அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்: கோவிட் வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேலும் துரிதப்படுத்தினார். அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4-ம் தேதிக்குள் அமெரிக்காவில் 18

வாஷிங்டன்: கோவிட் வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.



latest tamil news



கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேலும் துரிதப்படுத்தினார். அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4-ம் தேதிக்குள் அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோசாவது தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்தார். அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வந்தது.


latest tamil news



ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை ஜூலை 4ம் தேதிக்குள் அடையவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில், 18 வயதுக்கு மேற்பட்ட 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி டோஸ் செலுத்தும் இலக்கு நேற்று (ஆக., 2) எட்டப்பட்டது. சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு ஜோ பைடன் நிர்வாகம் தனது இலக்கை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.அமெரிக்காவில் தகுதி வாய்ந்த பெரியவர்களில் 60.6 சதவீதம் பேருக்கும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 49.7 சதவீதம் பேருக்கும் முழுமையாக தடுப்பூசி (இரண்டு டோஸ்) செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் தற்போது டெல்டா வகை மாறுபாட்டால் கோவிட் பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. அங்கு நேற்று புதிதாக 56 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
03-ஆக-202121:36:59 IST Report Abuse
Mirthika Sathiamoorthi ஏன்யா வயித்தெரிச்சலை கிளப்புறா...இந்த வருஷ கடைசிக்குள்ள இந்தியாவில் 18 வயது மேற்பட்டவங்க அத்தனைபேருக்கும் தடுப்பூசி நாங்க போட்டுமுடிச்சதுக்கப்புறம் இந்த நியூஸ் போட்டிருக்கலாம்? இப்பவே போட்டு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X