பொது செய்தி

இந்தியா

சுதந்திர தினத்தில் ஒலிம்பிக் வீரர்களை செங்கோட்டைக்கு அழைத்து உரையாட பிரதமர் முடிவு

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: ஒலிம்பிக் போட்டியாளர்கள் அனைவரையும் வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டைக்கு சிறப்பு விருந்தினர்களாக வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்க பல பிரிவுகளின் கீழ் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். தற்போது வரை இந்தியாவிற்கு ஒரு வெள்ளிப்
Tokyo Olympics, PMModi, Invites, Indian Players, Red Fort, ஒலிம்பிக், பிரதமர் மோடி, அழைப்பு, இந்தியா, வீரர்கள், செங்கோட்டை

புதுடில்லி: ஒலிம்பிக் போட்டியாளர்கள் அனைவரையும் வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டைக்கு சிறப்பு விருந்தினர்களாக வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்க பல பிரிவுகளின் கீழ் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். தற்போது வரை இந்தியாவிற்கு ஒரு வெள்ளிப் பதக்கம் (பளுதூக்குதல்) மற்றும் ஒரு வெண்கலப்பதக்கம் (பாட்மின்டன்) மட்டுமே கிடைத்துள்ளது. ஆண்கள் ஹாக்கியில் அரையிறுதியில் தோல்வியுற்ற இந்திய அணி, வெண்கலத்திற்கான போட்டியில் பங்கேற்க உள்ளது. பெண்கள் ஹாக்கியில் அரையிறுதி வரை முன்னேறியுள்ளது. மேலும், இனிவரும் போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கத்தை வென்று வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news


வரும் 8-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு, இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளை தனிப்பட்ட முறையில் சந்தித்து, அவர்களுடன் பிரதமர் மோடி உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து போட்டியாளர்களையும் வருகிற 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டைக்கு சிறப்பு விருந்தினர்களாக வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விட இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naresh Giridhar - Chennai,இந்தியா
04-ஆக-202108:16:32 IST Report Abuse
Naresh Giridhar அதோடு , தமிழ் நாட்டில் தடுப்பூசி மருந்து தயார் பண்ணுவதற்கு ஸ்டாலினின் விண்ணப்பத்திற்கு முடியுமா இல்லையா என்று பதில் சொல்லவும் .
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
04-ஆக-202102:47:02 IST Report Abuse
Venkatakrishnan ஒலிம்பிக்கில் வாயில் வடை சுடும் போட்டி ஏதாவது நடத்துறாங்களா என்று விவாதிக்க...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஆக-202123:14:03 IST Report Abuse
Pugazh V எல்லாரையும் கூப்பிட்டு ஸெல்ஃபி எடுத்துக்கப் போறார். அதைக் காட்டி ஓட்டு வாங்கலாம்னு தான். அந்த விளையாட்டு வீரர்கள் பாவம். இவரைப் பார்த்து விட்டு ஊருக்கு திரும்பி னால் அங்கே இருக்கற.மரியாதையும் போகப் போகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X