பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோவை : கொரோனா தொற்று பரவல் தடுக்கும் நோக்கத்துடன், கோவை மாவட்டத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளன.கொரோனா தொற்று தடுப்பு நடைமுறைகள் தொடர்பாக, வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் அரசு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இன்று (ஆக.,3) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கூட்டத்தில் கலெக்டர்

கோவை : கொரோனா தொற்று பரவல் தடுக்கும் நோக்கத்துடன், கோவை மாவட்டத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளன.latest tamil newsகொரோனா தொற்று தடுப்பு நடைமுறைகள் தொடர்பாக, வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் அரசு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இன்று (ஆக.,3) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கூட்டத்தில் கலெக்டர் சமீரன் அறிவித்தார்.


latest tamil newsபுதிய கட்டுப்பாடுகள் வருமாறு:அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே செயல்படும். மீன், இறைச்சிக்கடைகள், காலை 6:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை; டாஸ்மாக் மதுக்கடைகள், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அனைத்து சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்களில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.


latest tamil newsஅனைத்து பூங்காக்களிலும் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப் படுகிறது. அனைத்து மால்கள், பன்னடுக்கு வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி மாட்டுச்சந்தை ஆக.,4 முதல் இயங்க தடை விதிக்கப் படுகிறது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K BALASUBRAMANIAN - sattur,இந்தியா
03-ஆக-202115:34:25 IST Report Abuse
K BALASUBRAMANIAN முதலில் கேரளாவில் இருந்து ரயில் மூலமும் பஸ் மூலமும் வருபவர்களை கட்டுப்படுத்துங்கள். அப்படி செய்தாலே கோவையில் கொரோனா குறைந்து விடும்.
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
03-ஆக-202112:10:36 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN நீங்கள் ஆயிரத்தெட்டு கட்டுபாடுகள் போடுங்கள். ஆனால் ஒன்று மட்டும் செய்யவும் தயவுசெய்து தெருசாலைகளை போட்டு பாதியிலேயே விட்ட சாலைகளை சரிசெய்து தரவும். சாலைகளில் உள்ள குண்டும் குழிகளை மூடவும். நேற்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அவரது பட்டாளம் திமுக வட்டம் மாவட்டம் ஆகியோர் ஒரு பத்து காரில் கோடீசீயாவிலிருந்து வந்த போது நானே எனது TVS Scooterல் அவர்களது அணிவகுப்பை மறைப்பது போல் எதிரில் செல்ல வேண்டி இருந்தது காரணம் பாதி சாலை 2 கிலோமீட்டருக்கு காணமல் போய்விட்டது. கோரோணா வந்து மருத்துவ மனைக்கு செல்ல கூடாது என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சாலைகளில் அடிபட்டோ அல்லது வேறு நோய் காரணமாக மருத்துவ மனை பக்கமே போகக்கூடாது. மருத்துவ மனை சென்றால் கோரோணா தாமக நம்முடன் நம்வீட்டிற்கு வந்து விடும்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஆக-202111:43:16 IST Report Abuse
Pugazh V ஏன் பேரிடர் தீர்மானத்தில் கூட.இப்படி மதவாதத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X