பார்லிமென்ட்டை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: பார்லிமென்டின் இரு அவைகளையும் அவமதிக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் நடந்து கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.டில்லியில் பா.ஜ.,வின் பார்லிமென்டரி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் கலந்து
parliment, Prime minister, narendramodi, modi, Pmmodi, பார்லிமென்ட், எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி, நரேந்திர மோடி,

புதுடில்லி: பார்லிமென்டின் இரு அவைகளையும் அவமதிக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் நடந்து கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.


latest tamil news



டில்லியில் பா.ஜ.,வின் பார்லிமென்டரி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


latest tamil news





வரவேற்பு



latest tamil news



இந்த கூட்டத்திற்கு பின்னர் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது: மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு பா.ஜ., பார்லிமென்டரி கட்சிக்குழு வரவேற்பு தெரிவித்து உள்ளது. திரிணமுல் எம்.பி., டெப்ரிக் ஓ பிரையன், மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக பிரதமர் கூறினார். பார்லிமென்டில், காகிதங்களை கிழித்து எறிவதும் அதற்கு மன்னிப்பு கேட்காத எம்.பி.,க்களின் செயல்பாடு ஆணவம் மிக்கது எனவும் பிரதமர் பேசினார். இவ்வாறு அவர் கூறினார்.


மகிழ்ச்சி


latest tamil news



மத்திய அமைச்சர் வி. முரளிதரன் கூறுகையில், ஜூலை மாதம் இந்தியாவிற்கு மகிழ்ச்சிகரமான செய்தியை கொண்டு வந்துள்ளது. அந்த மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்து வெண்கலம் வென்றதும், ஹாக்கி அணி சாதனை படைத்ததும் ஜூலை மாதம் தான் என பிரதமர் கூறினார். மேலும், இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு , பார்லிமென்ட்டை அவமதிப்பது போல் உள்ளது எனவும் தெரிவித்தார். அவையில் காகிதங்களை கிழித்து எறிந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட எம்.பி., வருந்தவில்லை. மசோதாக்களை நிறைவேற்றியது தொடர்பாக மூத்த எம்.பி., தெரிவித்த கருத்து, இழிவுபடுத்துவது போல் உள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விட மாட்டோம் என பிரதமர் கூறினார். இ ரூபி குறித்தும் பிரதமர் பேசினார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
03-ஆக-202121:20:34 IST Report Abuse
bal மஹாராஷ்டிராவில் சஸ்பெண்ட் பண்ணியதுபோல் செய்யவேண்டியதுதானே...ஏன் தயக்கம்...
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
03-ஆக-202119:26:12 IST Report Abuse
Easwar Kamal ஒளிவு மறைவு இல்லாம ஓரளவுக்கு நேர்மையான ஆட்சி கொடுத்தால் எதற்கு இந்த ப்ரிச்சனை. நீங்கள் எதிர் காட்சிகல் பேசுவதை ஒட்டு கேட்பீர்கள் யாரும் எதுவும் கேட்ககூடாது, நீங்கள் பேசுவதை ஒட்டு கேட்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. இயற்கை சக்தி அபூர்வமனது. இணைக்கு ஆடுறவன் நாலையுக்கு காணாம போயிடுவான்.
Rate this:
Venkata Krishnan - Toronto ,கனடா
03-ஆக-202121:24:05 IST Report Abuse
Venkata Krishnanஅதனாலத்தான் நாங்க முன்னாடியே ஆட ஆரம்பிச்சுட்டோம்.ஒளிவு மரைவெல்லாம் நாங்கதான் செய்யுணும்.நீங்க பண்ணினா அது சன்னாயகப்படுகொலைன்னு உலகமே சொல்ல வைப்போம்...
Rate this:
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
03-ஆக-202116:42:25 IST Report Abuse
V Gopalan It is not a new one. Knowingly why at all he has proposed Central vista at a total cost of Rs.30,000 crores or so when the general public is suffering due to petrol /diesel increase, pulses rates increase et all. There is no need for opposition parties to defeat BJP, the present set up of BJP Govt is sufficient to sit as opposition party with single/double digit like that of present Congress. Gave a tall claim of Godavari Cauvery river link but there is no talk at all. A lot of Toll gates which are reached target and still enjoying is not taken care of BJP Govt. Had a hope of delivering good governance but the hope is belied. Especially, middle class is facing a challenge in day to day life. Irrespective of party/ties rule at Centre/States no one is bothered about the middle class/below poverty but are very much interested to catch 2024 elections. These parties will push our country like Somalia. Per minute the amount of Rs.3 lakhs being spent for Parliamentary transactions, now 11 days the Parliament did not function, who is responsible for such a loss, no doubt the MPs are enjoying at our cost. Parliament / Assemblies should be dissolved and the President rule must and should be promulgated for at least 20 years, then only country will achieve development.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X