3 ஆண்டில் 230 அரசியல் கொலை: அமைச்சர் நித்தியானந்த் ராய் தகவல்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 230 பேர் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டு உள்ளதாக லோக்சபாவில் இன்று மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்தார்.நாட்டில் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டவர்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு, மக்களவையில் இன்று, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: அரசியல்

புதுடில்லி: கடந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 230 பேர் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டு உள்ளதாக லோக்சபாவில் இன்று மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்தார்.



latest tamil news




நாட்டில் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டவர்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு, மக்களவையில் இன்று, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: அரசியல் காரணத்திற்காக கடந்த 2017ம் ஆண்டில் 99 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். 2018ம் ஆண்டு 59 பேரும், 2019ம் ஆண்டு 72 பேரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக ஜார்கண்டில் 49 பேரும், மேற்கு வங்கத்தில் 27 பேரும், பிகாரில் 26 பேரும் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டு உள்ளனர்.


latest tamil news




கடந்த 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் கர்நாடகத்தில் 24 பேரும், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் 15 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
04-ஆக-202101:18:35 IST Report Abuse
Ramesh Sargam அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டதை விசாரித்து, கொலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும். அதேபோல் அரசியல் வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக கூலிப்படைகளை வைத்து தங்கள் அரசியல் எதிரிகளை, மற்றும் வேறு பலரை கொன்றிருக்கிறார்கள். அவற்றையும் தீர விசாரித்து அப்படி கொலைசெய்ய தூண்டிய அரசியல்வாதிகளும் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.
Rate this:
Cancel
04-ஆக-202100:59:37 IST Report Abuse
அப்புசாமி இத்தைச் சொல்ல இவர் எதுக்கு? ஒரு சீக்வல் செலக்ட் ஸ்டேட்மெண்ட் போறுமே... கூகிளிலேயே பெறலாம். இது கூட செய்ய முடியாம அதிகாரிங்களை வெச்சு எழுதி வாங்கி பாராளுமன்றத்தில் சொல்லுறாங்கோ... இதே மாதிரிதான் கொரோனா மந்திரிகளும். 3.00024 கோடி தடுப்பூசி மாநிலங்கள் கையில் இருப்புன்னு அபூர்வ தகவல்கள் குடுப்பாங்க.
Rate this:
Cancel
03-ஆக-202119:28:27 IST Report Abuse
அப்புசாமி இந்தக் குற்றங்களைச் செய்தவங்க எத்தனை பேரை புடிச்சோம், தண்டனை வாங்கிக் குடுத்தோம்னா 0.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X