பொது செய்தி

இந்தியா

கல்வான் தாக்குதல் வீடியோ சீன சமூக ஊடகங்களில் வெளியீடு!

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியா - சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண சம்மதித்து நேற்று (ஆக., 03) இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்ட நிலையில், சீன சமூக ஊடகமான வெய்போவில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் வீடியோ வெளியாகியிருக்கிறது.இந்தியா - சீனா இடையே கடந்த ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஜூன் மாதம் இது உச்சக்கட்டத்தை அடைந்தது. கல்வான்

புதுடில்லி: இந்தியா - சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண சம்மதித்து நேற்று (ஆக., 03) இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்ட நிலையில், சீன சமூக ஊடகமான வெய்போவில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் வீடியோ வெளியாகியிருக்கிறது.



latest tamil news



இந்தியா - சீனா இடையே கடந்த ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஜூன் மாதம் இது உச்சக்கட்டத்தை அடைந்தது. கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரும் நேரடியாக மோதிக் கொண்டனர். அதில் இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்களும், சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்டோரும் பலியாகினர். இச்சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டன. சீன முதலீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. பின்னர் பல்வேறு சுற்று உயர்மட்ட பேச்சுவார்த்தையால் நிலைமை சுமூகமடைந்தது.


latest tamil news



கடந்த வாரம் சனிக்கிழமை நடந்த 12-ம் சுற்று பேச்சுவார்த்தையில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஒப்புக்கொண்டன. அது தொடர்பான கூட்டறிக்கை நேற்று (ஆக., 2) வெளியிடப்பட்டது. பேச்சுவார்த்தை நல்ல முறையில் அமைந்ததாகவும், தற்போதுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு எல்லைப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன என்று அதில் கூறப்பட்டது.


latest tamil news



கூட்டறிக்கை வெளியான சில மணி நேரத்தில் சீனாவின் வெய்போ எனும் சமூக ஊடகத்தில் கல்வான் மோதல் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அதில் சீன வீரர்கள் கல்வான் ஆற்றிற்கு மேற்புறம் இருந்துக்கொண்டு கீழே இருக்கும் இந்திய வீரர்கள் மீது கற்களைக் கொண்டு தாக்குகிறார்கள். ஆற்றை கும்பலாக ஒருவருக்கொருவர் உதவியபடி கடப்பதும், இரவு நேரத்தில் கனரக வாகனத்தின் வெளிச்சத்துடன் ஆற்றங்கரையோரம் ஏராளமான சீன வீரர்கள் குவிந்திருப்பதும் அதில் காட்டப்படுகிறது. சிலர் அந்த ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப்படுகின்றனர். அவர்களை சக வீரர்கள் மீட்கின்றனர். திடீரென இவ்வீடியோ சீனாவால் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
04-ஆக-202116:23:01 IST Report Abuse
mohan உலக விவரம் தெரியாமல் கருது சொல்லி இருக்கிறார்கள்....
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
04-ஆக-202108:20:21 IST Report Abuse
Naresh Giridhar எதிரிகளை குறைவாக மதிப்பிட்ட எல்லோரும் முடிவில் போரில் தோல்வி அடைந்தார்கள். நெப்போலியன் , ஹிட்லர் உட்பட.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
03-ஆக-202123:56:47 IST Report Abuse
Vena Suna உலக நாடுகள் சீனாவை ஒதுக்கி பொருளாதார நஷ்ட ஈடு கேட்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X