அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில்
OnlineGames, ChennaiHC, Rummy, ஆன்லைன் விளையாட்டுகள், தடையில்லை, சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.


latest tamil news


இன்று (ஆக. 03) அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கூறியதாவது: தமிழக அரசு கொண்டு வந்த, இந்தச்சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி சட்டத்தை ரத்து செய்ததுடன், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க முடியாது. உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனக்கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஆக-202104:40:09 IST Report Abuse
Ramki ஏம்பா நீதிக்கோன்களா, நீங்க சமுதாய அககறையிலதான் ஒங்க தீர்ப்பை வழங்கறீங்களா, இல்ல யார் எக்கேடு கெட்டா என்ன அப்படிங்கற நினைப்புல தர்றீங்களா? ஆன்லைன்ல விளையாடி எத்தனயோ குடும்பங்கள் சீரழிஞ்சது ஒங்க கண்ணுக்கு தெரியலயோ?,ஒங்கள சொல்லி குத்தமில்ல. சமுதாய சீரழிவான லிவிங் டுகெதர் வித்தவுட் மேரேஜ், கல்யாணமாகாமலே குழந்தை பெத்துக்கலாம், இஸ்துக்கினு ஓடிப்போய் கல்யாணம் செஞ்சா, அது சீர்திருத்த கல்யாணம் அப்படின்னு எல்லாம் சொல்லி, வக்காலத்து வாங்கினவங்க தானெ நீங்க.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
04-ஆக-202104:21:29 IST Report Abuse
SUBBU இந்த ஆன்லைன் ரம்மியில் நான் விளையாடியிருக்கேன்.ஆரம்பத்தில் ஏழாயிரம் வரை ஜெயித்த நான் கடைசியில் தோற்றது பதினோராயிரம்.இதில் நம் கூட விளையாடுவது யார் என்பது நமக்கு தெரியாது.ஆனால் பெயர் மட்டும் டிஸ்பிளேயில் நமக்கு தெரியும்.இது முழுக்க முழுக்க கம்யூட்டர்தான் அதனிடம் விளையாடி ஜெயிக்க நாம் என்ன செஸ் ஆனந்தா?முதலில் போனஸ் பணத்தை தந்து நம்மை ஜெயிக்க விட்டு கடைசியில் நம் பணத்தை பிடுங்கி விடுவார்கள்.
Rate this:
Cancel
03-ஆக-202122:40:13 IST Report Abuse
சோலை பார்த்தி ஆன்லைன் ரம்மி...விளையாட தடை.... லாட்டரி சீட்டு தடை.... இது அ.தி.மு.க. வின் சாதனை.... கோர்ட்டில் எதிர்க்க துப்பில்லாத தீய.மு.க....வினால். மீண்டும்.. ஆன்லைன் ரம்மி.. லாட்டரி.. சுரண்டல் லாட்டரி.. ஒரு நம்பர் லாட்டரி....கந்து வட்டி.. மீட்டர் வட்டி.... ரயில் வட்டி.. விமான வட்டி....ஜெட். வட்டி.... எல்லாமும் தமிழகத்தை..தாக்கும்....... ஜாக்கிரதையாக இருக்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X