சுதந்திர தின விழாவில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு அழைப்பு: பிரதமர் முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சுதந்திர தின விழாவில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு அழைப்பு: பிரதமர் முடிவு

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (25)
Share
புதுடில்லி: ஆக.,15ல் செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும்படி, இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை அழைப்பு விடுக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் வீரர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும் பிரதமர் முடிவு செய்துள்ளதாக
PMModi, Olympics, Hockey, Losses, Tweet, IND, TeamIndia, பிரதமர், மோடி, ஒலிம்பிக், ஹாக்கி, இந்தியா, தோல்வி

புதுடில்லி: ஆக.,15ல் செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும்படி, இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை அழைப்பு விடுக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் வீரர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும் பிரதமர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.


latest tamil news


முன்னதாகஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவு: வெற்றிகளும் தோல்விகளும் வாழ்வின் ஓர் அங்கம். டோக்கியோ ஒலிம்பிக்கில் நம்முடைய ஆண்கள் ஹாக்கி அணி வீரர்கள் சிறந்த விளையாட்டை வழங்கினர். அடுத்த போட்டியில் சிறப்புடன் விளையாட வாழ்த்துகள். வருங்காலங்களிலும் சிறந்த முறையில் செயல்பட எனது வாழ்த்துகள். நமது விளையாட்டு வீரர்களால் நாடு பெருமை கொள்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


போட்டி துவங்குவதற்கு முன்னதாக ஆட்டத்தை தான் பார்த்து வருவதாக அவர் டுவீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்ததும், இந்திய அணி கேப்டன் மன்ப்ரீத் சிங்கிடம் பேசிய பிரதமர் மோடி, தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதற்கு பாராட்டு தெரிவித்ததுடன், அடுத்து வரும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X