எளிமையான கேள்விக்குப் பதில் சொல்ல ஏன் இவ்வளவு கஷ்டம்? பெகாசஸ் பற்றி ப.சிதம்பரம்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி: "உளவு மென்பொருளை விற்பனை செய்யும் இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ.,வின் வாடிக்கையாளரா இந்தியா என்பதற்கு நேரடி பதில் தர ஏன் இவ்வளவு கஷ்டமாக உள்ளது" என மத்திய அரசுக்கு காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களின் அலைபேசிகளை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக வெளியான பட்டியல் அரசுக்கு நெருக்கடியை
பெகாசஸ், சிதம்பரம், காங்கிரஸ், ப.சிதம்பரம், மத்திய அரசு

புதுடில்லி: "உளவு மென்பொருளை விற்பனை செய்யும் இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ.,வின் வாடிக்கையாளரா இந்தியா என்பதற்கு நேரடி பதில் தர ஏன் இவ்வளவு கஷ்டமாக உள்ளது" என மத்திய அரசுக்கு காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களின் அலைபேசிகளை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக வெளியான பட்டியல் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 300 அலைபேசி எண்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதில் ராகுல் காந்தி, மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், ரயில்வே மற்றும் ஐ.டி., அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தொழிலதிபர் அனில் அம்பானி, முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் ஆகியோர் பெயர்கள் மற்றும் சுமார் 40 ஊடகவியலாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


latest tamil news




இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு விசாரணை கோரி மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அம்மனு ஆக., 5 அன்று விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் இவ்விஷயத்தில் மத்திய அரசை மீண்டும் விமர்சித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில், “என்.எஸ்.ஓ., நிறுவனம் 40 அரசாங்கங்கள், 60 அமைப்புகளை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது. ஒரு எளிமையான கேள்வி: அந்த நாற்பதில் இந்திய அரசாங்கமும் ஒன்றா? இந்த எளிமையான கேள்விக்கு நேரடி பதில் தர இந்திய அரசுக்கு ஏன் மிகவும் கடினமாக உள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshmipathi S - Bangalore,இந்தியா
04-ஆக-202109:29:00 IST Report Abuse
Lakshmipathi S சிம்பிள் கேள்வி ,திரு. சிதம்பரம் அவர்களே உங்கள் சொத்து மொத்தமும் எவ்வளவு கூடியிருக்கும். அவ்வளவையும் போகும்போது கொண்டுசெல்வீர்களா ? சிறிது ஞானம் தேவை..
Rate this:
Cancel
Shake-sphere - India,இந்தியா
04-ஆக-202108:14:14 IST Report Abuse
 Shake-sphere காந்தி என்பது ஒரு குடும்ப பெயர் காந்திக்கும் உங்கள் கட்சியில் உள்ளவர்களுக்கும் என்ன தொடர்பு நல்ல தொடர்பா அல்லது இந்திரா பிரியதர்ஷினி பெரோஸ் காலத்திலிருந்தயே கள்ள தொடர்பா எளிய கேள்வி பதில் சொல்லு இந்திய காந்திக்கும் இத்தாலிய மைனாவிற்கும் என்ன தொடர்பு
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
04-ஆக-202104:53:31 IST Report Abuse
Nepolian S கேடுகெட்ட கையாளாகாத மத்திய அரசு....
Rate this:
04-ஆக-202111:33:16 IST Report Abuse
ராஜாஅப்பிடியா பயங்கர அறிவாளிதான் போங்க......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X