அரசியல் செய்தி

தமிழ்நாடு

புகழேந்தியை நீக்கிய விவகாரம்; பன்னீர்செல்வம், பழனிசாமி நேரில் ஆஜராக உத்தரவு

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தியை கட்சியை விட்டு நீக்கிய விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி சேர்ந்து பா.ம.க., போட்டியிட்டு தோல்வியடைந்தது. சட்டசபை தேர்தலில், 23 இடங்களில்
Panneerselvam, Palanisamy, Pugazhendhi, Special Court, EPS, OPS, பன்னீர்செல்வம், பழனிசாமி, புகழேந்தி, சிறப்பு நீதிமன்றம், இபிஎஸ், ஓபிஸ்

சென்னை: அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தியை கட்சியை விட்டு நீக்கிய விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி சேர்ந்து பா.ம.க., போட்டியிட்டு தோல்வியடைந்தது. சட்டசபை தேர்தலில், 23 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., 5 இடங்களில் மட்டுமே வென்றது. இந்த தோல்விக்கு அதிமுக தான் காரணம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி, ‛ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமக.,வின் வாடிக்கையாக உள்ளது,' என விமர்சித்தார்.


latest tamil news


புகழேந்தி பேட்டி கொடுத்த மறுநாள் அதிமுக.,வில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் புகழேந்தி நீக்கப்படுவதாக பன்னீர்செல்வம், பழனிசாமி அறிவித்தனர். அந்த அறிவிப்பில், கட்சி விரோத செயல்களில் ஈடுட்டதால் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து தனது பெயருக்குக் கலங்கம் விளைவிப்பதாகவும், அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாகவும் கூறி எம்.பி.,எம்.எல்.ஏ.,க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news


இந்த வழக்கு நீதிபதி அலிசியா முன்பு இன்று (ஆகஸ்ட் 03) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் நபராக பழனிசாமி, இரண்டாவது நபராக பன்னீர்செல்வம் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி, இருவருக்கும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 24-ம் தேதி பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகிய இருவரும் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Bala - London,யுனைடெட் கிங்டம்
04-ஆக-202108:52:09 IST Report Abuse
S Bala நீதிமன்றம் என்று பெயர் வைத்துவிட்டாலே எதிலும் தலையிடலாம் என்ற நிலை மாற வேண்டும். உள்கட்சி விஷயங்களில் தலையிட கூடாது என்பது கூட தெரியாமல் .............
Rate this:
Cancel
Muthiah.G - Tamil Nadu,இந்தியா
04-ஆக-202108:10:38 IST Report Abuse
Muthiah.G புகழேந்தி அம்மா பெயர் சொல்லி அதன் மூலம் புகழ் பெற்றவர்.. புகழேந்தி அதிமுகவில் இருந்து அமமுக விற்கு சென்று பின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி யை சேலத்தில் நேரில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். .புகழேந்தி யை நீக்க முழு அதிகாரம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மறறும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளது.
Rate this:
Cancel
இடியாப்ப நாயகர் - San Francisco,யூ.எஸ்.ஏ
04-ஆக-202106:59:26 IST Report Abuse
இடியாப்ப நாயகர் மூணு பேரும் சசிகலாவின் ஆட்கள் தெரியுமோ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X