சீன ஆய்வகத்தில் கொரோனா ஆதாரத்துடன் அமெரிக்கா புகார்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
வாஷிங்டன் : சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க குடியரசு கட்சி தெரிவித்துள்ளது. அமெரிக்க குடியரசு கட்சியின் பார்லி., வெளியுறவு குழு பிரதிநிதி மைக் மெக்கால் கொரோனா குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் விலங்குகள் சந்தையில் இருந்து பரவவில்லை; அது,

வாஷிங்டன் : சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க குடியரசு கட்சி தெரிவித்துள்ளது.



latest tamil news



அமெரிக்க குடியரசு கட்சியின் பார்லி., வெளியுறவு குழு பிரதிநிதி மைக் மெக்கால் கொரோனா குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் விலங்குகள் சந்தையில் இருந்து பரவவில்லை; அது, வூஹான் வைரஸ் ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வுக் கூடத்தில் மனிதரை தாக்கும் வகையில் கொரோனா வைரசை உருவாக்கவும், இது பற்றி வேறு யாரும் அறியாதபடி மறைப்பதற்கான பணிகளும் நடந்துள்ளன.

இதற்கு நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கொரோனா வைரஸ், 2019, செப்., 12க்கு முன்பாகவே, வூஹான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியே கசிந்துள்ளதை நிரூபிக்க வலுவான சாட்சியங்கள் உள்ளன. வூஹான் ஆய்வகத்தில் அபாயகரமான கழிவுகளை பராமரிக்கும் பிரிவை சீரமைக்க நிதி கோரப்பட்டுள்ளது. இதற்காக, 11 கோடி ரூபாய் ஒதுக்கும்படி ஆய்வக நிர்வாகம், சீன அரசிடம் விண்ணப்பித்துள்ளது.


latest tamil news



ஆய்வகம் செயல்படத் துவங்கி இரு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அபாயகரமான கழிவுகளைக் கையாளும் வசதி தேவைப்பட்டுள்ளது.இது, கொடிய கொரோனா வைரஸ் அங்கிருந்து கசிந்திருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு வலு சேர்த்துள்ளது. இதுபோல பல ஆதாரங்கள் உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
03-ஆக-202116:57:28 IST Report Abuse
Kalyan Singapore தேவையில்லாத பொது அறிக்கை விட்டு பிறகு சிக்கலில் மாட்டிப்பானேன் ? இந்திய விஞ்சானிகள் நிலைபாடு முற்றும் சரியே .இந்த அறிக்கைகள் எல்லாம் குடியரசு கட்சி அந்தோணி பாஉச்சி யின் திருட்டுத்தனங்களை வெளிக்கொணரவே செய்கின்றன . நாளை வேறொரு அறிக்கை முற்றும் மாறாக வரலாம் எனவேதான் மற்ற நாடுகளின் வால் பிடிக்காமல் நம் விஞ்சானிகள் அமைதியாக இருக்கிறார்கள்
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
03-ஆக-202113:43:24 IST Report Abuse
J.Isaac வானிலை மாதிரி அறிக்கை வெளியிடும் இந்திய விஞ்ஞானிகளும் சுகாதார துறையும் இது பற்றி இன்னும் வாயை திறக்கவில்லையே.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஆக-202113:05:34 IST Report Abuse
தமிழவேல் உலக நாடுகள் நிரூபித்து, நஷ்டஈடுகளுக்கு வழி ஏற்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X