பொது செய்தி

தமிழ்நாடு

மின் கோபுர வழித்தடங்களை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவு

Added : ஆக 03, 2021
Share
Advertisement
சென்னை:கடலோர மாவட்டங்களில், புயலை எதிர்கொள்ளும் வகையில், மின் கோபுர வழித்தடங்களை பலப்படுத்துமாறு, தமிழக மின் வாரியத்திற்கு, மத்திய மின் துறை உத்தரவிட்டு உள்ளது.தமிழக மின் வாரியம், அனல், நீர் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தரையில் இருந்து பல 100 அடி உயரம் உள்ள மின் கோபுர வழித்தடம் வாயிலாக, துணை மின் நிலையங்களுக்கு எடுத்து செல்கிறது.அங்கிருந்து,

சென்னை:கடலோர மாவட்டங்களில், புயலை எதிர்கொள்ளும் வகையில், மின் கோபுர வழித்தடங்களை பலப்படுத்துமாறு, தமிழக மின் வாரியத்திற்கு, மத்திய மின் துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழக மின் வாரியம், அனல், நீர் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தரையில் இருந்து பல 100 அடி உயரம் உள்ள மின் கோபுர வழித்தடம் வாயிலாக, துணை மின் நிலையங்களுக்கு எடுத்து செல்கிறது.அங்கிருந்து, மின்சாரத்தின் உயரழுத்தத்தை குறைத்து, மின் வினியோக சாதனங்கள் உதவியுடன் வினியோகம் செய்யப்படுகிறது.

புயலின் போது, மின் கோபுரங்கள் சாய்ந்து, மின் கம்பி அறுந்து விழுவ தால், பல பகுதிகளுக்கு மின்சாரத்தை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, மின் வினியோகம் பாதிக்கிறது. சென்னையில், 2016ல் வீசிய 'வர்தா' புயலின் போது, பல்வேறு பகுதி களில் இருந்து, சென்னைக்கு மின்சாரம் எடுத்து வரப்படும் 54 மின் கோபுரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பல நாட்கள், சென்னையின் மின் வினியோகம் முடங்கியது.

இதேபோல், 2017ல் கன்னியாகுமரியில் வீசிய ஒக்கி; 2018ல் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வீசிய கஜா புயல்களின் போது, பல மின் கோபுரங்களும்; 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் விழுந்ததால், பல மாவட்டங்களில் மின்வினியோகம் பாதித்தது.வரும் மழை காலங்களில், மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில், அக்., மாதம், வட கிழக்கு பருவமழை சீசன் துவங்குகிறது.இந்நிலையில், கடலோர மாவட்டங்களில், புயலை எதிர்கொள்ளும் வகையில், மின் கோபுர வழித்தடங்களை பலப்படுத்துமாறு, தமிழகம் உட்பட அனைத்து மாநில மின் வாரியங்களுக்கும், மத்திய மின் துறை உத்தரவிட்டுள்ளது.இந்த தகவல், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வாயிலாக, மின் வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மின் கோபுரங்களை கண்காணித்து, அடித்தள பகுதிகள் சேதமடைந்திருந்தால், சிமென்ட் கலவை போட்டு சீரமைப்பது, தாழ்வாக தொங்கும் கம்பியை உயரத்திற்கு இழுத்து கட்டுவது உள்ளிட்ட பணிகளை, மின் வாரியம் மேற்கொள்ள உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X