சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அமைச்சரை தாண்டி அதிகாரம் செய்யும் டிரைவர்!

Added : ஆக 03, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
அமைச்சரை தாண்டி அதிகாரம் செய்யும் டிரைவர்!''ஆட்சி மாறினாலும், காட்சிகள் மட்டும் மாறவே இல்லை ஓய்...'' என, அலுத்தபடியே பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.நாயர் தந்த காபியை பருகியபடியே, ''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''பிரதமரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்துல, சிவகங்கை மாவட்டத்துல, 175 கோடி ரூபாய்க்கு அ.தி.மு.க., ஆட்சியில டெண்டர்

 டீ கடை பெஞ்ச்


அமைச்சரை தாண்டி அதிகாரம் செய்யும் டிரைவர்!


''ஆட்சி மாறினாலும், காட்சிகள் மட்டும் மாறவே இல்லை ஓய்...'' என, அலுத்தபடியே பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.நாயர் தந்த காபியை பருகியபடியே, ''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''பிரதமரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்துல, சிவகங்கை மாவட்டத்துல, 175 கோடி ரூபாய்க்கு அ.தி.மு.க., ஆட்சியில டெண்டர் விட்டா... அப்பவே அதிகாரிகள், அமைச்சர்களுக்கு 15 சதவீதம் கமிஷனை கான்ட்ராக்டர்கள் குடுத்துட்டா ஓய்...

''இந்த பணிகள் முடிஞ்சு நாலு மாசமாகி டுத்து... இப்ப, ஊரக வளர்ச்சி துறை சார்புல 'பில்' செட்டில் பண்ண, 'அதிகாரிகளுக்கு 5 சதவீதம், அரசியல் பிரமுகர்களுக்கு 10 சதவீதம் கமிஷன் தந்தா தான் பணம் வழங்க முடியும்'னு கறார் காட்டறா...

''ஒரு வேலைக்கு, 30 சதவீதம் கமிஷன் கொடுத்துட்டு, நாங்க தலையில துண்டை போட்டுக்கறதான்னு, கான்ட்ராக்டர்கள் பாவம், புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''இந்த வசூல் கதையையும் கேளுங்க வே...'' என, களத்தில் குதித்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சேலம் மாவட்டத்துல 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இருக்கு... இதுல, 1,200 ஊழியர்கள் வேலை பார்க்காவ வே...

''இதுல, தி.மு.க., சார்ந்த தொழிற்சங்கத்தினர், தினமும் 3 லட்சம் ரூபாய்க்கு மேல விற்பனை ஆகுற, 'ஏ' வகுப்பு கடைகளுக்கு போக ஆர்வமா இருக்காவ... பாட்டிலுக்கு 10, 20ன்னு கூடுதல் விலைக்கு வித்தா, தினமும் ஆயிரக்கணக்குல கல்லா கட்டலாமுல்லா... அதுக்கு தான் ஆலாய்ப் பறக்காவ வே...

''சேலத்துல இந்த மாதிரி 'ஏ' வகுப்பு கடைகள் 50க்கும் மேல இருக்காம்... அங்க எல்லாம் எங்க சங்கத்து ஆட்களுக்கு 'டிரான்ஸ்பர்' போடுங்கன்னு, டாஸ்மாக் அதிகாரிகளிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை வச்சிருக்காவ வே...

''ஆனா, இதுல நிறைய வசூல் வேட்டை நடக்குதுன்னு, மற்ற தொழிற்சங்கத்தினர் புகார் கிளப்ப, இப்ப இடமாறுதலை டாஸ்மாக் அதிகாரிகள் தள்ளிவச்சுட்டாவ... இதனால, ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர் ஏமாற்றத்துல இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''அமைச்சரை விட, அவரது டிரைவரின் அதிகாரம் தான் கொடி கட்டி பறக்குது பா...'' என்றார் அன்வர்பாய்.

''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''அதை எல்லாம் கேட்காதீங்க... சென்னைக்கு பக்கத்துல இருக்கிற மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரின் கார் டிரைவர், நிழல் அமைச்சராகவே செயல்படுறாரு... டிரைவர் மனசு வச்சா தான், கட்சியினரே அமைச்சரை பார்க்க முடியுமாம் பா...

''அது மட்டும் இல்லை... மாவட்ட, ஒன்றிய அளவுல இருக்கிற கட்சி நிர்வாகிகளிடம் சிண்டு முடிச்சு, கோஷ்டிப்பூசலை உருவாக்கி விடுறாரு... இதனால, கட்சி நிர்வாகிகள் கடுப்புல இருக்காங்க... 'அமைச்சர், டிரைவரை கொஞ்சம் அடக்கி வச்சா நல்லது'ன்னு புலம்புறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.அரட்டை முடிந்து பெரியவர்கள் கிளம்ப, எதிரே வந்தவரை நிறுத்திய குப்பண்ணா, ''அன்பரசன், விஜி ஆத்துக்கு நேத்து போயிருந்தேளே... என்ன விசேஷம்...'' என நின்று வம்பளக்க, மற்றவர்கள் இடத்தை காலி செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
04-ஆக-202120:40:36 IST Report Abuse
Anantharaman Srinivasan சென்ற அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிரைவர் I T ரெய்டு போது கருப்பு பண லிஸ்டை தூக்கிண்டு ஓடலையா? அமைச்சருக்கு PA டிரைவரும் வேலைகாரனும் தான் கை ஆள்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
04-ஆக-202110:21:38 IST Report Abuse
duruvasar அமைச்சரையெல்லாம் எந்த கொம்பும் தாண்டமுடியாது. பெரிய அன்புக்கு உதவியாக இருப்பவர் சிற்றன்பாகவாவது இருப்பது இயல்புதான்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-ஆக-202105:55:50 IST Report Abuse
D.Ambujavalli யார் கண்டது? அமைச்சரின் சில பல நடவடிக்கைகளுக்கு உள்கையாக இருக்கலாம் அதனால் அவரை அடக்க இயலாமல், அமைச்சரே கூட இவருக்கு பவர் கொடுத்திருக்கலாம் இதெல்லாம் சகஜம்தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X