பலாத்காரம் செய்த 'மாஜி' பாதிரியாரை மணக்க அனுமதி கோரிய பெண்ணின் மனு தள்ளுபடி

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (68)
Share
Advertisement
புதுடில்லி: பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் பாதிரியாரை திருமணம் செய்துகொள்ள தனக்கு அனுமதி வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.கேரளாவின் கொட்டியூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கம்சேரி. சில ஆண்டுகளுக்கு முன் அந்த தேவாலயத்தில் பணிபுரிந்து வந்த ஒரு மைனர் சிறுமியை
ExCatholic Priest, MinorRape, Pleas, Supreme Court, Dismisses, Survivor, Marry, Each Other, பாதிரியார், பலாத்காரம், திருமணம், மனு, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், தள்ளுபடி

புதுடில்லி: பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் பாதிரியாரை திருமணம் செய்துகொள்ள தனக்கு அனுமதி வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கேரளாவின் கொட்டியூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கம்சேரி. சில ஆண்டுகளுக்கு முன் அந்த தேவாலயத்தில் பணிபுரிந்து வந்த ஒரு மைனர் சிறுமியை ராபின் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். பின் இதுகுறித்த புகார் அடிப்படையில் 2017ல் ராபினை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் பாதிரியார் பணியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த 2019ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம் குற்றவாளியான ராபின் வடக்கம்சேரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


latest tamil newsதனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் ராபின் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே அந்த சிறுமி வளர்ந்து தற்போது இளம்பெண்ணாகி விட்டார். இந்நிலையில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் ராபின் தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தன்னால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் அதற்கு தனக்கு ஜாமின் வழங்கக்கோரியும் கோரிக்கை வைத்திருந்தார். எனினும் இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் அதே கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியாருக்கு ஜாமின் வழங்கக்கோரியும் அவரை திருமணம் செய்துகொள்ள தான் விரும்புவதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மஹேஷ்வரி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 'உயர் நீதிமன்ற உத்தரவில் எங்களால் தலையிட முடியாது' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
05-ஆக-202105:51:38 IST Report Abuse
meenakshisundaram என்னவோ போடா மாதவா நாடு எங்கே போகிறது ?மதம் மக்களை சரியான முறையில் நடத் து கிறதா ன்னெல்லாம் சந்தேகம் வருது இந்த மாதிரி நடந்து கொள்ளும் பாதிரி மார்களை வாடிகன் எவ்வாறு கருதுகிறது ?
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
03-ஆக-202118:36:08 IST Report Abuse
Rajagopal பணம் கொடுத்தோ, மிரட்டியோ அந்தப் பெண்ணை இந்த மாதிரி மனு தாக்கல் செய்ய வைத்திருப்பார்கள் நிச்சயம். அப்படி செய்தால் அந்த பாதிரி வெளியில் வருவான். அவனது மதத்தின் மேல் பட்ட கறை துடைக்கப்படும்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
03-ஆக-202117:05:52 IST Report Abuse
DVRR கேள்வி 1)பாதிரியார் திருமணம் செய்து கொள்ள வாடிகன் அனுமதி உண்டா 2)உன்னை கொன்று விடுவோம் இந்த வலக்கை வாபஸ் வாங்காவிடில்???இப்படி nee சொல்லவில்லை என்றால் என்று அவளுக்கு பயமுறுத்தல் சென்றிருக்கும் அப்படித்தானே???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X