சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

தவறான தகவல் தராதீர்கள்!

Added : ஆக 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தவறான தகவல் தராதீர்கள்!சுப.கண்ணன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இது உங்கள் இடம் பகுதியில், 'எம்.ஜி.ஆர்., கொடுத்த இடம்' என்ற தலைப்பில் டி.ஈஸ்வரன், உண்மைக்கு புறம்பான சில தகவல்களைத் தந்து, அறுபடை வீடு கோவிலை அரசுடமை ஆக்க முயற்சி செய்கிறார்.கோவிலைக் கட்டியவர்களின் ஆன்மிக தொண்டுகள் மற்றும் செய்த பொருட் செலவு பற்றி இவருக்குத் தெரிந்திருக்க


தவறான தகவல் தராதீர்கள்!சுப.கண்ணன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இது உங்கள் இடம் பகுதியில், 'எம்.ஜி.ஆர்., கொடுத்த இடம்' என்ற தலைப்பில் டி.ஈஸ்வரன், உண்மைக்கு புறம்பான சில தகவல்களைத் தந்து, அறுபடை வீடு கோவிலை அரசுடமை ஆக்க முயற்சி செய்கிறார்.கோவிலைக் கட்டியவர்களின் ஆன்மிக தொண்டுகள் மற்றும் செய்த பொருட் செலவு பற்றி இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த கோவிலில் எந்த உண்டியலும் இல்லை. முழுவதும் கற்களால், பெரும் பொருட் செலவில் தனியாரால் கட்டப்பட்ட கோவில் அது. ஆன்மிக அன்பர்கள் அனைவரும் ஹிந்து கோவில்களில் இருக்கும், சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்புகள் மற்றும் கொள்ளைகளை தடுக்க முயற்சி செய்யும் போது, இது போன்ற முழுத்
தகவலும் தெரியாமல், அரசுடமை ஆக்கும் கோரிக்கைகள் கண்டிக்கத்தக்கது.ஹிந்து அறநிலையத்துறை சட்டம் மற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை, ஈஸ்வரன் படிப்பது
நல்லது. மதச்சார்பற்ற அரசு, ஆன்மிக விஷயங்களில் தலையிட முடியாது. இப்போது இருக்கும் ஹிந்து அறநிலையத் துறை ஒரு கண்காணிப்பு அமைப்பாக மட்டுமே இருக்க முடியும். சட்டப்படி இருக்க வேண்டிய அறங்காவலர்கள், 99 சதவீத கோவில்களில் இல்லை. ஈஸ்வரன் இதுபற்றி, அமைச்சரிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்!


நீதித்துறைக்கே பாதுகாப்பு இல்லையா?வி.ஹெச்.கே.ஹரிஹரன் திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்நாட்டில் நீதிபதிக்கே இந்த கதியா என நெஞ்சம் பதைக்கிறது.நாள் முழுதும் நீதிமன்றம், வழக்கறிஞர்களின் வாதங்கள், வீட்டுக்கு வந்த பின் வழக்கு தொடர்பான ஆவணங்களை படித்தல், தீர்ப்பு எழுதுதல் என நீதிபதிகளின் பணி மிகவும் சிரமம் வாய்ந்தது.முக்கிய வழக்குகளில் நேர்மையாக செயல்படும் நீதிபதிகளுக்கு விடுக்கப்படும் மிரட்டல்களை இரும்புக்கரத்துடன் ஒடுக்க வேண்டும்.ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் மாவட்ட மற்றும் கூடுதல் நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். இவர், ஜூலை 28ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி சென்ற போது, ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்டார்.விபத்து என தோன்றிய இந்த சம்பவம், 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்த பின் தான்திட்டமிட்ட கொலை என தெரிந்தது. ஆனாலும் போலீசார், இதை கொலை வழக்காக மாற்றுவதற்கு தாமதம் செய்துள்ளனர். ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி ரஞ்சன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி.ரமணா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்த பின் தான் போலீசார், உத்தம் ஆனந்த் மரணத்தை கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.உச்ச நீதிமன்றமே இந்த படுகொலை சம்பவத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.முக்கிய குற்றவாளிகள் சிக்குவரா? அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்குமா என்பது தெரியவில்லை.சில நாட்களுக்கு முன், உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், 'மாவட்ட நீதிபதிகள் பணிசெய் யும் சூழ்நிலை உகந்ததாக இல்லை' என கவலை தெரிவித்தார். அடுத்த சில நாட்களிலேயே நீதிபதி உத்தம் ஆனந்த் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.நீதிபதி உத்தம் ஆனந்த், பரபரப்பான இரண்டு கொலை வழக்குகள் மற்றும் நிலக்கரி கடத்தல் வழக்கை விசாரித்து வந்தார். எனவே, அவ்வழக்கில் சம்பந்தப்பட்டோருக்கும், நீதிபதி படுகொலைக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது.எம்.எல்.ஏ., மீதான கொலை வழக்கை விசாரிக்கும் மத்திய பிரதேச நீதிபதி ஒருவரும், சமீபத்தில் மிரட்டப்பட்டார்.நீதித்துறை மீது நேரடி தாக்குதல் நடப்பது, நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. நீதித்துறைக்கே பாதுகாப்பு இல்லாமல் போனால், தேசம் நாசமாகும்.


சட்டத்திற்கு உயிர் கொடுங்கள்!எல்.மூர்த்தி, ஊட்டி, நீலகிரி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, 2005ல் தகவல் அறியும் உரிமை சட்டம் பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்டது.அரசு நிர்வாகத்தின் வெளிப்படை தன்மையை மக்கள் அறிந்து கொள்வதற்காகவும், லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்காகவும்இச்சட்டம் உருவாக்கப்பட்டது.இச்சட்டத்தின் படி தகவல் கேட்பவருக்கு நிர்வாகத்தின் பொதுத்தகவல் அலுவலர், 30 நாட்களுக்குள் எழுத்து மூலமாக பதில் தர வேண்டும்.பதில் தர மறுத்தாலோ, தவறான தகவல்களை அளித்தாலோ அதை எதிர்த்து, அதேஅலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால், தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம்.இச்சட்டத்தின்படி தகவல்கள் வழங்க மறுக்கும் அதிகாரிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் அதிகாரம், மாநில தகவல் ஆணையத்திற்கு உள்ளது.இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஊழல் செய்யும் அதிகாரிகளிடம் பயம் இருந்தது; குற்றங்கள் குறைய ஆரம்பித்தன.ஆளுங்கட்சியினரின் அரசியலால், தகவல் அறியும் உரிமை சட்டம் மெல்ல நீர்த்து போக துவங்கியுள்ளது. இச்சட்டத்தின் மீது அரசு அதிகாரிகளிடம் இருந்த அச்சம் படிப்படியாக குறைய துவங்கியுள்ளது.இச்சட்டம் குறித்து மக்களிடமும் போதிய விழிப்புணர்வு இல்லை. தகவல் கேட்டு அனுப்பும் மனுக்களை, அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.ஆணையத்திற்கு அனுப்பும் மேல்முறையீட்டு மனுக்களும் விசாரிக்கப்படாமல் நான்கு ஆண்டுகள் வரை கிடப்பில் போடப்படுகின்றன.மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு, தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டது. அதை, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, அச்சட்டத்தில் திருத்தம் செய்து குறைத்து
விட்டது. இதனால், அந்த சட்டமே இன்று செயலிழந்து கிடக்கிறது.இதனால் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளிடம் இருந்த பய உணர்வு முற்றிலும் குறைந்து விட்டது.
வலுவிழந்த தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு மீண்டும் உயிர் அளிக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
04-ஆக-202120:34:27 IST Report Abuse
Darmavan நீதிபதிகளின் பாதுகாப்பின்மைக்கு காரணம் நீதி மன்றங்களின் குற்றவாளியின் மீதான பரிவே. மனித உரிமை குற்றவாளிகளுக்கு,தீவிரவாதிகளுக்கு நிராகரிக்கப்படவேண்டும்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-ஆக-202106:02:27 IST Report Abuse
D.Ambujavalli நமக்கே தெரியுமே, பிளேசன்ட் ஹோட்டல் வழக்கில் நீதி வழங்கிய சீனிவாசன் குடும்பத்திற்கு தண்ணீர், மின்சாரம் தடை செய்து ஆடிய ஆட்டம் கொஞ்சமா? தருமபுரி பஸ் எரிப்பு, அவர்கள் மறந்தாலும் அந்த மாணவியர்களின் குடும்பங்கள் மறக்காதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X