இன்றைய கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (1)
Share
தமிழக நிகழ்வுகள்1. போலி உதவி கமிஷனர்: திண்டுக்கல் அருகே கைதுதிண்டுக்கல் : திண்டுக்கல் அருகே, போலி உதவி கமிஷனரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சுங்கச்சாவடி உள்ளது. எஸ்.பி., அலுவலக தகவலை தொடர்ந்து, இங்கிருந்த ரோந்து போலீசார் நேற்று முன்தினம் இரவு, போலீஸ் ஸ்டிக்கர், சைரன் விளக்குடன் வந்த வாகனத்தை நிறுத்தி, அதில் இருந்தவரிடம்

தமிழக நிகழ்வுகள்
1. போலி உதவி கமிஷனர்: திண்டுக்கல் அருகே கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே, போலி உதவி கமிஷனரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சுங்கச்சாவடி உள்ளது. எஸ்.பி., அலுவலக தகவலை தொடர்ந்து, இங்கிருந்த ரோந்து போலீசார் நேற்று முன்தினம் இரவு, போலீஸ் ஸ்டிக்கர், சைரன் விளக்குடன் வந்த வாகனத்தை நிறுத்தி, அதில் இருந்தவரிடம் விசாரித்தனர்.அதில் இருந்த நபர், தான் உதவி போலீஸ் கமிஷனர் எனவும், விசாரணைக்கு வந்ததாகவும் தெரிவித்தார். அவரது அடையாள அட்டையை பார்த்தபோது போலி என்பது தெரிந்தது. பட்டிவீரன்பட்டி போலீசார், அவரை கைது செய்தனர்.



latest tamil news



வாகனம், அதிலிருந்த போலீஸ் சீருடை, பொம்மை துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. கைதானவர், சென்னை கொளத்துாரைச் சேர்ந்த சின்னப்பையன் மகன் விஜயன், 41 என்பது தெரிந்தது. வேலை இல்லாததால் மனைவி திட்டியுள்ளார். போலீஸ் துறையில் இருந்த ஆர்வத்தால், போலி உதவி கமிஷனராக நடித்துள்ளார்.இவர் பயன்படுத்திய போலீஸ் ஜீப், கோவையைச் சேர்ந்த ஜெயமீனாட்சி என்பவருக்கு சொந்தமானது. அதை, 2 லட்சம் ரூபாய் செலவில், அதிகாரிகள் வாகனத்தை போல மாற்றியுள்ளார். பதிவு எண்ணையும் மாற்றி, போலீஸ் உயரதிகாரி போல் 10 மாதங்களாக நடித்தது தெரியவந்தது.

2. 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் பெங்களூரு முக்கிய புள்ளி கைது
சென்னை : 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, பல கோடி ரூபாய் சுருட்டிய, பெங்களூரை சேர்ந்த முக்கிய புள்ளியை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

தேசிய தேர்வு முகமை நடத்திய, 'நீட்' தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக, தமிழக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.தனக்கு பதிலாக, வேறு ஒரு நபரை தேர்வு எழுத வைத்து தேர்ச்சி பெற்று, தேனி அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., வகுப்பில் சேர்ந்த உதித் சூர்யா, 21 மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன், 48 ஆகியோரை கைது செய்தனர்.பின், இந்த வழக்கில், ஏழு மாணவர்கள், அவர்களின் உறவினர்கள், இடைத்தரகர்கள் என, 20 பேரை கைது செய்தனர்.


latest tamil news



தொடர் விசாரணையில், 'நீட்' தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்திய போதும் ஆள்மாறாட்டம் செய்து, முறைகேடுகள் நடந்து இருப்பது தெரிய வந்தது.இந்த முறைகேடு வாயிலாக தேர்ச்சி பெற்று, சென்னை அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு படித்து வந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்குமார், 20 மற்றும் அவரது தந்தை தேவேந்திரன், 53 ஆகியோரை கைது செய்தனர். இவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டு, ஆள்மாறாட்டம்வாயிலாக, தனுஷ்குமாரை, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறச் செய்த, பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீஹர்ஷா, 38, என்பவரை நேற்று கைது செய்தனர்.

இவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர். இவர் கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பிரமுகர். இவர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வைக்க, கோடிக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.சிக்கியது எப்படி?இவர், தேவேந்திரனிடம், 20 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார். ஹிந்தி தெரியாத தனுஷ்குமாருக்கு பதிலாக, பீஹார் மாநிலத்தை சேர்ந்த, வேறு ஒருவரை தேர்வு எழுதச் சொல்லி, நீட் தேர்வில் தனுஷ்குமாரை முதல், 50 இடங்களுக்குள் தேர்ச்சி பெறச் செய்துள்ளார். பணம் வாங்கியதற்கு நம்பிக்கையை ஏற்படுத்த, தேவேந்திரனிடம் ஓட்டுனர் உரிமத்தின் நகலை கொடுத்துள்ளார்.

அதுவே, இவர் சிக்குவதற்கு காரணமாக அமைந்து விட்டது.இதற்கிடையே, நீட் தேர்வு மோசடி தொடர்பாக, இரண்டு பெண்கள் உட்பட, 10 பேரின் படங்களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்களில் ஒருவரை கூட, அவர்களால் நெருங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3. குழந்தைக்கு பாலியல் தொந்தரவு ; 50 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை
சென்னை : மூன்று வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, 50 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


latest tamil news


Advertisement


சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி, 50. கடந்த 2018ல், தான் குடியிருந்த வீட்டின் கீழ்பகுதியில் வசித்து வந்த தம்பதியின், மூன்று வயது குழந்தையை, தன் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த குழந்தையிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.தனக்கு வலி இருப்பதாக, மறுநாள் குழந்தை கூறியதையடுத்து, பெற்றோர் விசாரித்துள்ளனர்.அப்போது, ரவி தன்னிடம் நடந்து கொண்ட விபரத்தை குழந்தை கூறி உள்ளது.

இது குறித்து, குழந்தையின் தாயார் அளித்த புகாரில், எம்.கே.பி., நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ரவியை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குழந்தையை கடத்தி சென்ற குற்றச்சாட்டுக்காகவும், 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தையை, பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்காவும், ரவிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.மேலும், பாதிக்கப்பட்ட குழந்தையின்பெற்றோருக்கு, நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கவும், தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

4. சிவசங்கர் பாபா 3வது முறையாக போக்சோவில் கைது
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி உள்ளது. இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதானார்.


latest tamil news



அத்துடன் அவர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'போக்சோ' சட்டத்தில், இரண்டு வழக்குகள் பதிந்து கைது செய்தனர். தற்போது அவர் மீது, மூன்றாவதாகவும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.இந்த வழக்கு தொடர்பாக, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை, செங்கல்பட்டில் உள்ள, போக்சோ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி தமிழரசி, வரும், 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கஉத்தரவிட்டார்.

5. யாசகரிடம் ரூ.40 ஆயிரம் திருட்டு; ஐவர் கைது
திருநெல்வேலி : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், நொச்சிகுளத்தை சேர்ந்தவர் சண்முகையா 64. யாசகரான இவர் ரூ.40 ஆயிரத்தை சாக்குப்பையில் வைத்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு சங்கரன்கோவில் கடையில் டீ குடித்தார். அப்போது சாக்குப்பை திருட்டு போனது.புகாரையடுத்து சங்கரன் கோவில் எஸ்.ஐ.,ஜெயக்குமார் விசாரித்தார். டீகடை முன்பிருந்த சிசிடிவி, கேமரா காட்சிகளை கொண்டு திருட்டில் ஈடுபட்ட ராஜபாளையம் மேலகரப்பட்டி முருகன் 45, சங்கரன்கோவில் குமார் 19, சீனிவாசன் 32, உலகநாதன் 25, ஆவுடையாள்புரம் கணபதி 45 ஆகியோரை கைது செய்தனர்.


latest tamil news



இந்தியாவில் குற்றம் :
நீதிபதி கொலை வழக்கு 17 பேர் அதிரடி கைது
ராஞ்சி : ஜார்க்கண்டில் நீதிபதி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 243 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தன்பாத் மாவட்டத்தில் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியான உத்தம் ஆனந்த், சமீபத்தில் சாலையோரம் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோவை மோதி கொலை செய்யப்பட்டார். ஆட்டோவின் ஓட்டுனரான லக்கான் வர்மா மற்றும் அவரது உதவியாளர் ராகுல் வர்மா சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க, முதல்வர் ஹேமந்த் சோரன் முடிவு செய்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தன்பாத் மாவட்டத்தில் உள்ள 53 ஓட்டல்கள் உட்பட பல்வேறு இடங்களில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விபத்து ஏற்படுத்திய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின்போது சந்தேகத்தின் அடிப்படையில், 243 பேரை காவலில் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, 17 பேர் கைது செய்யப்பட்டனர்.இதற்கிடையே கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பொதுவெளியில் பகிர்ந்த எஸ்.ஐ.,யும், காலம் தாழ்த்தி வழக்குப்பதிவு செய்த போலீஸ் அதிகாரி உமேஷ் மாஞ்சியும், 'சஸ்பெண்ட்'செய்யப்பட்டனர்.


latest tamil news



உலக நிகழ்வுகள்
ஆப்கனை ஆக்கிரமிக்க முயற்சி: பாகிஸ்தான் மீது புகார்
டோரன்டோ : பாக்., ராணுவம் ஆப்கனை ஆக்கிரமிக்கும் திட்டத்துடன், தலிபான்களுடன் இணைந்து மறைமுகப் போரில் ஈடுபட்டுள்ளதாக, கனடா முன்னாள் அமைச்சர் அலெக்சாண்டர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. அங்கு தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கனடா முன்னாள் அமைச்சர் அலெக்சாண்டர் கூறியுள்ளதாவது:பாக்., எல்லையில் ஏராளமான தலிபான் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி ஆப்கன் செல்ல காத்திருக்கின்றனர். ஆப்கனை ஆக்கிரமிக்கும் முயற்சியில் பாக்., ஈடுபடுவதை சிலர் மறுக்கின்றனர். அவர்கள் ஆப்கனுக்கு எதிராக பாக்., நடத்தும் மறைமுகப் போர் மற்றும் போர் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதாகவே கருதப்படுவர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதற்கிடையே ஆப்கனில் இருந்து தங்கள் ராணுவத்தினர் 95 சதவீதம் பேர் வெளியேறி விட்டதாக, அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X