3 ஆண்டில் 230 அரசியல் கொலை: அமைச்சர் நித்தியானந்த் ராய் தகவல்| Dinamalar

3 ஆண்டில் 230 அரசியல் கொலை: அமைச்சர் நித்தியானந்த் ராய் தகவல்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி: கடந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 230 பேர் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டு உள்ளதாக லோக்சபாவில் இன்று மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்தார்.நாட்டில் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டவர்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு, மக்களவையில் இன்று, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: அரசியல்

புதுடில்லி: கடந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 230 பேர் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டு உள்ளதாக லோக்சபாவில் இன்று மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்தார்.



latest tamil news




நாட்டில் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டவர்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு, மக்களவையில் இன்று, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: அரசியல் காரணத்திற்காக கடந்த 2017ம் ஆண்டில் 99 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். 2018ம் ஆண்டு 59 பேரும், 2019ம் ஆண்டு 72 பேரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக ஜார்கண்டில் 49 பேரும், மேற்கு வங்கத்தில் 27 பேரும், பிகாரில் 26 பேரும் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டு உள்ளனர்.


latest tamil news




கடந்த 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் கர்நாடகத்தில் 24 பேரும், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் 15 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X