எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

'தமிழில் அர்ச்சனை செய்ய நாங்கள் தயார்!'

Added : ஆக 03, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று முன்தினம் பேட்டி அளித்த போது, 'கோவில்களில் அடுத்த வாரம் முதல், தமிழில் அர்ச்சனை நடைபெற உள்ளது. முதல்கட்டமாக, சென்னை கபாலீஸ்வரர் கோவிலில், தமிழில் அர்ச்சனை நடைபெறும். இதற்காக, 'அன்னைதமிழில் அர்ச்சனை' என்ற, பெயர் பலகை வைக்கப்படும். 'பிரசித்தி பெற்ற, 47 பெரிய கோவில்களில், இது நடைமுறைப் படுத்தப்பட்டு, பின் சிறிய
 'தமிழில் அர்ச்சனை செய்ய நாங்கள் தயார்!'

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று முன்தினம் பேட்டி அளித்த போது, 'கோவில்களில் அடுத்த வாரம் முதல், தமிழில் அர்ச்சனை நடைபெற உள்ளது.

முதல்கட்டமாக, சென்னை கபாலீஸ்வரர் கோவிலில், தமிழில் அர்ச்சனை நடைபெறும். இதற்காக, 'அன்னைதமிழில் அர்ச்சனை' என்ற, பெயர் பலகை வைக்கப்படும். 'பிரசித்தி பெற்ற, 47 பெரிய கோவில்களில், இது நடைமுறைப் படுத்தப்பட்டு, பின் சிறிய கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்' என்றார்.இதுகுறித்து, சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பாலாஜி குருக்கள் கூறியதாவது:மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை பொறுத்தவரை, கருணாநிதி முதல்வராக இருந்தபோதே, தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டுள்ளது.

நாயன்மார்களான திருநாவுக்கரசர் அருளிய, 'போற்றி திருத்தாண்டகம்' மாணிக்கவாசகர் அருளிய, 'போற்றி திருஅகவல்' ஆகியவற்றில் உள்ள நாமாவளியை போற்றி, எங்களது முன்னோர்கள் அர்ச்சனை செய்து வந்தனர். அதன் வழியாக,நாங்களும் இந்த அர்ச்சனையை தொடர்ந்தோம்.கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள அனைத்து அர்ச்சகர்களும், தமிழில் அர்ச்சனை செய்வர். பக்தர்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய, நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.வடபழநி ஆண்டவர் கோவிலில்சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், தினமும் முதல் காலம், உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாம பூஜை என, நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதில், அதிகாலை, 5:30 மணிக்கு நடத்தப்படும் முதல் கால பூஜை, தமிழில் நடத்தப்படுகிறது. இந்த நடைமுறை, இரண்டு ஆண்டுகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.அறுபது ஆண்டுகளாக தமிழ் அர்ச்சனை பயணம்!ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற விவகாரம், 60 ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என, 1955ம் ஆண்டே போராட்டங்கள் நடந்துள்ளன. குன்றக்குடி மடத்தின், அப்போதைய ஆதீனம் தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஆதரவாக இருந்துள்ளார்.

லால்குடி, பூவாளூர் கிராமத்தில் உள்ள திருமூலநாத சுவாமி கோவிலில், 1969ல், தமிழில் அர்ச்சனை நடத்தப்பட்டது.'அனைத்து கோவில்களிலும்தமிழில் அர்ச்சனை செய்யப்படும்' என, 1971ம் ஆண்டு, அப்போதைய அறநிலையத் துறை அமைச்சர்கண்ணப்பன், சட்டசபையில் அறிவித்தார். அதை ஆதரித்து கருணாநிதி பேசினார்.'கோவில்களில் தமிழில் மட்டுமே, அர்ச்சனை செய்ய வேண்டும்' என, 1974ல், அறநிலையத் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. பின், அது திரும்ப பெறப்பட்டது.எம்.ஜி.ஆர்., தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியில், 1980ல் அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், கோவில்களில் தமிழ் அர்ச்சனையை வலியுறுத்தினார்.

மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலில், 1982ல் தமிழிலேயே அர்ச்சனை செய்யப்படும் என, அறங்காவலர் குழு அறிவித்தது. அதன்பின், 1998ல் முதல்வராக இருந்த கருணாநிதி, சட்டசபையில், 'கோவில்களில் தமிழ் வழிபாட்டு மொழியாக இருப்பதற்கு, எதிர்ப்பு தெரிவிப்பவர்களை தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதேநேரத்தில், வேறு மொழிகளில் கடவுளை வழிபடக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை' என்றார்.
- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CBE CTZN - Coimbatore,இந்தியா
04-ஆக-202111:44:31 IST Report Abuse
CBE CTZN இறைவனுக்கு அரும்பெரும் தொண்டு செய்து இறைவனுக்கு அடுத்த இடத்தில் வைத்து வழிபடும் தகுதிபெற்ற, இறைவனாலேயே அங்கீகரிக்கப்பட்ட ஆழ்வார்கள் நாயன்மார்கள் அருளிய பதிகம் பல இருக்க, வட மொழியில் இருப்பதை தமிழ்ப்படுத்தி துதி செய்ய வேண்டிய அவசியமில்லை.. மக்களும் புரிந்த மொழியில் இருக்கும் பாடல்களையே விரும்புவர்..
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
03-ஆக-202121:14:24 IST Report Abuse
Arul Narayanan தமிழ் மீடியம் என்றால் மட்டம் என்று நினைக்கும் டமிழியன்ஸ் அர்ச்சனையை மட்டும் தமிழிலா கோருவார்கள்?
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
03-ஆக-202121:04:38 IST Report Abuse
Sivagiri இப்போ - தமிழ்நாட்டில் கிறிஸ்துவ மதம் ஹிந்து மாதமாக மாறிக் கொண்டிருக்கிறது . , எதோ அபிஷேகமாம் , ஆராதனையாம் ., ஸ்தோத்திரமாம் , ஜபம் , தபஸ் , பரமாத்மாவாம் . அஷ்டோத்ரம் , சதநாமாவளி , சகஸ்ரநாமம் , லட்சார்ச்சனை , கோடி அர்ச்சனை , குடும்ப அர்ச்சனை , கல்யாண அர்ச்சனை , குழந்தை பெற அர்ச்சனை , வேலை கிடைக்க அர்ச்சனை , வியாதி போக அர்ச்சனை , இன்னும் அமாவாசை , பௌர்ணமி முழுஇரவு ஜெபமாம் - அற்புத சுகமாம் , பிரசாதங்கள் , அன்னதானங்கள் , கூழ் காய்ச்சுதல் , ஆடு கோழி வெட்டி பொங்கல் வைத்தல் , நேர்த்திக்கடன் செலுத்த , மொட்டை போட்டு காதுகுத்த தனி வசூல் . , ஹிந்து கோவில்களை போல தங்ககொடிமரமாம் . , பலிபீடமாம் , ஹிந்து கோவில்களை போலவே கோபுரங்களில் வேல் , சூலம் வைத்துக் கொண்டு காவி கட்டிக்கொண்டு இயேசு சிலைகள் ., . . ஆயர்களை - ஐயர் என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள் - பூணூலும் போட்டுக் கொள்வார்கள் போலிருக்கு - - - அனைத்தையும் எடுத்துக் கொண்டார்கள் , ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே - நெற்றியில் விபூதி / நாமம் மட்டும் கிடையாது , கட்டை விரலால் சும்மா வெறுங்கையால் திருநீறு பூசி விடுவது போல சிலுவை வரைவார்கள் ., மற்றபடி அனைத்தும் உண்டு - எல்லாம் காசு படுத்தும் பாடு . . . ஐயோ ஐயோ . . . இப்போ இவர்களை - அவாள்-இவாள் என்றுதான் அழைக்க வேண்டுமாம் . . . அதன்படி பார்த்தால், அவாள் ஆட்சிதான் நடக்குது . . . சீக்கிரமே நம் தமிழக ஒன்றியபிரதேசம் , ஓம் ஸ்ரீ ஸ்ரீ யேசுஸ்வாமிஜி மஹாராஜ் மஹாமடம் என்று மாற்றம் பெற்றாலும் ஆசிரியமில்லை . . .
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
04-ஆக-202119:27:19 IST Report Abuse
தமிழ்வேள்ஆனால் ஸ்பெஷல் பாவமன்னிப்புகள் மட்டும் கைவிடப்படாமல் கனஜோராக நடக்கும் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X