இதை கேட்டால், ஜால்ராவே வெட்கப்படும் போல...| Dinamalar

இதை கேட்டால், ஜால்ராவே வெட்கப்படும் போல...

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (22)
Share
தி.மு.க., பதவியேற்ற 100 நாட்கள் கூட ஆகாத நிலையில், நாட்டின் சிறப்புமிகு முதல்வர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார், ஸ்டாலின். இது ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றா? இல்லை... செயல்கள் பூத்து குலுங்கி, காய்த்து, கனிந்து உலகத்தை ஈர்த்து அணிவகுத்து நிற்கின்றன.- தி.க., தலைவர் வீரமணி'இதை கேட்டால், ஜால்ராவே வெட்கப்படும் போல...' என கடுப்பாகும் வகையில், தி.க., தலைவர் வீரமணி
இதை கேட்டால், ஜால்ராவே வெட்கப்படும் போல...

தி.மு.க., பதவியேற்ற 100 நாட்கள் கூட ஆகாத நிலையில், நாட்டின் சிறப்புமிகு முதல்வர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார், ஸ்டாலின். இது ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றா? இல்லை... செயல்கள் பூத்து குலுங்கி, காய்த்து, கனிந்து உலகத்தை ஈர்த்து அணிவகுத்து நிற்கின்றன.
- தி.க., தலைவர் வீரமணி


'இதை கேட்டால், ஜால்ராவே வெட்கப்படும் போல...' என கடுப்பாகும் வகையில், தி.க., தலைவர் வீரமணி அறிக்கை.போலீசார் விடுமுறையின்றி பணியாற்றுவதால், மன வேதனையும், மனச்சோர்வும் அடைகின்றனர். போலீசாரின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, வாரம் ஒருநாள் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டிருப்பது இனிய செய்தி.
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்


'சினிமாவில் போலீஸ் வேடம் என்றாலே அது விஜயகாந்த் தான்... அதனால அவருக்கு தான் போலீஸ் வேலை பத்தி நல்லா தெரியுதோ...' என நினைக்க தோன்றும் வகையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிக்கை.தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இதுவரை எந்த பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகளை தண்டிப்பதை விட, அறிவுறுத்தவே நாங்கள் விரும்புகிறோம்.
- பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ்


'பெரும்பாலான தனியார் பள்ளிகள், தி.மு.க.,வினருடையது என்பதால் தான், தண்டிக்க முடியாதுன்னு சொல்லுறாரோ...' என சந்தேகப்படும் வகையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பேச்சு.மின்சார வாரியத்தின் வருவாயைப் பெருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்சார கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
- மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி


latest tamil news
'தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் இவ்வளவு புகார்கள் குவியுதே... இதுக்கு பெயர் தான் விடியல் ஆட்சியா?' என கேட்க தோன்றும் வகையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி.தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி, துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது.
- தி.மு.க., - எம்.பி., கனிமொழி


'தி.மு.க., அளித்த வாக்குறுதிப்படி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாதுன்னு சொல்லுறீங்க... தி.மு.க.,வினரின் மது ஆலைகளை மூடுவோம்ன்னு சொன்னீங்களே... அதை மட்டும் மறந்துட்டீங்களா...' என கேட்க தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேட்டி.நடக்காத ஒன்றை நடந்ததாகவும், இல்லாத ஒன்றை இருப்பதாகவும் ஊதி பெரிதாக்கி, நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து கவலைப்படாமல், மக்கள் நலன் குறித்த சிந்தனையில்லாமல் பார்லிமென்டில் அமளியில் ஈடுபடுவது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல.
- பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'ஊதி பெரிதாக்க, எதிர்க்கட்சியினர் என்ன பலுான் வியாபாரிகளா...' என கிண்டல் செய்ய தோன்றும் வகையில், பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X