தமிழகத்தை பிரிக்கும் திட்டம் இல்லை: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
புதுடில்லி: தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் வகையில் எந்த கோரிக்கையும் வரவில்லை; எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என பார்லிமென்டில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற முருகன் பற்றிய குறிப்புகளில், கொங்கு நாடு என்ற வார்த்தை இடம் பெற்றது. இதனால், தமிழகத்தின் மேற்கு
தமிழகம், கொங்கு நாடு, மத்திய அரசு, நித்தியானந்த ராய், பார்லிமென்ட்,

புதுடில்லி: தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் வகையில் எந்த கோரிக்கையும் வரவில்லை; எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என பார்லிமென்டில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற முருகன் பற்றிய குறிப்புகளில், கொங்கு நாடு என்ற வார்த்தை இடம் பெற்றது. இதனால், தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள கொங்கு மண்டலத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, நீலகிரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மண்டலத்தில், 10 லோக்சபா தொகுதிகளும், 61 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இவற்றோடு அருகில் உள்ள சில தொகுதிகளையும் சேர்த்து, மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளுடன் கொங்கு நாடு என்ற பகுதியை பிரித்து, அதை புதுச்சேரி போல, தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க திட்டமிடப்படுவதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக எம்.பி.,க்கள் பாரிவேந்தர் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினர்.


latest tamil news


இதற்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதிலில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தை இரண்டாக பிரிக்க எந்த கோரிக்கையம் வரவில்லை. அதுபோல், எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
04-ஆக-202100:24:38 IST Report Abuse
Venkatakrishnan இல்லாத ஒரு விஷயத்தையும் இருக்கு என்று கூறி கூச்சலிடும் அரசியல்வாதிகள் தமிழகத்தில் வெகுநாள் நீடிக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
03-ஆக-202120:34:26 IST Report Abuse
oce மாநில அரசு சொல்லியா காஷ்மீர் பிரிக்கப் பட்டது.அதை குப்பனும் சுப்பனும் கேட்காமலே பிரித்தார்கள்.
Rate this:
Rajas - chennai,இந்தியா
03-ஆக-202122:10:29 IST Report Abuse
Rajasரொம்ப கஷ்டம். காஷ்மீருக்கு அரசியலமைப்பு சட்ட பிரிவு 35A 370 (1) என சேர்க்கப்பட்டது. அந்த சட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு இல்லை. அதனால் காஷ்மீர் வேறு மற்ற மாநிலங்கள் வேறு...
Rate this:
Cancel
Tamilan - Kongu Nadu,இந்தியா
03-ஆக-202119:59:12 IST Report Abuse
Tamilan எங்களின் வரி பணத்தில் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.......
Rate this:
Rajas - chennai,இந்தியா
03-ஆக-202122:03:05 IST Report Abuse
Rajasகடந்த 5 வருடங்களாக ஒவ்வொரு மாவட்டமும் எவ்வளவு வரி பணம் அரசுக்கு கொடுக்கிறார்கள் என்ற விவரம் இருக்கிறதா. அதை முதலில் பதிவிடுங்கள். பின்னர் அதை பற்றி பேசலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X