'ஆன்லைனிலும்' மாமூல் செலுத்தும் வசதி:அடடா! உலகத்துக்கே, போலீஸ் புது 'சேதி'

Added : ஆக 03, 2021
Advertisement
ஆடிப்பெருக்கு பண்டிகை என்பதால், பூஜை பொருட்கள் வாங்க, சித்ராவும், மித்ராவும் கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தனர்.''அக்கா, இந்த வருஷமும், ஆடிப்பண்டிகை அவ்ளோதான் போல. இப்டியே போனா, விேஷசம், கொண்டாட்டம் எதுவுமில்லாம, மகிழ்ச்சிக்கு பஞ்சம் வந்திடும்,''''உண்மைதாண்டி. ஆனா, என்ன பண்றது. மக்களை காப்பாத்த வேறு வழியில்லையே,''''ம்...ம். ஓகே, சித்துாக்கா,'' என்ற மித்ரா,
'ஆன்லைனிலும்' மாமூல் செலுத்தும் வசதி:அடடா! உலகத்துக்கே, போலீஸ் புது 'சேதி'

ஆடிப்பெருக்கு பண்டிகை என்பதால், பூஜை பொருட்கள் வாங்க, சித்ராவும், மித்ராவும் கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

''அக்கா, இந்த வருஷமும், ஆடிப்பண்டிகை அவ்ளோதான் போல. இப்டியே போனா, விேஷசம், கொண்டாட்டம் எதுவுமில்லாம, மகிழ்ச்சிக்கு பஞ்சம் வந்திடும்,''

''உண்மைதாண்டி. ஆனா, என்ன பண்றது. மக்களை காப்பாத்த வேறு வழியில்லையே,''

''ம்...ம். ஓகே, சித்துாக்கா,'' என்ற மித்ரா, வழியில் தென்பட்ட எதிர்க்கட்சி கொடிகளை பார்த்து, ''அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் எப்படி போச்சுங்க்கா...'' என கேள்வி கேட்டாள்.

''மித்து, மாவட்ட ஆபீசில், அனைத்து நிர்வாகிகளும் ஒன்னா சேர்ந்து, ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. ஆனா, தெற்கு தொகுதில வசிக்கிற, பல்லடம் வி.ஐ.பி., மட்டும் தன்னோட ஆதரவாளர்களுடன், 'ஆனந்தமா' குமார் நகரில், தன்னோட வீட்டு முன்னாடி, ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்காரு,''

''நீங்க ஏன், மாவட்ட ஆபீஸ் பக்கம் வரலை'னு விசுவாசி ஒருத்தர் கேட்டதுக்கு, 'யாரும் தகவல் சொல்லல; எப்படி வர்றதுன்னு,' கேட்டாராம். இப்படி உள்குத்து, கோஷ்டி அரசியல் பண்ணினா, வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில், கட்சி எந்த கதியாகும் நெனச்சு, பலரும் மனசு உடைஞ்சு போய் இருக்காங்க,''


பிரிக்காதீங்க...


''கட்சின்னு வந்துட்டா, கோஷ்டி இல்லீன்னா எப்டிங்க்கா?'' என்ற மித்ரா,
''வேளாண் துறை மினிஸ்டரு, கோவையில விவசாயிகள சந்திச்சு, பட்ஜெட் சம்பந்தமா கருத்து கேட்டுட்டு போனாரு. திருப்பூர்ல இருந்து, குறிப்பிட்ட சில சங்கத்த சேர்ந்த விவசாயிகள மட்டும், அதிகாரிங்க தேர்வு செஞ்சு அனுப்பியிருக்காங்க'' என அடுத்த மேட்டருக்கு தாவி, தொடர்ந்தாள்.

''ஆனா, அதில திருப்பூர், பல்லடம், அவிநாசி ஏரியாவிலுள்ள முக்கியமான சங்கங்களை விட்டுட்டாங்கன்னு, வருத்தப்பட்ட அவங்க, அதிகாரிங்க கிட்ட வாக்குவாதம் செஞ்சு, 'விவசாயிகள் விஷயத்தில, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பிரிச்சு பார்க்காதீங்கன்னும் ஆவேசமா சொன்னாங்களாம்...''

''விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்துல அதிகமாக கலந்துகிட்ட சங்கத்துக்காரங்களுக்கு தான் தகவல் கொடுத்திருக்கோம்; நாங்க அரசியல் பார்க்கலைனு, அதிகாரிங்க 'சாக்குபோக்கு' சொல்லி ஒரு வழியா சமாளிச்சிட்டாங்களாம்,''

''மக்கள் ஒற்றுமையா இருந்தா கூட, இவங்க விட மாட்டாங்க போல. மித்து, குண்டடத்துல இருக்கற கூட்டுறவு வங்கியில எழுத்தரா வேல பாக்குற ஒரு லேடிகிட்ட தான், ஆபீஸ் சம்மந்தப்பட்ட சாவி இருக்குமாம். அவங்க வீட்டுக்கு பஸ்ல போறப்ப, போயம்பாளையத்தில அவங்க மணிபர்ஸ்சை யாரோ திருடியிருக்காங்க.

''அதுல இருந்த ஆபீஸ் சம்மந்தப்பட்ட சாவியும் 'மிஸ்' ஆகிடுச்சாம். சொசைட்டி நிர்வாகிங்க, போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு போனப்ப, அனுப்பர்பாளையம், வடக்கு ஸ்டேஷன்னு போலீஸ்காரங்க அலைகழிச்சு இருக்காங்க,''

''அப்புறம் கமிஷனர்கிட்ட நேரடியாக போய் புகார் பண்ணதுக்கு அப்புறம் தான், பெருமாநல்லுார் ஸ்டேஷன்ல எப்.ஐ.ஆர்., போட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.


குழாய் எங்கே?


''அப்ப சாவி கெடைக்கலேன்னு சொல்லுங்க...'' என்ற மித்ரா,
''லிங்கேஸ்வரர் ஊர்ல, பழங்கரை - சின்னேரிபாளையம் ரோட்டுல, கூட்டு குடிநீர் திட்டத்துக்காக போட்டிருந்த, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குழாய்களை திருடினதா ரெண்டு பேரை அரெஸ்ட் பண்ணாங்க,''

''அந்த விவகாரத்தில் பெரிய நெட்வெர்க் இருக்குதாம். ஆனா, போலீஸ்காரங்க, சும்மா கடமைக்கு, விசாரிச்சு, 2.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான குழாய்களை மட்டும் பிடிச்சதா கணக்கு காட்டிட்டாங்க...''

''அங்க மட்டுமில்லாம, இதே குடிநீர் திட்டத்துல, ஈட்டிவீரம்பாளையம், அவிநாசி முதல் மேட்டுப்பாளையம் ரோட்டோரம் வைக்கப்பட்டிருந்த, 10 லட்சம் ரூபா மதிப்பிலான குழாய்களை யாரோ திருடிட்டாங்கன்னு, போலீசில புகார் குடுத்திருக்காங்க''

''அந்த ஸ்டேஷனை பொருத்தவரை இந்த மாதிரி திருட்டு சம்பவம் தொடர்பான புகார்களுக்கு உடனடியா எப்.ஐ.ஆர்., போடறது இல்லையாம். குற்றவாளி பிடிப்பட்டா தான், எப்.ஐ.ஆர்,. போடறாங்களாம்...அங்க மட்டுமில்ல மித்து. பல ஸ்டேஷன் கிரைம் பிராஞ்சில இப்டித்தான் பண்றாங்க,'' என்றாள் மித்ரா.

''பல விஷயங்களில், தடாலடி எடுக்கும் எஸ்.பி., கண்டுகொள்வார் என நம்பலாம்,'' சொன்ன சித்ரா, ''கை சுத்தம் இல்லாதவங்க ஒற்றர் படையில இருக்காங்க,'' என்றதும், ''எங்கீங்க்கா...'' என கேட்டாள் மித்ரா.


சுணங்கிய படை...


''சொல்றேன் கேளுடி. 'சிட்டி' போலீசில் உளவு பார்த்து, அதிகாரிக்கு தகவல் சொல்ல கூடிய ஒற்றர் படை பிரிவில் எந்த விதமான களையெடுப்பு இல்லாமல் தொடர்ந்து வருது,''

''கறைபடிந்த கைகள், ஆட்சி யாளர்களின் ஆசியோடு, அதிகாரத்தோடு தொடர்ந்து நங்கூரம் போட்டு உட்கார்ந்து இருக்காங்க. ஆனா, இது தெரிஞ்சுமே, மாற்றங்களை ஏற்படுத்தாமல் அதிகாரிகள் தொடர்ந்து மவுனமாக இருப்பதின் மர்மம் என்னவென்று புரியலே...'' என்றாள் சித்ரா.

''அக்கா, இவுங்க மட்டும் இல்ல, ரூரலில் இருக்கற நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரங்களும் சரியாக உளவு பார்க்கிறது இல்லை,'' மித்ராவும் தன்பங்குக்கு சொன்னாள்.

''அப்டியா, அது என்ன?''

''ஐ.எஸ்., போலீஸ்காரங்க, ஸ்டேஷன் போலீஸ்காரங்க என, எல்லோரையும் கண்காணித்து சென்னைக்கு 'ரிப்போர்ட்' அனுப்ப வேண்டிய நுண்ணறிவு பிரிவு போலீசாரும் சுணக்கமாத்தான் இருக்காங்க,''

''ஸ்டேஷன்களில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து, போலீசாரின் ஒழுங்கீன செயல்பாடுகளை முன்கூட்டியே உளவு பார்த்து, 'ரிப்போர்ட்' அனுப்பறதில்லையாம். ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, ஒவ்வொருத்தரும் ரெண்டு, மூனு ஸ்டேஷனை சேர்த்து பார்த்துட்டு, மத்த விஷயத்தை கண்டுக்கறதில்லையாம்,''

''நீ... சொல்றது கரெக்ட்தான்டி மித்து,'' என்ற சித்ரா, ''அதிக வாகனங்களை ஏலம் எடுத்த ஆளும்கட்சி பிரமுகர் மேட்டர் தெரியுமா?'' என சொல்ல ஆரம்பித்தாள்.


மன்னரின் தர்பார்...

''மித்து, பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தாலுகா ஆபீசில், ஏலம் விடப்பட்டது. இதில் பங்கேற்ற சேலத்தை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர், அதிகளவு வாகனங்களை அவரே ஏலம் எடுத்தார். கலந்துகிட்ட பொதுமக்களில், பலரும் அவரோட ஆட்கள் தானாம்...''

''முறையாடோக்கன் வாங்கி, ஏலத்துல கலந்துகிட்டாலும், மத்தவங்க வாங்க முடியாத அளவுக்கு ஏல தொகையை அதிகமாக கூறினாங்களாம். தாலுகா ஆபீசில் வேலை செய்ற ஓரிருவர், வாகனத்தை ஏலம் எடுக்க, அந்த நபரின் உதவியை நாடியிருக்காங்க,''

''அதுவுமில்லாம, கால்மேல் கால் போட்டு உட்காந்துட்டு அதிகாரம் பண்ண அந்நபருக்கு, காபி, ஸ்னாக்ஸ் குடுத்து, உபசரிப்பு செய்து, 'ஐயா ஏலத்தை ஆரம்பிக்கலாமா?' என அதிகாரிங்க கேட்டுத்தான் ஆரம்பிச்சாங்க...''

''அந்தளவுக்கு, அவர்கிட்ட, அதிகாரிகள் தஞ்சம் அடைஞ்சிட்டாங்களா?'' சொன்ன மித்ரா, 'ஸ்டீல் ராஜா ஸ்டோர்ஸ்' முன் வண்டியை நிறுத்த சொன்னாள்.வண்டியை நிறுத்திய சித்ரா, ''மித்து, சீக்கிரம் வாங்கிட்டு போகலாம்,'' என அவசப்படுத்தியவாறே கடைக்குள் நுழைந்தாள்.பொருட்களை வாங்கிய இருவரும் அருகேயுள்ள பேக்கரிக்குள் நுழைந்து காபிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்தனர்.

அப்போது அவ்வழியே சென்ற மண் லாரியை பார்த்த சித்ரா, ''தாராபுரம் அருகே உள்ள கிராம பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் கிராவல் மண் லாரிகளில் கடத்தப்படுது. இது சம்பந்தமாக தாசில்தாரிடம் புகார் அளிக்கிறாங்க,''

''அவருக்கு கீழ் உள்ள அலுவலர்களுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க சொன்ன, இவுங்களோ நடவடிக்கை எடுக்காமல், மண் கடத்தல்காரர்களுக்கு முன் கூட்டியே தகவலையும் கொடுத்து, 'எட்டப்பன்' வேலை செய்றாங்களாம். அப்றம், பேரளவுக்கு ஆய்வு செய்றதில், என்ன பிரயோஜனம்...'' என்றாள்.


பாவம் யாருக்கு?


''இங்க சம்பளம் வாங்கிட்டு, விசுவாசத்தை அங்க காட்டினா எப்படிடி...'' என கோபப்பட்ட சித்ரா, ''நொய்யல் ஆற்றின் கரையோர கட்டுமான பணியின்போது அருகிலுள்ள கட்டட சுவர் இடிஞ்சு விழுந்தது தெரியுமா?'' என்றாள்.

''இல்லக்கா...''

''இத கேள்விப்பட்டு, பார்க்க வந்த தெற்கு தொகுதி வி.ஐ.பி., அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, சாக்கடை உயரமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியே வர முடியவில்லை. உங்கள் வேலையால், அவங்களோட கட்டடம் இடிஞ்சு போச்சு...' என குற்றஞ்சாட்டிய அவர், 'இந்த பாவம் எல்லாம் எனக்கு சேராது,' பாத்துக்கோங்க,' என சொன்னதும், அதிகாரிகள் 'அப்செட்' ஆயிட்டாங்களாம்...''


ஆன்லைனில் 'லஞ்சம்'


''இதில என்ன இருக்கு? தப்பு யார் செய்றாங்களோ, அவங்களுக்குத்தான் பாவம் சேரும். அதேபோல, 'ஆன்லைனில்' மாமூல் வாங்கும் போலீசை என்ன பண்றது,'' என்றாள் மித்ரா.

''அது என்ன மேட்டர்?''

''பல்லடத்தில் தான். லாரி, வேன், சரக்கு ஆட்டோன்னு ஒன்னு விடாம வசூல் நடக்குது. மாமூல், கையில வாங்குனா தெரிஞ்சுடுங்கறதால, ஆன்லைன் மூலமா டிரான்ஸ்பர் நடக்குதாம். இதுக்காகவே, பர்சனல் பேங்க் அக்கவுண்ட் யூஸ் பண்றாராம், அந்த ஆபீசர்,'' என, மித்ரா சொன்ன போதே, சித்ராவின் மொபைல் போன் ஒலித்தது.

டிஸ்பிளேயில், 'மணிவண்ணன்' என வரவே, ''சொல்லுங்க அங்கிள்'' என ஆரம்பித்த சித்ரா, ''வீட்டுக்கு போயிட்டு, அம்மாவை பேச சொல்றேன்,'' விரைவாக பேசி முடித்தாள்.

காபியை குடித்து, பில் செட்டில் செய்து, இருவரும் மீண்டும் புறப்பட்டனர். அப்போது, ஒரு மளிகைக்கடையில், அதிகாரிகள் 'குட்கா' பொருட்களை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர்.

அதனை பார்த்த மித்ரா, ''சாமளாபுரத்துல, மளிகை கடை, பேக்கரி கடைகளில், 'குட்கா' சேல்ஸ் ஜோரா ஆகுதாம்,'' என்றாள்.


ஊருக்கு உபதேசம்!

''ஆட்சி மாற்றத்துக்கு அப்புறம், அரசு விழா நடக்குதா? கட்சி விழா நடக்குதானு மக்கள் குழம்பறாங்க...'' என்றாள்.

''எப்படி சொல்றீங்க...''

''மாவட்ட அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில், அதிகாரிகளுக்கு இடமில்லாமல் போய் விடுகிறது. நலத்திட்ட உதவி கொடுக்கும் நேரத்துல, கலெக்டரே கடைசி இடத்துக்கு நகர்ந்து போக வேண்டியிருக்கு,''

''எல்லா அரசு விழாவிலும், சமூக இடைவெளி விடுங்கன்னு, உபதேசமெல்லாம், மக்களுக்குதான். கட்சிக்காரங்களுக்கு இல்ல போல...'' சிரித்த மித்ரா, தன் வீட்டில் இறங்கி கொள்ள,சித்ரா புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X