பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாமலை 'வீடியோ' பா.ஜ.,வில் வரவேற்பு

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை : சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழக தலைவர்களை, தேசம் முழுதும் எடுத்து செல்லும் நிகழ்வை சுட்டிக்காட்டி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள 'வீடியோ' பதிவு, அக்கட்சி தொண்டர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.சிறிய வட்டம் : வீடியோவில், அண்ணாமலை பேசி உள்ளதாவது:சுதந்திரம் கிடைப்பதற்காக, பல காலமாக பல மன்னர்கள், அற்புதமான மனிதர்கள், தமிழ் மண்ணில் போராடினர்.

சென்னை : சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழக தலைவர்களை, தேசம் முழுதும் எடுத்து செல்லும் நிகழ்வை சுட்டிக்காட்டி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள 'வீடியோ' பதிவு, அக்கட்சி தொண்டர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.



latest tamil news



சிறிய வட்டம் : வீடியோவில், அண்ணாமலை பேசி உள்ளதாவது:சுதந்திரம் கிடைப்பதற்காக, பல காலமாக பல மன்னர்கள், அற்புதமான மனிதர்கள், தமிழ் மண்ணில் போராடினர். உங்களுக்கு தெரியும். இப்போது இருக்கிற ஓட்டு அரசியலில், பல கட்சிகளின் அரசியல் பார்வையில், இந்த தலைவர்களும் சிறிய வட்டத்தில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.நான் சில பெயர்களை உங்களுக்கு கூறுகிறேன். எப்படிப்பட்ட பூரிப்பு நமக்கு வருகிறது என்று பாருங்கள். வீரபாண்டிய கட்ட பொம்மன், பூலிதேவன், வல்வில் ஓரி, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, வீரன் அழகுமுத்துகோன், வீரன் சுந்தரலிங்கனார், ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார்.

இவர்கள் அனைவரும் தமிழ் மண்ணுக்காக, நம்முடைய சுதந்திரத்திற்காக தன்னுடைய உயிரை கொடுத்தவர்கள். வெள்ளையனை எதிர்த்து, தனி மனிதனாக தன்னுடைய சமுதாயத்தை திரட்டி போராடி, சுதந்திர வேள்வியை மண்ணில் விதைத்தவர்கள்.நான் தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற பின், இந்த தலைவர்கள் அனைவரையும் இளைய சமூகத்தினருக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்பது, மிக பெரிய ஆசையாக இருந்தது.தீரன் சின்னமலைதமிழகம் முழுதும், இந்த தலைவர்களை எடுத்து செல்ல வேண்டும்.


latest tamil news



பெரிய விழாவாக எடுத்து, இளைய சமுதாயத்திடம் எடுத்து செல்ல வேண்டும். அவர்களை தேசம் முழுதும் எடுத்து செல்லும் முதல் நிகழ்ச்சியாக, ஆடி பெருக்கில் நான், தீரன் சின்னமலைக்கும், வல்வில் ஓரிக்கும் அஞ்சலி செலுத்த உள்ளேன். இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yavarum kelir - yadhum vore ,இந்தியா
06-ஆக-202115:06:59 IST Report Abuse
yavarum kelir kodi kaattha kumaran, வாஞ்சிநாதன் பெயரை விட்டு விடீர்களே
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
06-ஆக-202111:36:13 IST Report Abuse
தஞ்சை மன்னர் Please don't repeat the same comment
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
06-ஆக-202111:35:33 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஆனா நாம காட்டி கொடுக்க எழுதி கொடுத்த வாஜ்பே , கோழை சர்க்கார் போல இல்லை அப்படித்தானே சொல்லவரிங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X