கோவை: மேகதாது விவகாரத்தில் பா.ஜ., இரட்டை வேடம்தான் போடுகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.
கோவையில் ம.நீ.ம கட்சி தலைவர் கமல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கோவை தெற்கு மக்களுக்கு நன்றி. அவர்கள், நேர்மையாக வாக்களித்தார்கள். அவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் வணக்கம் செலுத்த வந்திருக்கிறோம். கோவையில் பகிரங்கமாக காசு கொடுக்க மாட்டோம் என்று சொல்லிய எங்களை வெற்றியின் மிக மிக அருகில் கொண்டு சென்ற கோவை மக்களுக்கு நன்றி தெரிவிக்கவே வந்தேன்.
கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க போக முடியாதது ஆளும்கட்சி நெருக்கடியல்ல. இது மக்களுக்கான நெருக்கடி. கொரோனா விவகாரத்தில் கட்சி பேதம் பார்த்து அரசு நெருக்கடி கொடுக்கவில்லை. மக்கள் நலன் பார்த்து கொடுத்திருக்கிறது. கொரொனா தொற்றால் எங்கள் கட்சி தொண்டர்களையும் இழந்திருக்கிறோம். கொரோனா விவகாரத்தில் திமுக அரசு இயன்றதை செய்கின்றது. அது போதாது இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இன்னும் அதிகமாக செய்யமுடியும் என்பதை அரசுக்கு நினைவுபடுத்துவோம்.

பா.ஜ.,வின் கொங்குநாடு என்ற கோஷத்தை அரசியல் கோஷமாக பார்க்கிறேன். மக்கள் தேவையாக பார்க்கவில்லை. இந்தியாவிலேயே அதிகம் இரட்டை வேடம் நடித்தவன் நான் தான். இரட்டை வேடம் போடுபவர்களை நான் சட்டென்னு கண்டுபிடிப்பேன். மேகதாது விவகாரத்தில் பா.ஜ., இரட்டை வேடம்தான் போடுகிறது. போராடும் இருவருக்கும் வேறு வேறு பெயர்கள் இருந்தாலும் இருவருமே மத்திய அரசின் பொம்மைகள்தான்.
முழுநேர அரசியல்வாதி என யாரும் இல்லை. எனது தொழில் நடிப்பு. சினிமா தொழிலும் நடக்கிறது. இதற்காக டெல்லி சென்று வந்தேன்.
உள்ளாட்சி தேர்தல் எனது கடமை. மக்களாட்சி மலர வேண்டும் என நினைப்பவர்கள் நாங்கள். தோல்வி வந்தால் விட்டுட்டு சென்றிருப்பேன் என்றால் சினிமாவையும் விட்டு சென்றிருக்க வேண்டும். தோல்வி தந்த பாடம் அடுத்த வெற்றிக்காக அமையும் என்ற பாடத்தை கோவை மக்கள் அளித்துள்ளனர். இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க வந்த கட்சியின் தொண்டன் நான் . மகேந்திரன் போன்றவர்கள் திமுக.,விற்கு சென்றதால் எந்த பாதிப்பும் இல்லை. கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., ஆக வானதி சீனிவாசன் தென்படவில்லை. லாபம் என்று எழுதி வைத்திருந்த போர்டை மட்டுமே பார்த்தேன். இவ்வாறு கமல் தெரிந்ததார்.
கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வேறு கட்சிக்கு போனது குறித்த கேள்விக்கு, "சௌரியமான செவிடு" நான் என கமல் பதிலளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE