தலையின் பின்புறம் 'பேண்டேஜ்' : கிம்ஜோங் உன்னிற்கு என்ன ஆச்சு ?

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சியோல்: தலையின் பின் பகுதியில் பேண்டேஜ் உடன் வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படம் வெளியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், 37 உடல்நிலை குறித்த மர்மம் நீடித்து வருகிறது. அவரை பற்றிய தகவல்கள் யூகமாகவே இருந்து வருகின்றன. கடந்த ஜூன் மாதம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போது உடல் மெலிந்து 20 கிலோ வரை எடை குறைந்தார்
  Kim Jong Un's Bandage And Spots On Head  தலை  பின்புறம் 'பேண்டேஜ்' : கிம்ஜோங் உன்,என்ன ஆச்சு ?  Add To Health Mysteries

சியோல்: தலையின் பின் பகுதியில் பேண்டேஜ் உடன் வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படம் வெளியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், 37 உடல்நிலை குறித்த மர்மம் நீடித்து வருகிறது. அவரை பற்றிய தகவல்கள் யூகமாகவே இருந்து வருகின்றன. கடந்த ஜூன் மாதம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போது உடல் மெலிந்து 20 கிலோ வரை எடை குறைந்தார் என புகைபடங்களுடன் செய்திகள் வெளியாயின.


latest tamil news



இந்நிலையில் இன்று (ஆக.03) கிம்ஜோங் உன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் ஜூலை மாத இறுதியில் எடுக்கப்பட்டதாகவும், வடகொரிய ராணுவ உயரதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும். அப்போது , கிம் ஜாங்-உன் தலையின் பின்புறம் பேண்ட்-எய்ட் ஒட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அவருக்கு உடல் ரீதியாக பிரச்சினைகள் இல்லை. நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், சில நாட்களுக்குப் பின் பேண்ட்-எய்ட் நீக்கப்பட்டது என வடகொரிய உளவுத்துறை தெரிவித்ததாக கொரிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஆக-202115:13:21 IST Report Abuse
ருத்ரா ஏழாம் அறிவு போல் ஏதோ ஒரு வித்யாசம் தெரிகிறது.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஆக-202107:08:27 IST Report Abuse
Pugazh V உள்ளே எதாவது எலக்ட்ரானிக் சிப் வெச்சிருக்காரோ?
Rate this:
Cancel
Gsanky - Bangalore,இந்தியா
04-ஆக-202104:54:38 IST Report Abuse
Gsanky கிம் ஜோங் உன் இறந்து ரொம்ப நாள் ஆச்சு.. நீங்கள் பார்ப்பது அவர் உருவம் போர்த்திய ரோபோ. அதன் சார்ஜிங் பாயிண்டை பிளாஸ்டர் போட்டு மறைத்திருக்கிறார்கள்.. (அம்மா இட்லி சாப்பிட்டதையே நம்பிட்டோம். இதை நம்ப மாட்டோமா? )
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X