பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,908 பேருக்கு கோவிட்: 2,047 பேர் நலம்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,908 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 29 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,047 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் மட்டும் 1, 45,585 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1905 பேரும் வெளிநாடு சென்று வந்தவர்கள் 3 பேரையும்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,908 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 29 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,047 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் மட்டும் 1, 45,585 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1905 பேரும் வெளிநாடு சென்று வந்தவர்கள் 3 பேரையும் சேர்த்து 1,908 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,65,452 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,78,95,700 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,104 பேர் ஆண்கள், 804 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,98,681 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,66,733 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,047 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,11,076 ஆக உயர்ந்துள்ளது.

29 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 6 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 23 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,159 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
04-ஆக-202109:22:07 IST Report Abuse
duruvasar ஒரு சிறு கருமேகத்தால் விடியலை தடுக்க முடியாது. மேகம் மறைக்காத இடத்தை தவிர மற்ற இடங்களில் விடியல் வெளிச்சம் கண்ணை கூசவைக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இந்த நற்செய்தியை ஞாயிறுமட்டுமில்லாது மற்ற நாட்களிலும் பரப்ப செய்யவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X