கோவாக்சின் பற்றாக்குறைக்கு என்ன காரணம்? கோவிட் பணிக்குழு உறுப்பினர் விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கோவாக்சின் பற்றாக்குறைக்கு என்ன காரணம்? கோவிட் பணிக்குழு உறுப்பினர் விளக்கம்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: நாடு முழுவதும் கோவிஷீல்ட் தடுப்பூசி கிடைக்கின்ற அளவுக்கு உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி கிடைக்கவில்லை. கோவாக்சினின் பெங்களூரு தொழிற்சாலையில் உற்பத்தியான முதல் சில தொகுப்புகள் சரியான தரத்தில் இல்லாததால் பற்றாக்குறை ஏற்பட்டதாக கோவிட் பணிக்குழு உறுப்பினர் டாக்டர் அரோரா தெரிவித்தார்.ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர்
கோவாக்சின், பற்றாக்குறை, கோவிட் பணிக்குழு,covaxin,shortage
,

புதுடில்லி: நாடு முழுவதும் கோவிஷீல்ட் தடுப்பூசி கிடைக்கின்ற அளவுக்கு உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி கிடைக்கவில்லை. கோவாக்சினின் பெங்களூரு தொழிற்சாலையில் உற்பத்தியான முதல் சில தொகுப்புகள் சரியான தரத்தில் இல்லாததால் பற்றாக்குறை ஏற்பட்டதாக கோவிட் பணிக்குழு உறுப்பினர் டாக்டர் அரோரா தெரிவித்தார்.

ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: தடுப்பூசி உற்பத்தி கிட்டத்தட்ட ராக்கெட் சயின்ஸ் போன்றது. கோவாக்சின் உற்பத்தியில் மிகப் பெரிய உயர்வை எதிர்பார்த்தோம். அவர்கள் பெங்களூரில் ஒரு புதிய உற்பத்தியை தொடங்கினார்கள். கூடுதலாக மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் மொத்த உற்பத்தியை அதிகரிக்க இணைந்து பணியாற்றுகின்றன. பாரத் பயோடெக்கிலிருந்து 10 முதல் 12 கோடி டோஸ் எதிர்பார்க்கிறோம்.


latest tamil news



பெங்களூரு ஆலை உலகளவில் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் ஆலைகளில் ஒன்றாகும்.ஆனால் ஆரம்ப தொகுப்புகள் சில தரநிலையை பூர்த்தி செய்யவில்லை. அது சரியான தரத்தில் இல்லை. மூன்றாவது மற்றும் நான்காவது தொகுப்புகள் இப்போது முன்னேறியுள்ளன. சரியான தரத்தில் இல்லாத தொகுப்புகள் தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்தப்படவில்லை. அடுத்த நான்கு அல்லது ஆறு வாரங்களில் கோவாக்சின் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார். இதன் மூலம் இனி கோவிஷீல்டுக்கு இணையாக கோவாக்சினும் கிடைக்கும் என தெரிகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X