவி கமிஷனரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சுங்கச்சாவடி உள்ளது. எஸ்.பி., அலுவலக தகவலை தொடர்ந்து, இங்கிருந்த ரோந்து போலீசார் நேற்று முன்தினம் இரவு, போலீஸ் ஸ்டிக்கர், சைரன் விளக்குடன் வந்த வாகனத்தை நிறுத்தி, அதில் இருந்தவரிடம் விசாரித்தனர்.அதில் இருந்த நபர், தான் உதவி போலீஸ் கமிஷனர் எனவும், விசாரணைக்கு வந்ததாகவும் தெரிவித்தார். அவரது அடையாள அட்டையை பார்த்தபோது போலி என்பது தெரிந்தது. பட்டிவீரன்பட்டி போலீசார், அவரை கைது செய்தனர்.latest tamil newsவாகனம், அதிலிருந்த போலீஸ் சீருடை, பொம்மை துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. கைதானவர், சென்னை கொளத்துாரைச் சேர்ந்த சின்னப்பையன் மகன் விஜயன், 41 என்பது தெரிந்தது. வேலை இல்லாததால் மனைவி திட்டியுள்ளார். போலீஸ் துறையில் இருந்த ஆர்வத்தால், போலி உதவி கமிஷனராக நடித்துள்ளார்.இவர் பயன்படுத்திய போலீஸ் ஜீப், கோவையைச் சேர்ந்த ஜெயமீனாட்சி என்பவருக்கு சொந்தமானது. அதை, 2 லட்சம் ரூபாய் செலவில், அதிகாரிகள் வாகனத்தை போல மாற்றியுள்ளார். பதிவு எண்ணையும் மாற்றி, போலீஸ் உயரதிகாரி போல் 10 மாதங்களாக நடித்தது தெரியவந்தது.

2. 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் பெங்களூரு முக்கிய புள்ளி கைது
சென்னை : 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, பல கோடி ரூபாய் சுருட்டிய, பெங்களூரை சேர்ந்த முக்கிய புள்ளியை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

தேசிய தேர்வு முகமை நடத்திய, 'நீட்' தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக, தமிழக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.தனக்கு பதிலாக, வேறு ஒரு நபரை தேர்வு எழுத வைத்து தேர்ச்சி பெற்று, தேனி அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., வகுப்பில் சேர்ந்த உதித் சூர்யா, 21 மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன், 48 ஆகியோரை கைது செய்தனர்.பின், இந்த வழக்கில், ஏழு மாணவர்கள், அவர்களின் உறவினர்கள், இடைத்தரகர்கள் என, 20 பேரை கைது செய்தனர்.


latest tamil newsதொடர் விசாரணையில், 'நீட்' தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்திய போதும் ஆள்மாறாட்டம் செய்து, முறைகேடுகள் நடந்து இருப்பது தெரிய வந்தது.இந்த முறைகேடு வாயிலாக தேர்ச்சி பெற்று, சென்னை அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு படித்து வந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்குமார், 20 மற்றும் அவரது தந்தை தேவேந்திரன், 53 ஆகியோரை கைது செய்தனர். இவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டு, ஆள்மாறாட்டம்வாயிலாக, தனுஷ்குமாரை, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறச் செய்த, பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீஹர்ஷா, 38, என்பவரை நேற்று கைது செய்தனர்.

இவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர். இவர் கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பிரமுகர். இவர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வைக்க, கோடிக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.சிக்கியது எப்படி?இவர், தேவேந்திரனிடம், 20 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார். ஹிந்தி தெரியாத தனுஷ்குமாருக்கு பதிலாக, பீஹார் மாநிலத்தை சேர்ந்த, வேறு ஒருவரை தேர்வு எழுதச் சொல்லி, நீட் தேர்வில் தனுஷ்குமாரை முதல், 50 இடங்களுக்குள் தேர்ச்சி பெறச் செய்துள்ளார். பணம் வாங்கியதற்கு நம்பிக்கையை ஏற்படுத்த, தேவேந்திரனிடம் ஓட்டுனர் உரிமத்தின் நகலை கொடுத்துள்ளார்.

அதுவே, இவர் சிக்குவதற்கு காரணமாக அமைந்து விட்டது.இதற்கிடையே, நீட் தேர்வு மோசடி தொடர்பாக, இரண்டு பெண்கள் உட்பட, 10 பேரின் படங்களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்களில் ஒருவரை கூட, அவர்களால் நெருங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3. குழந்தைக்கு பாலியல் தொந்தரவு ; 50 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை
சென்னை : மூன்று வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, 50 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


latest tamil news


Advertisement


சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி, 50. கடந்த 2018ல், தான் குடியிருந்த வீட்டின் கீழ்பகுதியில் வசித்து வந்த தம்பதியின், மூன்று வயது குழந்தையை, தன் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த குழந்தையிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.தனக்கு வலி இருப்பதாக, மறுநாள் குழந்தை கூறியதையடுத்து, பெற்றோர் விசாரித்துள்ளனர்.அப்போது, ரவி தன்னிடம் நடந்து கொண்ட விபரத்தை குழந்தை கூறி உள்ளது.

இது குறித்து, குழந்தையின் தாயார் அளித்த புகாரில், எம்.கே.பி., நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ரவியை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குழந்தையை கடத்தி சென்ற குற்றச்சாட்டுக்காகவும், 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தையை, பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்காவும், ரவிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.மேலும், பாதிக்கப்பட்ட குழந்தையின்பெற்றோருக்கு, நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கவும், தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

4. சிவசங்கர் பாபா 3வது முறையாக போக்சோவில் கைது
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி உள்ளது. இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதானார்.


latest tamil newsஅத்துடன் அவர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'போக்சோ' சட்டத்தில், இரண்டு வழக்குகள் பதிந்து கைது செய்தனர். தற்போது அவர் மீது, மூன்றாவதாகவும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.இந்த வழக்கு தொடர்பாக, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை, செங்கல்பட்டில் உள்ள, போக்சோ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி தமிழரசி, வரும், 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கஉத்தரவிட்டார்.

5. யாசகரிடம் ரூ.40 ஆயிரம் திருட்டு; ஐவர் கைது
திருநெல்வேலி : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், நொச்சிகுளத்தை சேர்ந்தவர் சண்முகையா 64. யாசகரான இவர் ரூ.40 ஆயிரத்தை சாக்குப்பையில் வைத்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு சங்கரன்கோவில் கடையில் டீ குடித்தார். அப்போது சாக்குப்பை திருட்டு போனது.புகாரையடுத்து சங்கரன் கோவில் எஸ்.ஐ.,ஜெயக்குமார் விசாரித்தார். டீகடை முன்பிருந்த சிசிடிவி, கேமரா காட்சிகளை கொண்டு திருட்டில் ஈடுபட்ட ராஜபாளையம் மேலகரப்பட்டி முருகன் 45, சங்கரன்கோவில் குமார் 19, சீனிவாசன் 32, உலகநாதன் 25, ஆவுடையாள்புரம் கணபதி 45 ஆகியோரை கைது செய்தனர்.


latest tamil newsஇந்தியாவில் குற்றம் :
நீதிபதி கொலை வழக்கு 17 பேர் அதிரடி கைது
ராஞ்சி : ஜார்க்கண்டில் நீதிபதி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 243 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தன்பாத் மாவட்டத்தில் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியான உத்தம் ஆனந்த், சமீபத்தில் சாலையோரம் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோவை மோதி கொலை செய்யப்பட்டார். ஆட்டோவின் ஓட்டுனரான லக்கான் வர்மா மற்றும் அவரது உதவியாளர் ராகுல் வர்மா சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க, முதல்வர் ஹேமந்த் சோரன் முடிவு செய்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தன்பாத் மாவட்டத்தில் உள்ள 53 ஓட்டல்கள் உட்பட பல்வேறு இடங்களில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விபத்து ஏற்படுத்திய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின்போது சந்தேகத்தின் அடிப்படையில், 243 பேரை காவலில் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, 17 பேர் கைது செய்யப்பட்டனர்.இதற்கிடையே கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பொதுவெளியில் பகிர்ந்த எஸ்.ஐ.,யும், காலம் தாழ்த்தி வழக்குப்பதிவு செய்த போலீஸ் அதிகாரி உமேஷ் மாஞ்சியும், 'சஸ்பெண்ட்'செய்யப்பட்டனர்.


latest tamil newsஉலக நிகழ்வுகள்
ஆப்கனை ஆக்கிரமிக்க முயற்சி: பாகிஸ்தான் மீது புகார்
டோரன்டோ : பாக்., ராணுவம் ஆப்கனை ஆக்கிரமிக்கும் திட்டத்துடன், தலிபான்களுடன் இணைந்து மறைமுகப் போரில் ஈடுபட்டுள்ளதாக, கனடா முன்னாள் அமைச்சர் அலெக்சாண்டர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. அங்கு தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கனடா முன்னாள் அமைச்சர் அலெக்சாண்டர் கூறியுள்ளதாவது:பாக்., எல்லையில் ஏராளமான தலிபான் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி ஆப்கன் செல்ல காத்திருக்கின்றனர். ஆப்கனை ஆக்கிரமிக்கும் முயற்சியில் பாக்., ஈடுபடுவதை சிலர் மறுக்கின்றனர். அவர்கள் ஆப்கனுக்கு எதிராக பாக்., நடத்தும் மறைமுகப் போர் மற்றும் போர் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதாகவே கருதப்படுவர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதற்கிடையே ஆப்கனில் இருந்து தங்கள் ராணுவத்தினர் 95 சதவீதம் பேர் வெளியேறி விட்டதாக, அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Inbaraj - Trichy,இந்தியா
03-ஆக-202116:57:16 IST Report Abuse
Inbaraj மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு , என் பெயர் இன்பராஜ், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சமூக ஆர்வலர், மேலும், நான் கடந்த 25 ஆண்டுகளாக ஊரக பகுதிக்கு கடன் கொடுக்கும் பல நிறுவனங்களில் பணியாற்றி கொண்டு வருகிறேன். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் மூலம் விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் உற்பத்தித்திறனை அதிகரிக்க எனது அனுபவத்தின் வழியாகவும் மற்றும் பல கிராமப்புற மக்ளுக்காக பணி செய்து கொண்டு இருக்கும் சமூக ஆர்வலர்கள் , விவசாய ஆர்வலர்கள் பலரிடம் தமிழக அளவில் கலந்து ஆலோசித்து திட்டம் தயார் செய்து அனுப்பியுள்ளேன் . அதனை பரிசீலிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . தங்கள் தலைமையில் தமிழகத்தில் அரசு பதவியேற்ற நாள் முதல் நீங்கள் பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளை செய்து வருகிறீர்கள். தமிழக அரசின் பொருளாதார ஆலோசகராக உலக அளவில் சிறந்த பொருளாதார வல்லுனரை நியமித்தல், பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்காக பிரத்தியேகமாக விவசாயத்திற்கான பட்ஜெட். இது அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் பயன்படுத்தி விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் என்னைப் போன்ற ஒரு சமூக ஆர்வலரின் விருப்பம். மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட 100 நாட்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க மத்திய அரசு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒரு கோடியே 23 லட்சம் கிராமப்புற தொழிலாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். அந்த வேலைத் திட்டத்தின் மீது பல விமர்சனங்கள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. இந்த பயனுள்ள திட்டத்தை இதில் உள்ள விமர்சனங்களை கலைந்து , இதன் பயணளிகள் பணியை முழுமையாக பயன்படுத்தி , விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளை கிராம அளவில் உருவாக்க இந்த அறிக்கையில் கொடுத்து உள்ளேன் .பயனாளிகள் தங்கள் வீடுகளிலே தோட்டக்கலைத் துறையின் உதவியுடன் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் தரமான மற்றும் இயற்கை வழி முறையில் உற்பத்தி செய்ய அவர்கள் வீடுகளேயே தோட்டத்தை அமைத்து பயிரிட அவர்களுக்கு தேவையான பயிற்ச்சி மற்றும் விதைகள் கொடுத்து அவர்களில் வேலையை அதிக படுத்தலாம் . மேலும் பயனாளிகள் வீட்டுக்கு , ஒரு கறவை மாடு அருகில் உள்ள வங்கி மூலம் மானிய விலையில் வழங்கலாம் இது அவர்களின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் கூடுதல் வருமான ஆதாரங்களையும் அதிகரிக்கும். திட்டத்தின் படி நிலைகள் இத்திட்டத்தின் பயனாளிகள் பஞ்சாயத்து மூலமாக செய்யப்படும் வேலைக்கு 50% ஊதியமாகவும் அவர்களுடைய மீதமுள்ள 50% ஊதியத்தை அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்க ஏற்பாடு செய்யலாம் . வேளாண்மைத் துறையின் மூலம் இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு நீர் மேலாண்மை, சொட்டுநீர் பாசனம் மற்றும் அவர்களின் வீடுகளில் தோட்ட பயிர்கள் பயிரிட தொடங்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை தரமான இயற்கை விவசாய விதைகளை அவர்களின் வீட்டில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், இந்த பணிகளை மேற்ப்பார்வை செய்ய தோட்டக்கலை முறையான விவசாயப் கொடுத்து கிராமத்துக்கும் ஒருவர் என்ற அடிப்படியில் அரசு நியமனம் செய்ய வேண்டும் . பயனாளிகளிடமிருந்து சந்தை விலையில் மற்றும் ஊக்க விலையை சேர்த்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் அரசு அதே நாளில் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்த ஏற்பாடு செய்தால் மிக நலமாக இருக்கும் இதனால், அவர்களின் தனிப்பட்ட வங்கி நடவடிக்கைகளை அதிகரிப்பது வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கும். தோட்டக்கலை பொருட்கள் வீணாவதைத் தவிர்க்க, தேவைக்கேற்ப தொகுதி வாரியாக குளிரூட்டப்பட்ட கிடங்குகளை அமைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நகர்ப்புற சிறு வணிகர்கள் வேளாண் சந்தைப்படுத்தல் துறை மூலம் அங்கிருந்து வாங்கி தரமான காய்கறிகள் மற்றும் பூக்களை பகுதிகளில். செயல்படும் உழவர் சந்தையிலும் - கடைகள் இல்லாத சிறு வியாபாரிகளுக்கான சிறு கடைகள் சந்தைகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் பயிரிடப்படும் தரமான காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் ஆகியவற்றை அரசு மதிய உணவு திட்டத் திட்டம் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் திட்டத்திற்கும் கிடைக்கச் செய்யலாம். மேலும் பயனாளிகள் வீட்டுக்கு , ஒரு கறவை மாடு அருகில் உள்ள வங்கி மூலம் மானிய கடன் கொடுத்து வாங்க உதவி செய்யலாம் இது அவர்களின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் கூடுதல் வருமான ஆதாரங்களையும் அதிகரிக்கும். அந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கறவை மாடு பாலை அரசு ஆவின் மூலம் தொய்வு இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் . 15 நாட்களுக்கு ஒரு முறை பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் கால்நடை பராமரிப்பு துறையின் உதவியுடன். சிறிய அளவில் கால்நடை தீவன உற்பத்தி மையங்களை தொகுதி அளவில் தொடங்க அரசு ஆதரவு அளிக்க வேண்டும். தீவன உற்பத்தி யூனிட்டில் இருந்து திட்ட பயனாளிகளுக்கு தீவனம். நேரடியாக குறைந்த விலையில் வழங்கலாம். அரசாங்கம் அதே கிராமத்திற்கு பொதுவான நிலத்தை அல்லது குத்தகைக்கு வழங்க ஏற்பாடு அதன் மூலம் சத்தான தீவன புல் சாகுபடி செய்யலாம் .திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் நிலத்தை பயிரிட்டு தீவன புல்லை உற்பத்தி செய்து . அதே தீவன புல்ளை அவர்களின் கறவை மாடுகளுக்கு உணவுக்காக பயன்படுத்தப்படலாம் ஆவின் நிறுவனம் மூலம் அதிக அளவில் நகர்ப்புறங்களில் சிறு விற்பனை நிலையங்களை நிறுவி வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழில் முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த நிலையங்கள் தயிர் , மோர் , வெண்ணை , மற்றும் பாலில் இருந்து செய்யப்படும் பால்கோவா , மற்றும் இதர இனிப்புகள் விற்பனை செய்யலாம் , இது தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டால் மதிப்புக் கூட்ட பட்ட நெய் , மற்றும் பால் மூலம் தயார் செய்யப்படும் இனிப்பு வைகைகளை அயல் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம் இதன் மூலம் தமிழக அரசின் வரி வருமானம் அதிகரிக்கும் . ஆவின் நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் செயல்பட வழிவகுக்கும் , மேலும் கிராம பகுதிகளில் அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் ,கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதை நிறுத்தப்படும் .நகர்ப்புறங்களில் இட நெருக்கடி குறையும். திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், அரசு அருகில் நல்ல போக்குவரத்து வசதிகள், சிறந்த கல்வி, மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை அந்த பகுதிகளில் சிறப்பாக செயல்பட உறுதிப்படுத்தவேண்டும் இதை தமிழக முதல்வர் துறை அதிகாரிகள் மூலம் இதன் சாத்திய கூறுகளை நன்கு ஆராய்ந்து இதனை செயல் படுத்த வேண்டும் என்பது அனைத்து சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும். இது சாத்தியமாகும்பட்சத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கபடும் என்பது அனைத்து சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும். நன்றி பா .இன்பராஜ் சமூக ஆர்வலர் அலைபேசி எண் : 9791883540
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X