சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஆக 03, 2021
Share
Advertisement
'கூவம் இப்போ நாறுதே... அதை சரி செய்ய ஒத்துழைத்து, அப்புறமா ஆதிகுடி வரலாற்றை மணக்க மணக்க சொல்லலாமே...' என சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அரசு இடையே எந்த மாறுபாடும் இல்லை. ஆதிகுடியை தமிழகத்தின் தலைநகரில் இருந்து அப்புறப்படுத்துவதில் இரு கட்சிகளும் குறியாக உள்ளன. கூவம் நதிக்கரையில் தான் எங்களது

பேச்சு, பேட்டி, அறிக்கை

'கூவம் இப்போ நாறுதே... அதை சரி செய்ய ஒத்துழைத்து, அப்புறமா ஆதிகுடி வரலாற்றை மணக்க மணக்க சொல்லலாமே...' என சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அரசு இடையே எந்த மாறுபாடும் இல்லை. ஆதிகுடியை தமிழகத்தின் தலைநகரில் இருந்து அப்புறப்படுத்துவதில் இரு கட்சிகளும் குறியாக உள்ளன. கூவம் நதிக்கரையில் தான் எங்களது ஆதிகுடி இருக்கிறது.


'எதையும் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்பதே சரி...' என கூறத் தோன்றும் வகையில், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி பேச்சு:
உலகில் முதல் மனிதன் தோன்றிய இடம் லெமூரியா கண்டம். இது தான், குமரி கண்டமாக இருந்தது. முதல் தமிழன் தோன்றிய இடம் இந்த குமரிக் கண்டம். இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. அதற்கு ஆணித்தரமான ஆதாரங்களும் உள்ளன.


'நீங்க கூப்பிடுவதை பார்த்தால், 'நானும் ரவுடி தான்' காமெடி தான் நினைவுக்கு வருகிறது...' என சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் பேட்டி:
தி.மு.க., ஆட்சியின் குறைகளை நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார். எந்த தி.மு.க., தலைவர்கள் தயாராக உள்ளனர். பொருளாதாரம் குறித்து தமிழக நிதி அமைச்சர் என்னுடன் விவாதிக்க தயாரா?


'அரசு பள்ளி ஆசிரியர்கள் எந்த வேலையும் செய்யாமல், ஒன்றரை ஆண்டுகளாக சம்பளம் வாங்குறாங்க என எல்லாரும் கொதிக்கிறாங்க என்பதால் இப்படி சொல்லுறாரோ...' என நினைக்கத் தோன்றும் வகையில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் மயில் பேட்டி:
கொரோனாவால் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடியதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைந்து கல்வி புகட்ட வேண்டும் என்பதில், ஆசிரியர்கள் ஆர்வமாக உள்ளனர்.


'முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி போல தெரியுதே...' என கேட்கத் தோன்றும் வகையில், கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் பேட்டி:
கேரளாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகவில்லை. அவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதை தான், 'ஐ.சி.எம்.ஆர்.செரோ' ஆய்வு காட்டுகிறது. இதன் பொருள், கேரள அரசின் பாதுகாப்பு நடவடிக்கை சரியான திசையில் செல்கிறது என்பதேயாகும்.



'ஆதார், பான், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம்... என நீளும் இந்த பட்டியலில் தடுப்பூசி சான்றிதழுமா... முடியலை...' என நொந்து கொள்ளும் வகையில், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன் பேச்சு:
தடுப்பூசி சான்றிதழ், கல்வி, அரசு சலுகை போன்ற பல நிலைகளில் ஆவணமாக கருதப்படலாம். எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X