கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் கொடுமை இருவருக்கு இரட்டை ஆயுள்

Added : ஆக 03, 2021
Share
Advertisement
சென்னை:சிறுமியை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.சென்னை, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த வர்கள், கிருஷ்ணவேணி, 39; இளங்கோவன், 37. இவர்கள் இருவரும், 18 வயதுக்கு கீழ் உள்ள ஒரு

சென்னை:சிறுமியை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த வர்கள், கிருஷ்ணவேணி, 39; இளங்கோவன், 37. இவர்கள் இருவரும், 18 வயதுக்கு கீழ் உள்ள ஒரு சிறுமியை கடத்தி, வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.இதையடுத்து, அந்த சிறுமியை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நவாஸ் மற்றும் தங்கசாலை பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் ஆகியோரிடம் விற்றுள்ளனர்.

அவர்கள் இருவரும், அந்த சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இது தொடர்பாக, கடத்தல் தடுப்புப் பிரிவு சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்து, நான்கு பேரையும் கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது.

பின், குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணவேணி, இளங்கோவனுக்கு தலா, இரட்டை ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும்; நவாஸ் மற்றும் ஸ்டாலினுக்கு, தலா, ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 5,000 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X