ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா 2வது அலையின்போது சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக அவர்களது குடும்ப உறுப்பினர், நண்பர்கள் என நீண்ட வரிசையில், அதிகாலையில் இருந்து இரவு வரை ரெம்டெசிவர் மருந்திற்காக காத்து கிடந்தனர்.தற்போது ரெம்டேசிவிர் மருந்தின் உற்பத்தி கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 1 கோடியே 22 லட்சம் மருந்து

புதுடில்லி: கொரோனா 2வது அலையின்போது சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக அவர்களது குடும்ப உறுப்பினர், நண்பர்கள் என நீண்ட வரிசையில், அதிகாலையில் இருந்து இரவு வரை ரெம்டெசிவர் மருந்திற்காக காத்து கிடந்தனர்.



latest tamil news




தற்போது ரெம்டேசிவிர் மருந்தின் உற்பத்தி கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 1 கோடியே 22 லட்சம் மருந்து குப்பிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


62 உற்பத்தி மையங்களுக்கு அனுமதி


கடந்த 2021, ஏப்ரல் மே மாதங்களில், கொரோனாவால் பாதிப்படைந்த ஏராளமான நோயாளிகளுக்கு மருத்துவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்திருந்தனர். அதன்காரணமாக இம்மருந்தின் தேவை திடிரென அதிகரித்தது. ஆனால், இம்மருந்தின் இருப்பு குறைவாக இருந்த காரணத்தினால், உற்பத்தியை அதிகரிப்பதற்காக 40 புதிய உற்பத்தி மையங்களுக்கு, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு விரைந்து உரிமம் வழங்கியது. தற்போது வரை 62 ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தோராயமாக 29லட்சம் மருந்து குப்பிகளை வழங்கியுள்ளது. தற்போது இம்மருந்தின் தேவையை விட உற்பத்தி அதிகமாகியுள்ளது. எதிர்வரும் கொரோனா அலையிலிருந்து தற்காத்துகொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மருந்துகளை எவ்வாறு பகிர்ந்தளிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
03-ஆக-202123:58:57 IST Report Abuse
Priyan Vadanad யாருக்காக இந்த ரெம்டசிவர்? யார் பணம் சம்பாதிக்க? கீழ்நிலை மக்களுக்கு இவர்மேக்ட்டின் சிறப்பானது. இவர்மேக்டின் இதைவிட சிறப்பாக செயல்படும் என்று இந்திய மருத்துவர்களே கண்டுபிடித்து ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
03-ஆக-202121:39:00 IST Report Abuse
Visu Iyer ரெம்டேசிவேர் தேவையில்லை என்று முன்பு சொன்னார்கள்.. இப்போ அதிகமாக தயாரிப்பதாக சொல்றாங்க... அது சரி.. எழுபது வருட ஆரோக்கியமான இந்தியாவில்....தேவையில்லாததை செய்வது தானே சிலருடைய வேலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X