'மாஜி' அதிகாரிக்கு சலுகையா? மெஹபூபா முப்தி கேள்வி!

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஸ்ரீநகர் : ''பயங்கரவாதிகள் தப்பிக்க உதவிய முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு சலுகை காட்டப்பட்டுள்ளது ஏன்,'' என, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளை தன் காரில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாக, காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் உதவி எஸ்.பி., தவிந்தர் சிங் கைது

ஸ்ரீநகர் : ''பயங்கரவாதிகள் தப்பிக்க உதவிய முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு சலுகை காட்டப்பட்டுள்ளது ஏன்,'' என, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.



latest tamil news



ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளை தன் காரில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாக, காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் உதவி எஸ்.பி., தவிந்தர் சிங் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அரசியல் சாசனத்தின் 311வது பிரிவின் கீழ் அவரை பதவியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்து துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். இந்த சட்டப் பிரிவின்படி ஓர் அதிகாரி மீதான விசாரணை ரத்து செய்யப்படும். உயர் நீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு தொடர முடியும்.


latest tamil news



இது குறித்து மெஹபூபா முப்தி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் அப்பாவி மக்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் மீது எப்போது விசாரணை துவங்கும் என்பதே தெரியவில்லை.ஆனால் பயங்கரவாதிகளை தன் காரில் பாதுகாப்பாக அழைத்து சென்ற முன்னாள் உதவி எஸ்.பி., தவிந்தர் சிங்குக்கு, மத்திய அரசு சலுகை காட்டியுள்ளது .பயங்கரவாதிகள் தப்பி செல்ல உதவியதில், வேறு ஏதாவது உள்நோக்கம் இருக்குமா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
03-ஆக-202114:27:28 IST Report Abuse
pradeesh parthasarathy தேர்தலுக்காக நடத்தப்பட்ட புலவன் தாக்குதல் தான் .... அர்னாப் கோஸ்வாமி யின் வரிகளை மீண்டும் நினைவு கூறுகிறேன் .... புல்வாமா தாக்குதல் நடந்தபோது கையி கொட்டி ஆர்ப்பரியுங்கள் என்று அர்னாப் கோஸ்வாமியின் கூறிய வாக்குகள் தான் ஞாபகத்துக்கு வருகிறது ..
Rate this:
Cancel
03-ஆக-202113:53:08 IST Report Abuse
மதுமிதா சிறுவர்களுக்கு கல் வித்தை கற்றுத் தந்த பெண் இன்னமும் எங்கள் இந்தியாவில் தான் இருக்கிறீர்களா.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
03-ஆக-202108:38:39 IST Report Abuse
Nagarajan D எந்நாளும் தீவிரவாதியாக உன் குடும்பமே எல்லா வசதிகளையும் அனுபவிக்கும் போது வேறு யார் என்ன செய்தால் உனக்கு என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X