பத்திரிகையாளரை தலிபான்கள் கொடூரமாக கொன்றது அம்பலம்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
புதுடில்லி : இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கை, தலிபான் பயங்கரவாதிகள் மிக கொடூரமாக கொலை செய்துள்ளது பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில், அந்த நாட்டு ராணுவத்தினருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் நீண்ட காலமாக மோதல் நடந்து வருகிறது.இது குறித்து செய்தி மற்றும் புகைப்படங்களை

புதுடில்லி : இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கை, தலிபான் பயங்கரவாதிகள் மிக கொடூரமாக கொலை செய்துள்ளது பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.



latest tamil news



தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில், அந்த நாட்டு ராணுவத்தினருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் நீண்ட காலமாக மோதல் நடந்து வருகிறது.இது குறித்து செய்தி மற்றும் புகைப்படங்களை சேகரிக்க ஆப்கன் தேசிய பாதுகாப்பு படையினருடன், இந்தியாவைச் சேர்ந்த டேனிஷ் சித்திக் சென்றார். இவர் புகைப்பட செய்தியாளர்களுக்கு வழங்கப்படும், மிக உயர்ந்த, 'புலிட்சர்' விருது பெற்றார்.

இந்நிலையில் கடந்த மாதம் ஸ்பின் போல்டக் பகுதிக்கு சித்திக் சென்றார். அப்போது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் சித்திக் காயம் அடைந்தார்.சிகிச்சைக்காக அருகில் இருந்த மசூதியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள், பத்திரிகையாளர் என தெரிந்தே சித்திக்கை கொன்றனர்.இந்நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் குறித்து அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: சித்திக் உடலில், 12 குண்டுகள் இருந்தன.


latest tamil news



குண்டு காயங்களை தவிர, அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின்னும், தலிபான்களின் வெறி அடங்கவில்லை. அவரது உடலை ஒரு வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.அவரது உடலில் ஒரு வாகனத்தை பல முறை ஏற்றி முகத்தைச் சிதைத்துள்ளனர். அவரது முகம் மற்றும் மார்பில் டயர்களின் தடங்கள் பதிந்திருந்தன. இவற்றை அவரது பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
03-ஆக-202116:15:15 IST Report Abuse
BalaG ஆப்கான் புகைப்படைக்காரரை விடுத்து இந்திய புகைப்படகாரரை அழைத்து சென்ற காரணம் என்ன? அவர்கள் நாட்டில் புகைப்படம் எடுப்பவரே இல்லையா? அல்லது இந்திய அரசாங்கம் வேண்டும் என்றே இவரை அனுப்பி வைத்ததா? ஏதோ ஒரு நாட்டில் நடக்கும் பிரச்சனைக்கு இவர் ஏன் சாக வேண்டும்? இது திட்டமிடபட்டு நடந்ததா? செய்தி முழுமை பெறவில்லை, அரைகுறையாக உள்ளது..
Rate this:
raja - Cotonou,பெனின்
03-ஆக-202116:32:43 IST Report Abuse
rajaஎங்க... இந்த ஆளு...ஒரு விளம்பரத்துக்காகவும் புகழுக்காகவும்.. வீரப்பனை பாக்கப்போன கோவாலு போல போயிருக்கான்... அரசுக்கும் இதுக்கும் ஏன் முடிச்சிபோடறீங்க........
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
03-ஆக-202116:39:11 IST Report Abuse
Suppanஅந்த தேச விரோதி டானிஷ் சிதிக்கி இந்திய அரசாங்கத்தால் அனுப்பப் படவில்லை. ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்றார். தன்னுடைய முடிவை தன்னுடைய இனத்தாலேயே தேடிக் கொண்டார்....
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
03-ஆக-202114:57:16 IST Report Abuse
N.K அதான் மன்னிப்பு கேட்டுட்டாங்களாமே
Rate this:
Cancel
பொறியாளன் இளங்கோ., கொங்குநாடு. மூர்க்கர்களுக்கு முக்தி எப்போது தான் வாய்க்குமோ?. எல்லா புகழும் திரு நபி அடியார் அவர்களையே சேரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X