அரசியல் செய்தி

தமிழ்நாடு

நக்சல் ஆகும் எண்ணம்: வைகோ மகன் 'திடுக்'

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
ஜபாளையம் : ''அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யங்களை பார்த்த போது, நக்சல் ஆகிவிடும் எண்ணம் எனக்கு உதித்தது,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மகன் துரை வையாபுரி பேசினார்.விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் ம.தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில் நடந்த திராவிட இயக்க பயிற்சி பாசறை கூட்டத்தில் அவர் பேசியதாவது: எந்த தனிப்பட்ட மொழிக்கும், திராவிடம் எதிரானது கிடையாது.
வைகோ, துரை வையாபுரி, நக்சல், MDMK, Vaiko,மதிமுக

ஜபாளையம் : ''அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யங்களை பார்த்த போது, நக்சல் ஆகிவிடும் எண்ணம் எனக்கு உதித்தது,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மகன் துரை வையாபுரி பேசினார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் ம.தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில் நடந்த திராவிட இயக்க பயிற்சி பாசறை கூட்டத்தில் அவர் பேசியதாவது: எந்த தனிப்பட்ட மொழிக்கும், திராவிடம் எதிரானது கிடையாது. நுனிப்புல் மேய்ந்து, திராவிடம் பற்றி விளக்கம் அளிப்பவர்கள் மக்களை குழப்பி வருகின்றனர். திராவிடம், மொழி ஆதிக்கத்திற்கு மட்டுமே எதிரானது.


latest tamil news


வைகோ மகனுக்கு நக்சல் ஆக எண்ணம்


நான், 35 வயதில் தொழில் செய்து கொண்டிருந்தபோது அரசு அலுவலகங்களில் லஞ்ச, லாவண்யம் தலைவிரித்து ஆடியது என்னுடைய கோபத்தை அதிகப்படுத்தியது. 45 வயதுக்கு மேல் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு நக்சல் ஆகிவிடலாம் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. இவ்வாறு, அவர் பேசினார்.


தி.மு.க., வினர் அதிருப்தி


துரை வையாபுரிக்கு தற்போது, 48 வயது நிறைவடைந்துள்ளது. அவரது, 35 வயதில் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தி.மு.க., ஆட்சியை மறைமுகமாக விமர்சனம் செய்வது போல் அவரது பேச்சு அமைந்தது தி.மு.க., வினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
06-ஆக-202112:26:03 IST Report Abuse
INDIAN Kumar லஞ்சமும் குடியும் ஒழிந்தால் நாடு உருப்படும்.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
04-ஆக-202120:29:17 IST Report Abuse
jagan "நான், 35 வயதில் தொழில் செய்து கொண்டிருந்தபோது" - சிகரெட் கம்பனி தானே அந்த தொழில்? பீடி சிகரட் ஊழலை விட மோசம்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஆக-202104:19:55 IST Report Abuse
meenakshisundaram ஐயோ அப்போ உங்க அப்பாரு நக்சல் இல்லியா ?நாங்க அப்படில்லா நெநசிக்கிட்டிருக்கோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X