ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் சைக்கிள் பேரணி

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி: பார்லிமென்ட் கூட்டத்தொடரில் எந்த நிலைப்பாடை எடுப்பது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் அழைப்பு விடுத்த கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. ஆனால், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிகள் புறக்கணித்தன. இந்த கூட்டம் முடிந்த பின்னர் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிளில் பேரணியாக பார்லிமென்ட் நோக்கி சென்றனர்.பார்லிமென்ட் மழைக்கால
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: பார்லிமென்ட் கூட்டத்தொடரில் எந்த நிலைப்பாடை எடுப்பது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் அழைப்பு விடுத்த கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. ஆனால், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிகள் புறக்கணித்தன. இந்த கூட்டம் முடிந்த பின்னர் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிளில் பேரணியாக பார்லிமென்ட் நோக்கி சென்றனர்.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19ல் துவங்கியது. இதில், பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக சபையில் விவாதிக்கக்கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 'இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார்' என, மத்திய அரசு தெரிவித்தது.
இதை ஏற்காத எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சபை நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கி உள்ளன.இதுவரை 107 மணி நேரம் நடந்திருக்க வேண்டிய பார்லி., கூட்டம், 18 மணி நேரம் மட்டுமே நடந்துள்ளது. இதன் வாயிலாக, 133 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsபெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விவாதிக்க அரசு மறுப்பதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கவும் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு ராகுல் அழைப்பு விடுத்துள்ளார்.டில்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில், இன்று காலை 10:00 மணிக்கு இந்த கூட்டம் நடந்தது.


latest tamil newsஇந்த கூட்டத்தில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஆர்ஜேடி, சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி, கேரள காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, திரிணமல் காங்கிரஸ், லோக்தந்ரிக் ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. ஆனால், டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி , பகுஜன் சமாஜ் கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.


latest tamil newsகூட்டத்தில் ராகுல் பேசியதாவது: நாம் இங்கு ஒன்றாக அமர்ந்தது முக்கியமான விஷயம். மக்களின் குரல் ஒன்று சேர்ந்தால், நமது குரல் வலிமை பெறுவதுடன், பா.ஜ., ஆர்எஸ்எஸ்.,க்கு நெருக்கடி ஏற்படுத்தும் என்றார்.
இதனை தொடர்ந்து ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணியாக சைக்கிளில் பேரணியாக சென்றனர்.
விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் போராட்டம் நடத்தி வருபவர்களுடன் டிராக்டரில் ராகுல் பேரணியாக பார்லிமென்ட்டை நோக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-202119:45:33 IST Report Abuse
அப்புசாமி நல்லாப் போனீங்க சைக்கிள்.பேரணி. இதுதான் சாக்குன்னு சைக்கிள் விலை, அதன் மேலான ஜி.எஸ்.டி வரியை அரசு ஒசத்திட போகுது.
Rate this:
Cancel
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
03-ஆக-202119:30:43 IST Report Abuse
இராம தாசன் போட்டி பாராளுமன்றம் / சைக்கிள் ஓட்டுவது - இது எல்லாம் தமிழ் மக்களுக்கு பழசு .. அதை பண்ணியதால் தான் ஆட்சியை பிடித்தார் என்று யாராவது சொல்லி இருப்பாங்களோ? இவரும் அதே டெக்னிக் செய்கிறார்
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
03-ஆக-202116:32:51 IST Report Abuse
N. Srinivasan பப்பு டிராக்டர் ஓட்டுறார் சைக்கிள் ஓட்டுறார் பயங்கர சகலகலா வல்லவன் போல அடுத்த பிரதமர் பதவி கொடுக்கலாம் போல தெரிகிறது. அத்து என்ன ஓட்டுவார் ? அப்பா போல பலனும் ஓட்டுவரோ ? அனேகமாக மாட்டு வண்டி தான் பாக்கி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X