சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு: சென்னை மண்டலம் 3வது இடம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு: சென்னை மண்டலம் 3வது இடம்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.சிபிஎஸ்இ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in என்ற முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள், தங்களது பதிவெண்ணை பதிவிட்டு முடிவுகளை பார்க்க முடியும். மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சான்றிதழ்கள் டிஜிலாக்கர் செயலியிலும் பதிவிறக்கம் செய்ய முடியும். digilocker.gov.in என்ற முகவரியில்,
cbse, results, சிபிஎஸ்இ, தேர்வு முடிவு

புதுடில்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

சிபிஎஸ்இ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in என்ற முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள், தங்களது பதிவெண்ணை பதிவிட்டு முடிவுகளை பார்க்க முடியும். மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சான்றிதழ்கள் டிஜிலாக்கர் செயலியிலும் பதிவிறக்கம் செய்ய முடியும். digilocker.gov.in என்ற முகவரியில், சிபிஎஸ்இ.,யில் பதிவு செய்த மொபைல் எண் மூலம் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news




சிபிஎஸ்இ வெளியிட்ட பொதுத்தேர்வு முடிவுகளில், திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், அந்த மண்டலம் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பெங்களூரு மண்டலமும்(99.96 சதவீதம்), 3வது இடத்தில் சென்னை மண்டலமும்(99.94 சதவீதம்) உள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X