பொது செய்தி

இந்தியா

சுதந்திர தின விழாவில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு அழைப்பு: பிரதமர் முடிவு

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: ஆக.,15ல் செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும்படி, இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை அழைப்பு விடுக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் வீரர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும் பிரதமர் முடிவு செய்துள்ளதாக
PMModi, Olympics, Hockey, Losses, Tweet, IND, TeamIndia, பிரதமர், மோடி, ஒலிம்பிக், ஹாக்கி, இந்தியா, தோல்வி

புதுடில்லி: ஆக.,15ல் செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும்படி, இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை அழைப்பு விடுக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் வீரர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும் பிரதமர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.


latest tamil news


முன்னதாகஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவு: வெற்றிகளும் தோல்விகளும் வாழ்வின் ஓர் அங்கம். டோக்கியோ ஒலிம்பிக்கில் நம்முடைய ஆண்கள் ஹாக்கி அணி வீரர்கள் சிறந்த விளையாட்டை வழங்கினர். அடுத்த போட்டியில் சிறப்புடன் விளையாட வாழ்த்துகள். வருங்காலங்களிலும் சிறந்த முறையில் செயல்பட எனது வாழ்த்துகள். நமது விளையாட்டு வீரர்களால் நாடு பெருமை கொள்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


போட்டி துவங்குவதற்கு முன்னதாக ஆட்டத்தை தான் பார்த்து வருவதாக அவர் டுவீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்ததும், இந்திய அணி கேப்டன் மன்ப்ரீத் சிங்கிடம் பேசிய பிரதமர் மோடி, தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதற்கு பாராட்டு தெரிவித்ததுடன், அடுத்து வரும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
03-ஆக-202116:38:06 IST Report Abuse
பாமரன் நம்ம தலையோட ராசி உச்சத்துல இருக்கும் போல இப்போ... ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்லாம் ஒழுங்காதான் போய்க்கிட்டு இருந்தது... இவரு போயி செவ்வாய் கிரகத்து லேண்டிங்கை பாக்கறேன்னு உக்கார்ந்தாப்ல... விண்கலம் கானாம போச்சு... அதே மாதிரி அமெரிக்கர்களிடையே நல்ல பேரதான் டிரம்ப் வச்சிருந்தாப்ல... ஒரேயொரு கட்டிப்பிடி வைத்தியம்.. ஆட்டம் குளோஸ்... அவ்ளோ ஏன் தமிழ் நாட்டில் முர்வன்னு ஒருத்தர் கொரோன காலத்திலும் அட்டக்கத்தி ... சார் அட்டை வேல் எடுத்துக்கிட்டு மாநிலம் பூரா சுத்தி வந்து ஒரு சமஉ ஆகிடலாம்னு பார்த்தாரு... விடுவாரா நம்ம ஜீஜி... தாராபுரத்தில் வந்து வெற்றி வெற்றி வெற்றிவேல் வீர வீர வீரவேல்ன்னு கத்தி கோயிந்தா பண்ணிட்டு போயிட்டாப்ல.. (அப்பாளிக்கா அதுக்காக மத்திய அமைச்சர்ன்னு பெரிய காம்பென்செஷன் கொடுத்தது வேறு மேட்டர்..)... இப்போ லேட்டஸ்டா ... கிட்டத்தட்ட ஐம்பது வருஷம் கழிச்சு நம்ம ஹாக்கி டீம் நல்லாத்தான் ஆடிக்கிட்டு இருந்தாங்க... இவரு நானும் மேட்சை பார்ப்பேன்னு அடம் புடிக்க... ஒரு சொத்தை டீம்க்கிட்டே தோத்துட்டாங்க... அடுத்த வருஷம் பூலோக சொர்க்கத்தில் தேர்தல் இருக்கு... என்னவோ தெரியல ஞாபகம் வந்துச்சி ...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஆக-202116:36:25 IST Report Abuse
Pugazh V மக்கள் இங்கே ஏகத்துக்கும் ஏறிக்கொண்டு இருக்கும் விலைவாசி பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் இந்த மாதிரி பிலிம்ஸ் காட்டி ஏன் கடுப்பேத்தறார்?? ஒலிம்பிக் ஆரம்பிக்கும் போது இவர் எழுந்து நின்று கைதட்டி அதை போட்டோ புடிச்சு போட்டப்பவே, இந்தியா வின் மெடல் நிலைமை தெரிந்து விட்டது. இனி அவர்களை அழைத்து காரேபுரே என்று எதாவது சொல்லி ஸெல்ஃபி எடுத்து போடுவார். எல்லாம் தலவிதி.
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
03-ஆக-202115:28:56 IST Report Abuse
ஜெயந்தன் இந்தியா ஒரு நாலு அல்லது ஐந்து மெடல் மட்டும் வாங்கியிருந்தா.. இந்நேரம்.. டீவியிலும் ரேடியோவில் ஒரே மங்கி பாத் மயமாத்தான் இருந்திருக்கும், என்னவோ அவரே மெடல் வாங்கின மாதிரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X