6வது திருமணம் செய்ய முயன்ற 'மாஜி' அமைச்சர் மீது வழக்கு பதிவு

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
லக்னோ: 'முத்தலாக்' வாயிலாக மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, ஆறாவது திருமணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மீது, உத்தர பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது, அமைச்சராக பதவி வகித்தவர் சவுத்ரி பஷீர். பின், அகிலேஷ் யாதவ்
UP, SP_Leader, TripleTalaq, Marry, 6th Time, Case Filed, Chaudhary Bashir, Third Wife, உபி, உத்தரபிரதேசம், முத்தலாக், 6வது திருமணம், அமைச்சர், வழக்குப்பதிவு

லக்னோ: 'முத்தலாக்' வாயிலாக மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, ஆறாவது திருமணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மீது, உத்தர பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது, அமைச்சராக பதவி வகித்தவர் சவுத்ரி பஷீர். பின், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் அந்த கட்சியில் இருந்தும் விலகினார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சவுத்ரி பஷீரின் மூன்றாவது மனைவி நக்மா, சமூக வலைதளத்தில் 'வீடியோ' ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.


latest tamil newsஅதில் அவர் கூறியிருப்பதாவது: சவுத்ரி பஷீருக்கு என்னையும் சேர்த்து ஏற்கனவே ஐந்து மனைவியர் உள்ளோம். இந்நிலையில் அவர், ஷயிஸ்டா என்ற பெண்ணை ஆறாவது திருமணம் செய்யப் போவதாக சமீபத்தில் கேள்விப்பட்டேன். இது குறித்து அவரிடம் கேட்டபோது, என்னை அடித்து துன்புறுத்தினார். முத்தலாக் வாயிலாக என்னை விவாகரத்து செய்து வீட்டை விட்டு துரத்தினார். கடந்த 2012ல் பஷீரை திருமணம் செய்தேன். அப்போது இருந்தே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை துன்புறுத்தி வந்தார். பெண்களை துன்புறுத்துவதில் அலாதியான விருப்பம் உடையவர். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டத்தின் கீழ், முன்னாள் அமைச்சர் பஷீர் மீது, உ.பி., போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-202119:52:10 IST Report Abuse
அப்புசாமி முத்தலாக் செய்யடும்.ஆனால், இருக்கும் சொத்தில் 50 சதவீதமும், மாச சம்பளத்தில் 50 சதவீதமும் குடுத்துறணும்.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் அட மட சங்கிகளே!! ஏற்கெனவே 5அபலைப் பெண்களுக்கு வாழ்வு குடுத்து அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசச் செய்தவர். 6வதாக ஒரு அபலைப் பெண்ணுக்கு வாழ்வு அழிப்பது பொறுக்க வில்லை சங்கிகளுக்கு!! உடனே போலீஸ் கைது என்று ஓடி வந்து விட்டார்கள். இவர்களும் வாழ்வழிக்க மாட்டார்கள் வாழ்வு குடுப்பதையும் விட மாட்டார்கள். சே மட சங்கிகள்.. அபலைப் பெண்களுக்கு வாழ்வழிப்பு ஆண்டவனின் அன்பு கட்டளை யாக்கும்
Rate this:
Cancel
sundaram sadagopan - Bengaluru,இந்தியா
03-ஆக-202114:03:19 IST Report Abuse
sundaram sadagopan உடல் சுகத்திற்காக பல பெண்களை ஏமாற்றி மணந்து பல பிள்ளைகளை பெற்று பிறகு அவர்களை வீதியில் விடுவது தனி மனித உரிமை மீறல் குற்றமாகும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X