தாக்குதலுக்கு தயாரான பயங்கரவாதிகள்; 4 பேர் போலீசில் சிக்கினர்

Added : ஆக 03, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வெடிகுண்டுகளை தயாரித்த நான்கு பயங்கரவாதிகளை, போலீசார் கைது செய்தனர்.ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிக்க பாதுகாப்பு படையினருடன், போலீசாரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அனந்த்நாக் மாவட்டத்தில் பெரிய அளவிலான தாக்குதல் நடத்த
LashkarETaiba, Terror Module, JK, Police, Busts, 4 Arrested, ஜம்மு காஷ்மீர், பயங்கரவாதிகள், தாக்குதல், போலீஸ், கைது

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வெடிகுண்டுகளை தயாரித்த நான்கு பயங்கரவாதிகளை, போலீசார் கைது செய்தனர்.

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிக்க பாதுகாப்பு படையினருடன், போலீசாரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அனந்த்நாக் மாவட்டத்தில் பெரிய அளவிலான தாக்குதல் நடத்த திட்டமிட்டு, வெடிகுண்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பினருடன் இணைந்து செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.


latest tamil news



இவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அனந்த்நாக் மாவட்டத்தில் மிகப்பெரும் தாக்குதல் நடத்துவதற்கான சதித் திட்டமும் முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
03-ஆக-202114:15:58 IST Report Abuse
sridhar arrest of innocent terrorists.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-ஆக-202112:23:30 IST Report Abuse
Kasimani Baskaran விசாரணை என்று இன்னும் பத்து வருடம் வரிப்பணம்தான் வீண்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
03-ஆக-202108:46:59 IST Report Abuse
 N.Purushothaman போட்டு தள்ளுங்க ..... இதுக எல்லாம் பூமிக்கு பாரம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X