இந்திய ஹாக்கி அணி அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (7+ 25)
Share
Advertisement
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. 11வது நாளான இன்று (ஆகஸ்ட் 3) ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இந்த ஒலிம்பிக்கில் இதுவரை தோல்வியை சந்திக்காத பெல்ஜியத்தை எதிர்கொண்டது. ஆட்டம் துவங்கிய
Olympics, Hockey, TeamIndia, IND, Losses, SemiFinal, ஒலிம்பிக், ஹாக்கி, இந்தியா, அரையிறுதி, தோல்வி, பெல்ஜியம்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. 11வது நாளான இன்று (ஆகஸ்ட் 3) ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இந்த ஒலிம்பிக்கில் இதுவரை தோல்வியை சந்திக்காத பெல்ஜியத்தை எதிர்கொண்டது. ஆட்டம் துவங்கிய சில நிமிடத்தில் பெல்ஜியத்தின் லாக் லியூபெர்ட் முதல் கோலை அடித்தார். பதிலுக்கு அசத்தலாக விளையாடிய இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் 7-வது நிமிடத்திலும், மந்தீப் சிங் 8-வது நிமிடத்திலும் கோலடித்தனர். முதல் கால்பகுதியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.


latest tamil news


இரண்டாவது கால்பகுதியில் பெல்ஜியம் அணி, பெனால்டி கார்னர் மூலம் ஹென்ட்ரிக்ஸ் ஒரு கோல் அடிக்க, ஆட்டம் சமனானது. இதனால், போட்டியில் மேலும் விறுவிறுப்பு கூடியது. 3வது கால்பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பெல்ஜியத்தின் அனைத்து முயற்சிகளையும் இந்திய கோல்கீப்பர் அமித் அற்புதமாக தடுத்தார். இருந்தும் 4வது கால்பகுதியில் பெல்ஜியத்தின் கைஓங்கியது. பெல்ஜியத்தின் ஹென்ட்ரிக்ஸ் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் ஒரு கோல் அடித்தார். அடுத்ததாக பெனால்ட்டி ஷூட்டில் ஹென்ட்ரிக்ஸ் தனது 3வது கோலை அடித்தார். ஆட்டம் முடியப்போகும் நேரத்தில் அந்த அணியின் தோமென் ஒரு கோல் அடித்தார்.


latest tamil newsஆட்ட நேர முடிவில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. பெல்ஜியம் அணி இந்த ஆட்டத்தில் கிடைத்த 14 பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் 3 கோல்களை அடித்தது, ஆனால் இந்திய அணி 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் ஒன்றை மட்டும் கோலாக மாற்றியது. கடைசி 15 நிமிடங்களில் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிய பெல்ஜியம் அணி, எளிதாக பைனலுக்கு முன்னேறியது.


வாழ்த்து

போட்டி முடிந்ததும், இந்திய அணி கேப்டன் மன்ப்ரீத் சிங்கிடம் பேசிய பிரதமர் மோடி, தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதற்கு பாராட்டு தெரிவித்ததுடன், அடுத்து வரும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் பாராட்டு


இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவு: வெற்றிகளும் தோல்விகளும் வாழ்வின் ஓர் அங்கம். டோக்கியோ ஒலிம்பிக்கில் நம்முடைய ஆண்கள் ஹாக்கி அணி வீரர்கள் சிறந்த விளையாட்டை வழங்கினர். அடுத்த போட்டியில் சிறப்புடன் விளையாட வாழ்த்துகள். வருங்காலங்களிலும் சிறந்த முறையில் செயல்பட எனது வாழ்த்துகள். நமது விளையாட்டு வீரர்களால் நாடு பெருமை கொள்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


போட்டி துவங்குவதற்கு முன்னதாக ஆட்டத்தை தான் பார்த்து வருவதாக அவர் டுவீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (7+ 25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathish - melbourne,ஆஸ்திரேலியா
03-ஆக-202113:17:42 IST Report Abuse
sathish அது என்னங்க, தோத்தா மாத்திரம் அதிர்ச்சி தோல்வி, ஜெயிச்சா திறமை, இந்தியர்கள் திறமைக்கு கொடுக்கும் மதிப்பை விட அதிஷ்டத்திற்கு அதிகம் நம்பிக்கை கொடுக்கிறார்கள்.
Rate this:
Cancel
P.MANIMARAN - keeranur,இந்தியா
03-ஆக-202110:40:39 IST Report Abuse
P.MANIMARAN வெண்கலப்பதக்க வேட்டை தொடரட்டும். முறையான பயிற்சி அரசு ஒத்துழைப்பு இல்லாமலே அரையிறுதிக்கு தகுதி பெற்றது மிகப்பெரிய இமாலய சாதனை.
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
03-ஆக-202112:33:13 IST Report Abuse
HSRமுறையான பயிற்சி இல்லை அரசு ஒத்துழைப்பு இல்லை ..உனக்கு எவன் சொன்னான்..சும்மா எதயாவது பெனாத்த கூடாது.....
Rate this:
Cancel
karthik -  ( Posted via: Dinamalar Android App )
03-ஆக-202110:09:34 IST Report Abuse
karthik Belgium World no : 2 team,Indian team did its best
Rate this:
Anand G - Chennai,இந்தியா
03-ஆக-202114:26:02 IST Report Abuse
Anand GYes, but Belgium outplayed India in the last quarter handled the pressure well...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X