அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு உள்ளடியா? : தி.மு.க.,வை பார்த்து அலறுது அ.தி.மு.க.,

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை. திருப்பத்துார், நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ஒன்பது மாவட்டங்களில், செப்டம்பர் 15 க்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், ஒன்பது மாவட்டங்களிலும் தி.மு.க., வெற்றி பெற்றே ஆக

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை. திருப்பத்துார், நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ஒன்பது மாவட்டங்களில், செப்டம்பர் 15 க்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், ஒன்பது மாவட்டங்களிலும் தி.மு.க., வெற்றி பெற்றே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.latest tamil newsகுற்றச்சாட்டு : மாவட்ட செயலர்கள் மற்றும் மாவட்ட அமைச்சர்களுக்கு தனித்தனியாக, தேர்தல் தொடர்பாக 'அசைன்மென்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கட்சியின் வெற்றிக்காக, தி.மு.க., தரப்பு, மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் ஆணையம் வாயிலாக, குறுக்கு வழியில் சில வேலைகளை செய்கிறது என, அ.தி.மு.க., குற்றம் சாட்டுகிறது. இதுகுறித்து, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள ஒன்பது மாவட்டங்களிலும், சில ஒன்றிய சேர்மன், பஞ்சாயத்து சேர்மன் பதவிகள், கடந்த ஆட்சி காலத்தில் பெண்களுக்கான ஒதுக்கீட்டு பட்டியலில் இருந்தன.

அந்த இடங்களில், தி.மு.க.,வால் வெற்றி பெற முடியாத சூழல் நிலவுகிறது. அதனால், அந்த இடங்களை பொது பட்டியலுக்குள் கொண்டு வந்து, ஆணும், பெண்ணும் போட்டியிடுவது போல மாற்றியுள்ளனர். இதுபோல, பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை அதிகாரிகள் வாயிலாக கச்சிதமாக முடித்து, மாநில தேர்தல் ஆணைய ஒப்புதலுக்கும் அனுப்பி விட்டனர். வெளிப்பார்வைக்கு, தேர்தல் ஆணையம் செயல்படாதது போலவும், தி.மு.க., உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராகாதது போலவும் இருக்கிறது. ஆனால், தி.மு.க., தரப்பில், எந்தந்த இடங்களில் யாரை நிறுத்துவது என்பது வரை, பணிகளை முடித்து விட்டனர்.


latest tamil newsஅவகாசம் : கூட்டணி கட்சியினருடன் பேச வேண்டியது தான் பாக்கி. அதையும் ரகசியமாக துவங்கி விட்டனர். அந்த பணிகள் முடியும் நேரத்தில், 20 நாட்கள் அவகாசத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, முடிவுகளை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும் என்ற ரீதியில், தி.மு.க., செயல்படுகிறது. ஆனால், அ.தி.மு.க., தரப்பில், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதில், மிகவும் சுணக்கமாக உள்ளனர். இவ்வாறு அ.தி.மு.க., வினர் கூறினர்.

குறை சொல்லி என்ன பலன்?தி.மு.க.,வினர் கூறியதாவது:அ.தி.மு.க.,வினர் சொல்வது போல, உள்ளாட்சி தேர்தலுக்கு, தி.மு.க., எல்லா நிலைகளிலும் தயாராக இருக்கிறது. கூட்டணி கட்சியினர், சில இடங்களுக்கு மல்லுக்கட்டி வருகின்றனர். அதனால், அவர்களோடும் பேசி சமாதானமாக போகுமாறு, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா மூன்றாவது அலை வருவதற்குள், உள்ளாட்சி தேர்தலை முடித்து விட வேண்டும் என்பதில், அரசும், மாநில தேர்தல் ஆணையமும் உறுதியாக உள்ளன. மற்றபடி, பொதுப் பட்டியலில் இருந்த இடங்களை, அ.தி.மு.க.,வினர் தங்களுக்கு சாதகமாக, பெண்களுக்கான இடமாக மாற்றினர்.

அவற்றை, நாங்கள் ஏற்கனவே இருந்த நிலைக்கு தான் கொண்டு வந்திருக்கிறோம்; புதிதாக எதையும் செய்யவில்லை. போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்த்து, தி.மு.க., கடுமையாக உழைக்கிறது. அ.தி.மு.க.,வும் உழைத்தால், வெற்றி பெறாலாமே. அதை விடுத்து, எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பதால் என்ன பலன்? இவ்வாறு, தி.மு.க.,வினர் கூறினர்.
-- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
03-ஆக-202120:27:23 IST Report Abuse
S. Narayanan பொது தேர்தலில் கூட்டத்தை கூட்டி கொறோனாவால் மக்கள் குடும்பத்தை இழந்து வேலை இழந்து நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் தேர்தல் இப்போது வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தால் இதை செய்து இருக்கலாம்.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
03-ஆக-202116:26:52 IST Report Abuse
Vijay D Ratnam ஒன் அண்ட் ஒன்லி தலைமை இருந்தால் மட்டுமே கட்சி ஒழுங்காக வழிநடக்கும். அதிமுக இந்த இரட்டை தலைமை சிஸ்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் அதிமுக செயல்படவேண்டும். உங்கள் எதிராளியை பாருங்கள் தகுதி இருக்கோ இல்லியோ அப்பனுக்கு பின் மவன் என்ற பாரம்பரியப்படி ஒரே தலைமை. அந்த தலைமையின் கீழ் செயல்படுகிறது. சுதந்திர தினம் குடியரசு தினம் தெரியாத தத்தி தற்குரி இந்தாண்டு சுதந்திர தின கொடியேற்ற போகிறது.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஆக-202123:23:19 IST Report Abuse
தமிழவேல் இரட்டை இலைக்கு ஒன் அண்ட் ஒன்லி தலைமை தானே, அது இப்போதானே வெளியே வந்திருக்கு. இந்த இரட்டை தலை, கால்ல விழும்....
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
03-ஆக-202110:03:51 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் மக்கள் சேவை என்பதை விட பணம் குவிக்கும் வழியாகிவிட்டது அரசியல் டீம்காவுக்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X